வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம் | Vastu for House in Tamil

Vastu for House in Tamil

வீடு வாஸ்து பார்ப்பது எப்படி? | Vastu Shastra for Home in Tamil

Vastu for House in Tamil:- பொதுவாக வீடு கட்டும் போது அனைவருமே வாஸ்து என்ற ஒரு விஷயத்தை அவசியம் பார்ப்போம். வீடு கட்ட வாஸ்து சாஸ்திரம் எதற்காக பாக்குறாங்க அப்படினா இயற்கையின் ஐம்பூதங்களான காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் வானம் ஆகியவை சமநிலை பெற்றிருக்கும் இடத்தில் ஒருவர் வீடு கட்டினால் சகல நன்மைகளும் நம்மை தேடிவரும் என்பதற்காக இந்த வாஸ்து சாஸ்திரம் பார்க்கப்படுகிறது. இந்த பஞ்சபூதங்களின் சமநிலையில் ஏதேனும் ஒன்று தவறினால் பிறகு அந்த வீட்டில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டாகும் என்று அனைவரும் நம்புகின்றனர். சரி இந்த பதிவில் வீடு கட்ட பார்க்க வேண்டிய வாஸ்து சாஸ்திரம் என்னென்ன? ஒவ்வொரு திசைக்குரிய வாஸ்து சாஸ்திரம் பலன்கள் பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

வீடு வாஸ்து சாஸ்திரம்:

திசைகளில் கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு என்று நான்கு திசைகள் இருக்கின்றன. அந்த வகையில் ஜோதிடம் ரீதியாக பார்க்கும் போது ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது. எனவே நாம் முதலாவதாக வடக்கு திசையை பற்றி தெரிந்து கொள்வோம்.

வடக்கு வாசல் வீடு வாஸ்து:-

புதன் பகவானுக்கு உரிய திசை வடக்கு. அதேபோல் செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் ஆதிக்கம் செய்யும் திசை வடக்கு. காக்கும் கடவுளான திருமாளுக்கே செல்வங்களை கடனாக கொடுத்தவர் குபேரர் என்று நமக்கு தெரிந்திருக்கும். எனவே இவ்விருவரும் ஆதிக்கம் செய்யும் இந்த வடக்கு திசை பார்த்த வீடு கட்டுபவர்களுக்கு செல்வம் நிலைத்து இருக்கும் அதேபோல் பொருள் சேர்க்கையில் அதிமாக இருக்கும். சரி வடக்கு வாசல் வீடு வாஸ்து பலன்கள் பற்றி அறிவோமா?

வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம் – North Facing House Vastu in Tamil:

தொழில் சிறக்கும் மற்றும் பணம் அதிகரிக்கும்:

சொந்த தொழில் செய்பவர்கள், வியாபாரம் சார்ந்த தொழில் செய்பவர்கள், அதிகம் பணத்தை முதலீடாக போட்டு நிறுவனம் செய்பவர்கள் இது போன்று அனைத்து வகை வேலைகளிலும் எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு வடக்கு பார்த்த வீட்டில் குடியிருந்தால் அமோக நன்மைகள் உண்டாகும். அதேபோல் வடக்கு திசை பார்த்து வீடு இருந்தால் அவர்கள் சம்பாதிக்கும் பணம் அதிகம் செலவாகாது. பணத்தை மிச்சம் செய்து சேமிப்பார்கள்.

கடன் தொல்லை நீங்கும்:-

நீங்கள் மற்றவர்களிடம் கடனாக வாங்கிய பணத்தை மீண்டும் சீக்கிரம் அடைக்க கூடிய அளவிற்கு  தங்களது வருமானம் அதிகரிக்கும். அதேபோல் பணம் தட்டுப்பாடு அவ்வளவாக ஏற்படாது. எனவே தொழில் மற்றும் வியாபாரம் சார்ந்த வேலைகளை செய்பவர்களுக்கு சொந்த வீடு இல்லையென்றாலும் வடக்கு திசை பார்த்த வாடகை வீட்டில் குடியிருந்தாலும் அவர்கள் கூடிய சீக்கிரத்தில் சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

வாஸ்து பொது பலன்:

பொதுவாக அனைத்து ராசிக்காரர்களுக்கும் வடக்கு திசை பார்த்த வீட்டில் வாசல் அமைப்பதும், அத்திசை நோக்கிய சொந்த அல்லது வாடகை வீடுகளில் குடியிருந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

எந்த ராசிக்காரர்களுக்கு வடக்கு திசை அதிர்ஷ்டம் தரும்:

பொதுவாக புதன் பகவானுக்குரிய மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த வடக்கு திசை பார்த்த வீட்டில் குடியிருந்தால் நல்ல அதிர்ஷ்டங்களை தரும். அதேபோல் ஜாதகத்தில் புதன் “6, 8, 12 “ஆகிய இடங்களில் இருக்கும் ஜாதகாரர்களுக்கு இந்த வடக்கு திசை பார்த்த வீட்டில் குடியிருப்பது அவ்வளவாக நல்ல பலன்களை கொடுக்காது.

newமனையடி சாஸ்திரம் 2021
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்