What To Do During Solar Eclipse in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சூரிய கிரகணம் அன்று என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க. பொதுவாக நம் அனைவருக்குமே சூரிய கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் வெளியில் செல்ல கூடாது என்றும், கிரகணம் அன்று உணவு சாப்பிட கூடாது என்றும் தெரியும். ஆனால், சூரிய கிரகணம் அன்று என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் சூரிய கிரகணம் அன்று என்ன செய்ய வேண்டும்.? என்பதை விவரித்துள்ளோம்.
சந்திரன் பூமியைச் சுற்றுகின்றது. பூமி சூரியனை சுற்றுகின்றது. அப்படி சுற்றும் போது சூரியன் மற்றும் பூமி இடையே சந்திரன் ஆனது ஒரே நேர்கோட்டில் வரும். அப்படி ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. பொதுவாக சூரிய கிரகணத்தின்போது நாம் சில விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும். சில விஷயங்களை கட்டாயம் செய்ய கூடாது என்று சொல்லப்படுகிறது. எனவே, அந்தவகையில் இப்போது சூரிய கிரகணத்தின்போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
சூரிய கிரகணம் அன்று என்ன செய்ய வேண்டும்.?
- சூரிய கிரகணம் தொடங்கி அது முடியும் வரை உங்கள் குலதெய்வம், பித்ருக்கள், இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ள வேண்டும்.
- கிரகணம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது கடவுளின் பெயரை உச்சரிக்க வேண்டும்.
- காயத்ரி மந்திரம், மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை சொல்ல வேண்டும்.
- கர்ப்பிணிகள் கிரகண நேரத்தில் தேங்காய் வைத்துக் கொள்ள வேண்டும். கிரகணம் முடிந்ததும் அந்த தேங்காயை ஓடும் நதியில் விட வேண்டும்.
- கர்ப்பிணி பெண்கள் கிரகண நேரத்தில் வயிற்றில் காவி பூச வேண்டும். இவ்வாறு செய்தால் சூரிய கிரகணத்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்த எதிர்மறையான விளைவுகளும் ஏற்படாது.
- கிரகண நேரத்தில் துளசி இலைகளை உட்கொள்ளலாம்.
- கிரகணம் முடிந்த பிறகு, குளித்து விட்டு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள்.
- சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு பைனாகுலர், டெலஸ்கோப், பாதுகாப்புக் கண்ணாடிகள் பயன்படுத்துங்கள்.
- கிரகணத்தின்போது, வாகனங்களின் ஹெட்லைட்டுகளை எரியவிட்டுக் கொண்டே வாகனத்தை ஓட்டுங்கள்.
சூரிய கிரகணத்தின் போது இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்..! தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |