2023 Athistam Zodiac Sign in Tamil
நண்பர்களே வணக்கம்..! புது வருடம் பிறக்க போகிறது. ஒரு சிலருக்கு வாழ்க்கை நன்றாக அமையும் ஒரு சிலருக்கு வாழ்க்கை சிக்கலான வாழ்க்கையாக இருக்கும். எப்போது வாழ்க்கை நன்றாக இருந்தால் சுவாரஸ்யமாகவே இருக்காது. வாழ்க்கை என்றால் ஓரளவு கஷ்ட நஷ்டம் இருந்தால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். இந்த 2023 ஆம் ஆண்டு புது வருடத்தில் சில நல்லதும் சில கெட்டதும் நடக்க போகிறது.
அந்த வகையில் இந்த வருடம் யாருக்கு அதிர்ஷ்டம் கிடைக்க போகிறது என்று பார்ப்போம் வாங்க..!
விருச்சிகம் ராசி:
விருச்சிக ராசிகாரர்களுக்கு இந்த 2023 வருடம் அமோகமான வருடமாக இருக்கும். புதுவருடத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும். வாழ்வில் முன்னேற்றமும் அடைய முடியும். இதுவரை நடந்த நஷ்டம் அனைத்தும் சரிப்படுத்தும் வகையிலும் இந்த வருடம் அமையும். புது வருடத்தில் கிரகங்களில் மாற்றம் பெரியளவில் பற்றாக்குறை இருக்காது. அதேபோல் பொருளாதார ரீதியாகவும் சிறப்பாக இருக்கும்.
சிம்மம் ராசி 2023 எப்படி இருக்கும்:
வாய்ப்புகளை தவறவிட்டு இருப்பீர்கள் ஆனால் இந்த புது வருடம் உங்களுக்கு வாய்ப்புகளை அளிக்கும். அதன் மூலம் முன்னேற்றம் அடைவீர்கள். இந்த வருடம் சுறு சுறுப்பாக இருப்பீர்கள். இந்த ஆண்டு நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியில் தான் முடியும். திருமண முயற்சிகளும் வெற்றியில் அடையும், அதேபோல் நிச்சயம் செய்த திருமணம் பிரச்சனைகள் இல்லாமல் முடியும். திருமணத்தை பற்றி யோசிக்கத்தவர்கள் உங்களின் வாழ்க்கை துணையை சந்திப்பீர்கள்.
துலாம் ராசி:
இந்த வருடம் காதல், வெற்றி, போன்ற அனைத்தும் நடக்கும் ராசியாக துலாம் ராசி உள்ளது. துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார், இவர் காதல், நிதி சார்ந்தவற்றிலிருந்து வெற்றியும் குவிப்பார், இந்த ஆண்டு துலாம் ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் ஆண்டாக உள்ளது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு பகுதியிலும் முன்னேற்றம் காண்பார்கள். புத்தம் புதிய வாய்ப்புகளும் உங்களை தேடி வரும்.
ரிஷப ராசி:
ரிஷப ராசிக்காரர்களே இந்த ஆண்டு அனுகூலமாக விளங்கும், புதிய முயற்சிகள் கூட உங்களுக்கு சாதகமானாக தான் முடியும், 2023 ஆம் ஆண்டு புது வருடத்தில் முதல் கொஞ்ச மாதங்கள் அதிர்ஷ்ட்ட காற்று உங்கள் பக்கம் வீசாது, அதன் பின் வெற்றியை கொஞ்சம் கொஞ்சமாக உணர்வீர்கள். பொருளாதார ரீதியாகவும் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு காதல் வசம் கையில் கிடைக்கும். ஆகவே வெற்றி கையில் இருக்கும் இந்த வருடம்.
மிதுனம் ராசி:
முன்பு தள்ளி போட்ட காரியங்களை இந்த வருடம் செய்ய தொடங்கலாம், ஏனென்றால் அதில் தோல்வி அடைந்து இருப்பீர்கள், அதனை புது வருடத்தில் செய்ய தொடங்கினால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு புது வருடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். திட்டமிட்ட படி செயல்பட்டால் புதுவருடம் அற்புதமான வருடமாக இருக்கும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 2023 ஆம் ஆண்டு அடுத்த சனி பெயர்ச்சி யாருக்கு? சனி பெயர்ச்சி இருந்து விடுபடுபவர் ராசி எது ?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |