எந்த திதியில் என்ன செய்யலாம்..! Tithi Palangal in Tamil..!

Advertisement

திதி பலன்கள்..! Tamil Thithi..!

Thithi in Tamil / திதி பலன்: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ஒவ்வொரு திதிகளுக்கும் என்ன பலன், ஒவ்வொரு திதியிலும் நாம் என்னென்ன சுப காரியங்களை செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தினை குறிப்பதே ஆகும். அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். பவுர்ணமி அன்று சூரியனும் சந்திரனும் நேர் எதிராக 180 டிகிரி தூர அளவில் இருப்பார்கள். திதி (tithi palangal in tamil) என்பது சூரியனிலிருந்து சந்திரன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளார் என்பதை பற்றி விளக்கி கூறுவதே திதியாகும். 

ஒரு திதிக்கு (tamil thithi) பாகையின் கணக்கானது 12 ஆகும். திதி என்ற சொல்லானது பிறகு தேதி என்று மாற்றம் அடைந்தது. அமாவாசை அன்று சேர்ந்திருக்கும் சூரியனும், சந்திரனும் பிரதமை திதி அன்று பிரிவடைந்து மீண்டும் சேர்ந்து இருக்கும் நிலை உருவாக 30 நாட்கள் ஆகின்றன. இந்த 30 நாட்களுமே திதிகளை சேர்ந்ததாகும். திதி வகைகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி போன்ற திதிகள் விசேஷமானவையாகும். தேய்பிறை திதிகளில் துவிதியை, திருதியை, பஞ்சமி போன்ற மூன்று திதிகளும் சுப தின திதியாகும். அந்த வகையில் இப்போது ஒவ்வொரு திதிகளிலும் எந்தெந்த சுப காரியங்களை செய்யலாம் என்று விரிவாக படித்தறியலாம்..!

newஎந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது..?

எந்த திதியில் என்ன செய்யலாம்?

பிரதமை திதி பலன்கள் / Prathamai Tithi 2024:

பிரதமையில் என்ன செய்யலாம்? வளர்பிறை மற்றும் தேய்பிறையில் பிரதமை திதி அன்று வாஸ்து காரியங்கள் அனைத்தும் செய்வதற்கு மற்றும் திருமண சுப காரியம் செய்ய சிறந்த திதி. அக்னி சம்மந்தமான அனைத்து செயல்களிலும் பிரதமை திதியில் பங்கேற்கலாம். மேலும் இந்த திதியில் மத சடங்குகளிலும் கலந்துக்கொள்ளலாம்.

துவிதியை திதி / Thuvithiyai Tithi 2024:

அரசு சம்மந்தமான செயல்களை இந்த துவிதியை திதியில் தொடங்கலாம். மேலும் திருமணம் போன்ற சுப காரியங்களை செய்யலாம். துவிதியை திதியில் ஆடை, அணிகலன்கள் அணியலாம். ஆன்மீக ஈடுபாடான விரதங்களை மேற்கொள்ளலாம். இந்த திதியில் தேவதை பிரதிஷ்டை செய்யலாம். புதிதாக வீடு கட்ட தொடங்க அடிக்கல் நாட்டலாம்.

திருதியை திதி பலன்கள் / Tritiya Tithi 2024:

tamil thithi/ திருதியை திதி பலன்கள்: இந்த திருதியை திதியில், பிறந்த குழந்தைக்கு முதல் முதலாக உணவு ஊட்டி பழக்கலாம். மேலும் இந்த திதியில் இசைகள் கற்றுக்கொள்ளலாம். கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்ய உகந்த திதியானது இந்த திருதியை. திருதியை திதியில் சிற்பம் செதுக்கும் காரியங்களில் ஈடுபடலாம். வீட்டில் சுப காரியங்கள் செய்வதற்கு சிறந்த திதியாக விளங்குகிறது இந்த திருதியை. மேலும் அழகு சம்மந்தமான கலைகளில்  ஈடுபடலாம்.

சதுர்த்தி திதி 2022 / Chaturthi Tithi 2024:

முன் காலத்தில் மன்னர்கள் அனைவரும் போர் படைகளுக்கு சிறந்த நாளாக இந்த சதுர்த்தி திதியை மன்னர்கள் தேர்ந்தெடுப்பார்கள். மேலும் இந்த சதுர்த்தி திதியில் பகைவர்களை வெல்வதற்கு, விஷ சாஸ்திரம், நெருப்பு சம்மந்தமான செயல்களை செய்வதற்கு உகந்த திதியாக இந்த சதுர்த்தி திதி விளங்குகிறது.

பஞ்சமி திதியில் என்ன செய்யலாம்? / Panjami Tithi 2024/ panjami thithi palangal in tamil:

panjami thithi palangal in tamil: பஞ்சமி திதியில் அனைத்து சுப காரியங்களையும் தாராளமாக செய்யலாம். வளைகாப்பு செய்வதற்கு சிறந்த திதியாக பஞ்சமி திதி கூறப்படுகிறது. மருந்துகள் சாப்பிடுவதற்கு உகந்த திதி. நாக தேவதைகள் இந்த பஞ்சமி திதிக்கு அதிதேவதை ஆவார்கள். நாகர் வழிபாட்டிற்கு சிறந்த திதியாக பஞ்சமி திதியை ஆன்மிகம் கூறுகிறது.

சஷ்டி திதி/ Sashti Tithi 2024:

சஷ்டி திதியில் சிற்ப கலை செய்வது, வாஸ்து காரியங்கள் போன்றவற்றில் கலந்துக்கொள்ளலாம். புதிதாக அணிகலன்கள் செய்யலாம், வாகனம் வாங்கலாம். புதிதாக அறிமுகம் ஆனவர்களை தமக்கு நண்பர்களாக்கிக் கொள்ளலாம். புதிதாக ஏதேனும் பதவிகள் வந்தால் அதனை ஏற்றுக்கொண்டு செய்யலாம். சஷ்டி திதிக்கு அதிதேவதை என்று சொல்லக்கூடியவர் கார்த்திகேயன்.

newபெண்கள் ருதுவான பலன்

சப்தமி திதியில் என்ன செய்யலாம்? / Saptami Tithi 2024:

வெளி பயணம் செல்வதற்கு சிறந்தது இந்த சப்தமி திதி. இந்த திதியில் புதிதாக வாகனம் போன்றவற்றை வாங்கலாம். வீடு மற்றும் தொழிலில் வாஸ்து சாஸ்திர பிரச்சனை உள்ளவர்கள் இந்த திதியில் இடமாற்றம் செய்யலாம். திருமணம் செய்வதற்கு உகந்த திதி. மேலும் சங்கீதத்திற்கு தேவையான உபகரணங்கள் வாங்கலாம். புதிதாக உடை, அணிமணிகள் நீங்களே தயாரிக்கலாம்.

அஷ்டமி திதியில் என்ன செய்யலாம்? / Ashtami Tithi 2024:

thithi in tamil: பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இந்த அஷ்டமி திதியில் தளவாடம் பொருள்கள் வாங்கலாம். நடனம் தெரியாதவர்கள் அஷ்டமி திதியில் நடன கலை கற்றுக்கொள்ளலாம். அஷ்டமி திதிக்கு அதிதேவதை ஐந்து முகம் கொண்ட சிவன்.

நவமி திதியில் என்ன செய்யலாம்? / Navami Tithi 2024:

Tithi in Tamil: சத்ரு பயத்தினை போக்கக்கூடியது இந்த நவமி திதி. நவமி திதியானது தீய செயல்களை அழிப்பதற்கு உகந்த திதி. நவமி திதிக்கு அதிதேவதை அம்பிகை.

தசமி திதியில் என்ன செய்யலாம்? / Dashami Tithi 2024:

தசமி திதியில் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் ஈடுபடலாம். மத சடங்குகள் போன்றவற்றை செய்யலாம். தசமி திதியில் ஆன்மீக சம்மந்தமான செயல்கள் அனைத்தையும் செய்யலாம். வெளிப்பயணம் மேற்கொள்ளலாம். மேலும் இந்த திதியில் புதிதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் ஓட்ட தெரியாதவர்கள் இந்த தசமி திதியில் வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ளலாம். அரசு சம்மந்தமான செயல்களில் பங்கேற்கலாம்.

ஏகாதசி பலன்கள்/ Yegathasi Thithi: 

tithi palangal in tamil: ஏகாதசி திதியில் விரதம் போன்றவற்றை எடுக்கலாம். சுப காரியமான திருமணம் செய்யலாம். காயத்திற்கு சிகிச்சை பெற்று வரலாம். மேலும் இந்த திதியில் சிற்ப காரியம், ஆன்மீக வழிபாடுகளில் பங்கேற்கலாம்.

newகுழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்..!

துவாதசி திதி பலன்கள்/ Dwadashi Tithi:

துவாதசி திதியில் மதச்சடங்குகள் போன்றவற்றில் கலந்துக்கொள்ளலாம். துவாதசி திதிக்கு அதிதேவதை விஷ்ணு.

திரயோதசி திதி பலன்/ Trayodashi Tithi:

இந்த திரயோதசி திதியில் சிவன் வழிபாடு செய்வது விசேஷம். வெளிப்பயணம் செய்யலாம். புதிய ஆடை அணியலாம். எதிர்ப்புகள் நீங்கும். ஆன்மீக வழிபாட்டில் கலந்துக்கொள்ளலாம்.

சதுர்த்தசி திதி/ Chaturthi Tithi 2024:

புதிதாக ஆயுதம் போன்றவற்றை செய்யலாம். சதுர்த்தசி திதியில் மந்திரம் கற்றுக்கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை காளி ஆவாள்.

பௌர்ணமி அன்று என்ன செய்யலாம்? / Pournami Tithi 2022:

ஹோம, சிற்ப, சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளலாம். விரதம் போன்றவை இந்த திதியில் எடுக்கலாம். பவுர்ணமி நாளிற்கு பராசக்தி அதிதேவதை.

அமாவாசை திதி பலன்கள்/ Amavasya Tithi 2024:

அமாவாசை திதியில் நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாடுகளை செய்யலாம். இல்லாதவர்களுக்கு தான தர்மம் செய்வதற்கு சிறந்த திதி. மேலும் இந்த திதியில் இயந்திர பணிகளை மேற்கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை (thithi devathai in tamil) சிவன், சக்தி ஆவார்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement