உங்களின் கட்டை விரல் இப்படி உள்ளதா..? அப்படினா நீங்கள் இப்படி தான் இருப்பீர்கள்..!

Advertisement

கட்டை விரல் ரகசியம்

நண்பர்களே வணக்கம் பொதுவாக அனைவருக்கும் தாம் எப்படி பட்டவர்கள் என்று தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கும்.! ஒரு சிலர் சொல்வார்கள் என்ன பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்று சொல்வார்கள்..! என்னதான் அவர்களை பற்றி தெரிந்தாலும் அவரே அவர்களை பற்றி நன்றாகத்தான் சொல்வார்கள். அது எப்படி அவர்களை பற்றி நல்லது கெட்டது அனைத்தும் தெரியும், அப்படியே சொன்னாலும் அது நம்புகிறமாதிரியே இருக்காது. அதனால் தான் அவர்களை பற்றி தெரிந்துகொள்ள கை ரேகை பார்த்து அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று சொல்வார்கள்..!

ஆனால் நாம் இந்த பதிவின் வாயிலாக அவரவர் கையில் இருக்கும் கட்டை விரலை கொண்டு அவர்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள முடியும் வாங்க பார்ப்போம்..!

நேரான கட்டை விரல்: 

கட்டை விரல் பற்றிய தகவல்

இந்த மாதிரியான கட்டை விரல் உங்களுடையது என்றால் நீங்கள் இப்படி இருப்பீர்கள் வாங்க பார்க்கலாம்..! இந்த மாதிரியான கட்டைவிரல் கொண்டவர்கள் மற்றவர்களை இவர்கள் வழியில் செல்ல வேண்டும் என வலியுறுத்துவார்கள். இவர்களிடம் என்ன விஷயம் சொல்லனாலும் அதனை யாருக்கும் சொல்ல மாட்டார்கள். மற்றவர்களுக்கு நம்பகதன்மை கொண்டவராகவும் இருப்பார்கள்.

இவர் மனதில் இவர்களுக்கென்ற மன வலிமையையும் உறுதியையும் இவரே உருவாக்கிக்கொண்டு அதன் வழியில் வழி நடத்திக்கொள்வார்.

இவர் எங்கு சென்றாலும் அங்கு உள்ளவர்கள் அனைவருமே இவரை  பார்த்து ஈர்க்க வைக்கும் வல்லமை இவர்களுக்கு உண்டு.

இவருள் எந்த வேலைகளுக்கு சென்றாலும் அங்கு பெரிய பதவிகளில் வேலை செய்வார்கள். அதேபோல் இவர்களுக்குகென்று தலை பண்பு  இவர்களுக்கு அதிகம் உண்டு.

இவர்கள் வாழ்வில் வெற்றிகளை சாதிக்கும் குணம் கொண்டவர். இவரை தேடி வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கும்.

இவர் ஒரு முடிவு செய்வதற்கு முன் அதில் உள்ள நல்லது கெட்டது என இவரே ஆராய்ந்து அதன் பின்தான் முடிவுகளை எடுப்பார்.

இவர்களின் பிடிவாத குணம் அதிகம் அதேபோல் இவர்களிடம் யாரு சொல்வதையும் கேட்டு வளைந்து கொடுக்க மாட்டார்கள்.

இவர்களுக்கு மற்றவர்கள் நல்ல அறிவுரை சொன்னாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம் இவர்களுக்கு கிடையாது.

இவர்கள் பணத்தை சேமிப்பதில் கவனம் இருக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் பணத்தை செலவு செய்ய மாட்டார்கள். இது தான் நேராக உள்ள கட்டை விரல் ரகசியம்..!

ஆண்களின் தாடியை வைத்து குணம் தெரிந்துகொள்ளலாம் 👉👉 ஆண்களின் தாடியை வைத்து அவர்களின் குணத்தை தெரிந்து கொள்ளலாம் ..!

வளையும் கட்டை விரல்:

வளையும் கட்டை விரல்

இந்த பதிவில் வாயிலாக சொல்ல போகிறது நல்ல வளையும் தன்மை அதிகம் உள்ளவர்கள். உங்கள் கை கட்டை விரல் நன்றாக வளையும் என்றால் கீழ் கொடுக்கப்படும் சில விஷயங்கள் உங்களுக்கு பொருந்தும்.

வளையும் கட்டை விரல் கொண்டவர்கள் எளிதில் மற்றவர்களின் சூழ்நிலைகேற்ப மாற்றிக்கொள்வார்கள்.

பணியிடத்தில் அவர்களுக்கு தகுந்த இடத்தை போல் வளைத்துக்கொடுத்து  அவர்களுக்கான வெற்றியை அடைவார்கள்.

இவர்களின் சுலபமாக பழக்கூடிய தன்மை மற்றவர்களை இவர்கள் பக்கம் இழுத்து இவர்களின் வெற்றிக்கு ஏற்ற வகையில் மாற்றும்.

இவர்கள் மிகவும் வெளிப்படையானவர்கள் அன்பும் அக்கறையும் அதிகம் உள்ளவர்கள். இவர்களிடம் உள்ள ரகசியத்தை பற்றி இவரே மற்றவர்களுக்கு சொல்வார்கள்.

அனைவரிடத்திலும் அன்பும் மரியாதையும் செலுத்துபவராக இருப்பார்கள். இவர்களின் குணமே இவரை ஈர்க்க வைக்கும்.

அதிகமாக நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள் இவர்களே. இவர்கள் மனதில் எப்போதும் புதிய புதிய முயற்சிகளை பற்றி யோசித்து கொண்டுதான் இருக்கும்.

இவர்கள் அவ்வளவு எளிதாக மற்றவர்களிடம் பழக்கமாட்டார்கள். அதேபோல் எந்த விஷயத்தையும் எளிதாக சொல்லமாட்டார்கள்.

அனைவருக்கும் உதவ வேண்டும் என்றும், இரக்ககுணம் கொண்டவராக இருப்பார்கள். இவர்கள் தாராளமான மனம் கொண்டவராக இருப்பார்கள் நல்ல மனம் கொண்டவராகவும் இருப்பார்கள்.

இவர்கள் சிறிய விஷயத்திற்கு கூட எளிதில் உணர்ச்சி வசப்படுபவராக இருப்பார்கள். இவர்களுக்கு எல்லா நேரத்திலும் பண்ணி பற்றி சிந்தித்துக்கொண்டு இருப்பதால் இவர்களுக்கு மனம் அழுத்தம் ஏற்படும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement