விருச்சிக ராசிக்காரர்களின்  திருமண வாழ்க்கை இப்படிதான் இருக்கும்..!

viruchika rasi thirumana valkai

விருச்சிக ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்..!

அனைவருக்கும் இனிய வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்கபோவது என்னவென்றால் ஒரு ஆன்மிக தகவல் தான். அது என்னவென்றால் விருச்சிக ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றித்தான் பார்க்க போகின்றோம். திருமண வாழ்க்கை என்பது மனித வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அப்படிபட்ட திருமண வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அமையும் அந்த வகையில் இன்றைய பதிவில் விருச்சிக ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இதையும் பாருங்கள் => மீன ராசியின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா.?

விருச்சிக ராசிகார்களின் திருமண வாழ்க்கை:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொதுவாக பூர்விக சொத்துகள் நிறைய இருக்கும். மேலும் இவர்கள் நன்றாக செலவு செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தாய்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பார்க்கமட்டும்தான் அமைதியாக இருப்பார்கள் ஆனால் ஒருவர் மீது இவருக்கு கோபம் வந்துவிட்டால் அவர்களை என்றும் மன்னிக்கவே மாட்டார்கள்.

இவர்கள் தனக்கு கெடுதல் செய்பவரை பழிவாங்கும் குணம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

விருச்சிக ராசிக்காரர்கள் ரிஷபம் ராசிகாரர்களை வாழ்க்கை துணையாக இருப்பது மிகவும் சிறப்பு மிக்கது.  ரிஷப ராசியில்  கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம்  நட்சத்திரங்கள் உள்ளன. இந்த ராசிக்காரர்களையே பெரும்பாலும் விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கை துணையாக அமைவார்கள்.

விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் சாந்த குணமுடையவர்களாகவும், மிகவும் அழகாகவும் மற்றும் இனிய வார்த்தைகளை பேசுபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களின் வாழ்க்கை துணை அல்லது வாழ்க்கை துணையின் தாயாரோ மிகவும் கோபப்படுபவர்களாக இருப்பார்கள்.

ஆனால் விருச்சிக ராசிக்காரர்களின் மாமனார் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவராகவும், யாரையாவது ஒருவரை சார்ந்து வாழுபவராகவும் இருப்பார்.

விருச்சிக ராசிக்காரர்களின் மாமனார் வீட்டிற்கு அருகில் வயல், தோட்டம் மற்றும் பூங்கா இருக்கக்கூடும்.

விருச்சிக ராசிக்காரர்களின் மாமனார் வீடு தெற்கு அல்லது தென் கிழக்கில் இருக்கக்கூடும்.

விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கை துணையின் பெயர் இ,உ ,எ,ஒ,வ,வி,வு,வே,வோ,ரு,ஷ (E,U,A,O,V,R,S) ஆகிய எழுத்துகளில் ஆரம்பிக்கக்கூடும்.

விருச்சிக ராசிக்காரர்களின் திருமணவாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அன்பு செலுத்தி மிகச் சிறந்த காதல் தம்பதியாக வாழ்க்கையை ஆரம்பிப்பீர்கள்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்