Thulam Rasi Thirumana Valkai
வணக்கம் ஆன்மிக நண்பர்களே..! இன்றைய பதிவில் ஏழாவது ராசியான துலாம் ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். திருமணத்தை பற்றி நிறைய ஆசைகள் இருக்கும். அதுமட்டுமில்லாமல் நமக்கு வர போகின்ற துணை எப்படி இருப்பார்கள் என்றெல்லாம் நினைத்து கவலை படுவார்கள். இனிமேல் இந்த மாதிரி எல்லாம் கவலை பட அவசியமில்லை. வாங்க உங்களது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஆன்மிகத்தில் கணிப்பட்டுள்ளது. அதை பற்றி தெரிந்துகொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ துலாம் ராசிகாரர்களின் குணம் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா..?
துலாம் ராசி திருமண வாழ்க்கை:
துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்கள் மீது அன்பும், அக்கறையும் அதிகமாக செலுத்த கூடியவர்கள். இவர்கள் எந்த செயலையும் தைரியமாக செய்ய கூடியவர்கள். மேலும் இவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
துலாம் ராசிக்காரர்கள் மேஷம் ராசிக்காரர்களை திருமணம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மேலும் மேஷம் ராசியில் கேது, சுக்கிரன், அஸ்வினி, பரணி, கார்த்திகை போன்ற நட்சத்திரங்களில் உள்ளவர்களை திருமணம் செய்வது நல்லது.
இவர்கள் திருமணத்திற்கு பிறகு அதிகம் கோபம் உடையவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்கள் பிறந்த வீட்டை பற்றி புகுந்த வீட்டில் பெருமையாக பேசுவார்கள். மற்றவர்கள் இவர்களை பற்றி புகழ்ந்து பேச வேண்டும் என்று நினைப்பார்கள்.
இவர்கள் மிகுந்த அழகு உடையவர்களாக இருப்பார்கள். மேலும் எல்லா விஷயத்திலும் முதலில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
துலாம் ராசிக்காரர்கள் திருமணத்திற்கு பிறகு பேரும், புகழோடும் இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கை துணை புரிந்து நடந்து கொள்வார்கள். நீங்களும் உங்களின் துணையும் யாரிடமும் விட்டு கொடுக்காமல் பேசுவார்கள்.
இவர்களின் வாழ்க்கை துணை உங்களின் தேவை அறிந்து செயல்படுவார்கள். இருவரும் கருத்து வேறுபாடு இல்லாமல் வாழ்க்கையை வாழ்வீர்கள்.
உங்களது வாழ்க்கை துணையின் பெயர்கள் சூ,சே, சோ, ல, லு, லே, லோ, அ, ஆ, இ,ஈ, ச என்ற எழுத்தில் ஆரம்பிக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |