இந்த ராசி பெண்களை திருமணம் செய்தால் அவர்களின் வாழ்க்கை அதிர்ஷ்டம் நிறைந்தாக இருக்கும்

which zodiac sign girl is best for marriage in tamil

ஆண்களுக்கு திருமணம்

வணக்கம் ஆன்மிக நண்பர்களே.! திருமணம் என்பது ஆண்களுக்கு, பெண்களுக்கும் இருக்க கூடிய கனவுகளில் இதுவும் ஒன்று. திருமணம் என்று பேச்சு எடுத்தவுடன் முதலில் பார்ப்பது ஜாதக பொருத்தம் தான். இருவருக்கும் பொருத்தம் சரியாக இருந்தால் தான் அடுத்த நிலைக்கே கொண்டு செல்வார்கள். அந்த வகையில் ஆண்களுக்கு சில ராசிகளின் பெண்களை திருமண செய்து கொண்டால் அவர்களின் வாழ்க்கை  அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். அது என்னென்னெ ராசிகள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி:

மேஷம் ராசி

மேஷம் ராசி பெண்கள் மற்றவர்கள் மீது அன்பாக நடந்து கொள்வார்கள். மேலும் நேர்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் மீது அதிக அன்பு வைப்பார்கள் அதே போல தனக்கு வரு கணவர் மீதும் அதிகம் அன்பும், நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். அதனால் உங்களுக்கு ஜாதகத்தில் மேஷம் ராசி பெண்களின் பொருத்தம் சரியாக இருந்தால் நீங்கள் அவர்களை தயக்கம் இல்லாமல் திருமணம்  செய்து கொள்ளலாம். 

இதையும் படியுங்கள் ⇒ துணைவியிடம் அடங்கி போகும் ஆண் ராசிக்காரர்கள்..!

சிம்மம் ராசி:

சிம்மம் ராசி

சிம்மம் ராசி பெண்களிடம் பொதுவாகவே தலைமை பண்பு காணப்படும். மேலும் நேர்மையாகவும், நம்பிக்கையாகவும் இருப்பார்கள். இவர்கள் யாரவது நம்பி விட்டால் அவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்களை திருமணம் செய்வதால் நீங்கள் இருக்கும் நிலையை விட நிதிநிலைமை அதிகரிக்கும். 

மிதுனம் ராசி:

மிதுனம் ராசி

மிதுனம் ராசி உடைய பெண்கள் ஒரு பிரச்சனை என்றால் அதில் மட்டும் இருக்காமல் எல்லாருடைய சூழ்நிலையிலும் இருந்து யோசிப்பார்கள். இந்த ராசியில் ராகு, செவ்வாய், குருவின் ஆதிக்கம் கொண்டிருக்கும். அதிகம் இருப்பதால் இவர்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அது ரொம்ப சரியானதாக இருக்கும். அதனால் இந்த ராசி பெண்களை திருமணம் செய்து கொண்டால் உங்களின் வாழ்க்கையில் வளர்ச்சி காணப்படும். 

மீனம் ராசி:

மீனம் ராசி

இந்த ராசி பெண்கள் சனி பகவான், குரு பகவான் ஆதிக்கம் கொண்டிருப்பார்கள். இவர்கள் மிகவும் பொறுமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதில் இவர்கள் போல் யாரும் இல்லை. மேலும் மற்றவர்களை பற்றி புரிந்து கொள்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் மீனம் ராசி பெண்களிடம் காணப்படும்.

இதையும் படியுங்கள் ⇒ இந்த ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு.!

இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்