மார்ச் 15 முதல் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 6 ராசிகளுக்கு நிறைய பிரச்சனைகள் வர போகிறதாம்..!

Which Zodiac Sign is Bad Time in Tamil

மனித வாழ்க்கையில் கிரகங்களின் இயக்கம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் நவகிரகங்களில் சனிபகவானின் தாக்கம் ஆனது எல்லா ராசிகளிலும் சற்று அதிகமாக இருக்கும். சனிபகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை மாற்றி கொண்டே இருப்பர். அந்த வகையில் மார்ச் 6 முதல் கும்ப ராசியில் உதயமானார். அதனை  தொடர்ந்து மார்ச் 15 முதல் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் சனிபகவான் சதய நட்சத்திற்குள் நுழைகிறார். சனியின் இந்த நட்சத்திர மாற்றம் அனைத்து ராசிகளுக்கும்  தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நடந்தாலும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிக பிரச்சனைகள் உண்டாகும். சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் பிரச்சனைகளை சந்திக்க போகும் அந்த ராசிக்காரர்கள் யாரென்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ரிஷபம்:

Which Zodiac Sign is Bad Time in Tamil

ரிஷப ராசியில் 10 வைத்து இடத்தில் சனி உள்ளார். இந்த 10-வது வீடு என்பது தொழிலுக்குரிய வீடாகும். எனவே ரிஷப  ராசிக்காரர்களுக்கு தொழிலில் சில மாற்றங்கள் உண்டாகலாம். வேலை செய்பவர்கள் வேலை செய்யும் இடத்தில் சில போராட்டங்களை சந்திக்க நேரிடும். அதுமட்டுமில்லாமல் வேலையில் இருந்து விலகவும் வாய்ப்புகள் உள்ளது.

மார்ச் 12 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு அமோகமான அதிர்ஷ்டம் காத்து கொண்டிருக்கிறது.

 

கடகம்:

Which Zodiac Sign is Bad Time in Tamil

சனியின் நட்சத்திர மாற்றத்தால் கடக ராசிக்காரர்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் பணிபுரிபவர்கள் வேலையில் சில கஷ்டங்களையும், தடைகளையும் சந்திக்க நேரிடும். இதனால் வேலையை விட்டு விலகவும் நேரிடும். மேலும் சுயதொழில் செய்பவர்கள் முதலீடு செய்யும் பொது சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கன்னி:

கன்னி ராசி தொழில்

கன்னி ராசியின் 6 -வது இடத்தில் சனி இருப்பதால் கன்னி ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் வேலை சுமை அதிகமாக இருக்கும். இதனால் மன அழுத்தம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் சிலருக்கு வேலை மாற்றம் மற்றும் இடமாற்றத்திற்கும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், வியாபாரம் செய்பவர்களுக்கு பணியாட்களின் மூலம் சில பிரச்சனைகள் உண்டாகலாம். இதன் விளைவாக வியாபாரத்தில் சில நஷ்டங்களையும் அடையலாம்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசி

விருச்சிக ராசிக்காரர்கள் ஏற்கனவே அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சுயதொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்த எந்தவிதமான திட்டங்களையும் மேற்கொள்ளக்கூடாது. அப்படி இல்லையென்றால் தொழிலில் அதிக நஷ்டத்தை சந்திப்பார்கள். அதுமட்டுமில்லாமல் இப்பொழுது செய்யும் அனைத்து தொழில்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரே ராசியில் மூன்று யோகங்கள் இணைவதால் திடீரென்று ராஜயோகம் பெறப்போகும் ராசிகள் இந்த ராசிகள் தானாம்.

 

கும்பம்:

கும்பம் ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் நடைபெறுவதால் பணிபுரியும் இடத்தில் அதிக வேலை அழுத்தத்தை பெறுவார்கள். மேலும் பணிபுரியும் இடத்தில் கூட பணிபுரியும் நபர்களின் ஆதரவு இல்லாமல் கஷ்டப்படுவார்கள். அதுமட்டும் இல்லாமல் சுயதொழில் செய்பவர்கள் இக்காலத்தில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நஷ்டங்களை சந்திக்க நேரிடும்.

மீனம்:

மீனம் ராசி

மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கி உள்ளது. இதனால் இவர்களின் தொழில் வாழ்க்கையில் ஏமாற்றங்களையும், தோல்விகளையும் சந்திக்க நேரிடும். ஒரு சிலருக்கு வேலை மாற்றம் மற்றும் வேலையில் அதிக அழுத்தம் ஏற்படும். இக்காலத்தில் மீன ராசிக்காரர்கள் ஏதேனும் தொழில் தொடங்க இருந்தால் அதை நிறுத்தி வைக்கவும். நஷ்டங்கள் ஏற்படும் என ஆன்மீகத்தில் அறியுறுத்தப்படுகிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்