அடுத்த 7 நாட்களில் துலாம் ராசிக்கு இது நடந்தே தீரும்

Advertisement

வார ராசி பலன்கள் துலாம்

ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. அதில் 7 வைத்து இடத்தில் இருப்பது தான் துலாம் ராசி. துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான். துலாம் ராசியில் சுவாதி, விசாகம், சித்திரை போன்ற நட்சத்திரங்கள் உள்ளது. நம் வாழ்வில் ஏதவாது ஒரு பிரச்சனை வர போகிறது என்று முன் கூட்டியே தெரிந்திருந்தால் நாம் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்திருக்கிலாம் என்று நினைப்போம். அந்த வகையில் ஜோதிடத்தில் நமக்கு வர கூடிய பிரச்சனைகளை கணித்து வைத்திருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய பதிவில் துலாம் ராசிக்கு அடுத்த 7 நாட்களில் நடக்க கூடிய சில பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

வார ராசி பலன்கள் துலாம்:

 வார ராசி பலன்கள் துலாம்

கும்ப ராசியில் சூரியனும், ரிஷப ராசியில் செவ்வாயும், மகர ராசியில் புதன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் சுக்கிரன், குரு என இரண்டு கிரகங்களும், கும்பம் ராசியில் சனி, மேஷம் ராசியில் ராகு, துலாம் ராசியில் கேது என நவகிரங்களும் உங்களுக்கும் சாதகமாக அமைந்திருக்கிறது. எனவே இந்த கிரங்ககளின் இடப்பெயற்சியால் துலாம் ராசி மற்றும் துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சாதகமாக இருக்குமா என்று தெரிந்து கொளவோம் வாங்க..

துலாம் ராசி சுக்கிரனை அதிபதியாக கொண்டவர்கள். உங்களுக்கு ராசிக்கு 5 ஆம் இடத்தில் சூரியனின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த வாரத்தில் நீங்கள் தொழிலை பரபரப்பாக செய்து முடிப்பீர்கள். தொழிலை ஒரு நிலையான இடத்திற்கு கொண்டு வருவதற்காக ரொம்பவே கஷ்டப்படுவீர்கள். தொழில் நல்ல லாபத்தை கொண்டு வருவதற்காக சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

மார்ச் மாதம் இந்த ராசிக்காரர் தான் தொழில் ரீதியாக அசுர வளர்ச்சி அடைய போகிறார்கள்..! அது எந்த ராசி தெரியுமா..?

 தொழிலிலும் சரி, வாழ்க்கையிலும் சரி அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான படியை எடுத்து வைப்பீர்கள். தொழிலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவார்கள். மேலும் புதிய முதலீடு செய்வீர்கள்.  

திருமண விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். பொறுமையாக இருக்கவும் உங்களுக்கான வாழ்க்கை துணை கிடைப்பார்கள்.

திருமணம் ஆன துலாம் ராசிகளின் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும். நீங்கள் பேசும் வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் எதார்த்தமாக பேசும் வார்த்தைகள் சில நேரங்களில் தவறாக இருக்கும்.

கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு இடையே மூன்றாவது ஆளை சமாதானத்திற்கு கூப்பிடாமல் நீங்களே பார்த்து கொள்வது நல்லது. நினைத்த காரியத்தை நடத்த வேண்டும் என்று நினைத்தால் அது நல்ல காரியமாக இருந்தால் நல்லது நடக்கும். அதுவே கெட்ட காரியமாக இருந்தால் அதனால் வாழ்க்கையில் பிரச்சனையில் ஏற்படும்.

 எதிர்காலத்தை நினைத்து பணத்தை சேமிப்பீர்கள். நீண்ட கால நண்பர்கள் கூட விரோதிகளாக மாறலாம் அதனால் கவனமுடன் பழக வேண்டும். அதிலும் புதிதாக ஒரு நபரிடம் பழகுறீர்கள் என்றால் உங்களுடைய personal விஷயத்தை நண்பர்கள் தான் என்று ஷேர் செய்யாதீர்கள். அதுவே உங்களுக்கு பிரச்சனையாக முடியும்.  

அலுவலங்களில் வேலை செய்பவராக இருந்தால் உங்களில் வேலை திறனில் வளர்ச்சி ஏற்படும். இதனால் உயரதிக்காரர்கள் பாராட்டுவார்கள். சில நபர்களுக்கு சம்பள உயர்வு ஏற்படும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உணவை சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.

துலாம் ராசி திருமண வாழ்க்கை

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement