காலையில் விழிக்கும் போது முதலில் எதைப் பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

Vizhippu Dharisanam

காலையில் விழிக்கும் போது முதலில் எதைப் பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

Vizhippu Dharisanam – அனைவருக்கும் வணக்கம்.. இன்று நாம் பொதுநலம்.காம் பதிவில் பார்க்க இருப்பது என்னவென்றால் காலையில் எழுந்தவுடன் முதலில் எந்த பொருட்களை பார்த்தால் அதிர்ஷ்டம் ஏற்படும் என்பதை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறிய போகிறோம். இந்த பொருட்களை காலை எழுந்தவுடன் பார்ப்பதன் மூலம் அன்றைய நாளில் நமக்கு அதிர்ஷ்டம் உண்டாவதுடன், அன்றய நாள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

காலையில் எழுந்ததும் பார்க்க வேண்டிய விஷயங்கள்:

நாம் காலை எழுந்தவுடன் உங்கள் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். அல்லது செல்வமகளான மகாலட்சுமியின் புகைப்படத்தை பார்த்தால் அன்றைய நாள் மிகவும் அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். குறிப்பாக அந்த நாள் மங்களகரமான நாளாக இருக்குமாம்.

காலை கண் விழித்ததும் முதன் முதலில் சூரியனை தரிசிப்பது மிகவும் நல்ல விஷயம் ஆகும்.

மேலும் தாமரை பூ, சந்தனம், கடல், மலர்கள், அழகான இயற்கை காட்சிகளை பார்ப்பதன் மூலம் அன்றைய நாள் மிகவும் சிறப்பான நல்லாக இருக்கும். குறிப்பாக அன்றைய நாள் முழுவதும் மிகவும் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள்.

காலையில் தூங்கி எழுந்திரிக்கும்பொழுது கண்ணடியில் உங்கள் முகத்தை காண்பதன் மூலம் மக்களாட்சியின் கடாட்சியம் உங்களுக்கு கிடைக்கும்.

அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுத்து நடைப்பயிற்சி செய்து, சூரியனை தரிசித்தால் அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமாக இருக்கும்.

மேலும் பயிர்கள் விளையும் வயல், சிவலிங்கம், கோயிலின் ராஜகோபுரம், உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் பசுமாடு, நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த பூந்தோட்டம் இது போன்ற விஷயங்களை பார்ப்பதன் மூலமாகவும் அன்றைய பொழுது உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நீங்கள் பிறந்த மாதத்தை சொல்லுங்கள்..! உங்களை பற்றி சொல்கிறேன்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்