Vellikilamai Seiya Kudathavai | வெள்ளிக்கிழமை செய்ய கூடாதவை
வெள்ளிக்கிழமை என்பது தெய்வத்தை வணங்குவதற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்த கிழமையில் தான் பெண்கள் வீட்டில் பூஜை செய்து வழிபடுவார்கள். அப்படிபட்ட வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் வீட்டில் ஒரு தவறை மட்டும் செய்யவே கூடாது. அப்படி அந்த தவறை செய்தால் நீங்கள் என்னதான் பூஜை செய்து மஹாலக்ஷ்மியை வழிபட்டாலும் வீட்டில் மஹாலக்ஷ்மி தங்க மாட்டாள். பெண்கள் கையால் வெள்ளிக்கிழமை அன்று செய்யக்கூடாத அந்த ஒரு தவறு என்னவென்று தான் இன்றைய ஆன்மிக பதிவில் பார்க்கப்போகிறோம்.
வெள்ளிக்கிழமை பெண்கள் எதை செய்யக்கூடாது.?
வெள்ளிக்கிழமை என்பது மஹாலக்ஷ்மிக்கு உகந்த நாள். அந்த மஹாலக்ஷ்மியின் அம்சம் பொருந்தியது தான் கல் உப்பு. இந்த கல் உப்பை நிறைய பேர் திருஷ்டி கழிக்க பயன்படுத்துவார்கள். ஆனால் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் கல் உப்பை வைத்து திருஷ்டி கழிக்க கூடாது.
உங்கள் வீட்டில் செல்வம் பெறுக வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கினால் போதும் |
அதுமட்டுமில்லாமல் சிலருக்கு வெள்ளிக்கிழமை அன்று வீடு துடைக்கும் பழக்கம் இருக்கும். அப்போது தண்ணீரில் கல் உப்பு கலந்து வீடு துடைப்பார்கள். இதை நீங்கள் மற்ற நாட்களில் செய்யலாம். ஆனால் வெள்ளிக்கிழமைகளில் இந்த தவறை செய்து விடாதீர்கள்.
வெள்ளிக்கிழமை மட்டுமில்லாமல் ஞாயிற்று கிழமை அன்றும் இந்த தவறை செய்து விடாதீர்கள். எனவே இந்த தவறை வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் செய்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் மஹாலக்ஷ்மி தங்க மாட்டாள்.
வீட்டில் சின்ன சின்ன பிரச்சனை வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் கல் உப்பை தண்ணீரில் கரைக்க கூடாது.
வெள்ளிக்கிழமை கல் உப்பு வழிபாடு:
வெள்ளிக்கிழமை அன்று சுக்கிரன் ஹோரை நேரத்தில் கடைக்கு சென்று கல் உப்பு வாங்கி வந்து, பூஜை அறையில் வைத்து அதனுடன் மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை செய்து வழிபடுங்கள்.
கேட்ட வரம் தரும் வெள்ளிக்கிழமை ராகு கால பலன்கள். |
அப்படி புது கல் உப்பு வாங்கவில்லை என்றால், வீட்டில் இருக்கும் கல் உப்பில் சிறிதளவு எடுத்து மஞ்சள் துணியில் கட்டி அதை பூஜை அறையில் உள்ள மஹாலக்ஷ்மி பாதத்தில் வைத்து வழிபடுங்கள்.
இவ்வாறு நீங்கள் வழிபடும் போது உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி மஹாலக்ஷ்மி கடாட்சம் நிறைந்து இருக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய