கடவுளுக்கு வாழைப்பழத்தை படைப்பதற்கு காரணம் என்ன தெரியுமா.?

Advertisement

Why do we Offer Banana to God in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய ஆன்மிக பதிவில்  கடவுளுக்கு வாழைப்பழத்தை படைப்பதற்கு காரணம் என்னவென்றுதான் தெரிந்துகொள்ளப் போகின்றோம்.  பொதுவாக வீட்டில் நடக்கும் விசேஷமாக இருந்தாலும் சரி அல்லது பண்டிகை நாளாக இருந்தாலும் சரி, வீட்டில் பூஜை அறையில் கடவுளுக்கு வாழைப்பழத்தை கட்டாயம் படைப்பார்கள்.  அதே போல் கோவில்களில் வாழைப்பழத்தை கடவுளுக்கு படைத்து அர்ச்சனை செய்பவர்களுக்கு கொடுப்பார்கள், ஆனால் இதற்கான காரணம் என்னவென்று பலருக்கும் தெரியாது, மேலும் வாழைப்பழத்தை ஏன் கடவுளுக்கு படைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வோம்  வாங்க.

மறந்தும் கூட பூஜை அறையில் இந்தப் பொருட்களை வைக்காதீர்கள்..!

கடவுளுக்கு வாழைப்பழத்தை படைப்பதற்கு காரணம் என்ன தெரியுமா.? 

இந்த உலகில் எவ்வளவுதான் பழங்கள் இருந்து வந்தாலும் நாம் வாழைப்பழத்தை மட்டும்தான் படைத்து கடவுளை வழிபடுகிறோம். இதற்கான காரணம் என்னவென்று நாம் என்றாவது யோசித்து பார்த்திருப்போமா.? இதற்கான காரணம் என்ன தெரியுமா.?  அதாவது மா, பலா, வாழை  இவை மட்டும்தான் முக்கனிகள் என்று அழைக்கப்படுகின்றன.  இந்த முக்கனிகளில் வாழைப்பழத்திற்கு எப்பொழுதும் ஒரு தனி சிறப்பு உள்ளது.

பொதுவாக நாம் சாப்பிடும் எல்லாவிதமான பழங்களிலும் கொட்டைகள் இருக்கும். ஆனால் வாழைப்பழத்தில் அவை இருப்பதில்லை, கொட்டைகள் இல்லாத பழம் என்று சொன்னால்  வாழைப்பழம் தான், வாழைப்பழத்தில் கருப்பு நிறத்தில் சிறு விதைகள் மட்டும்தான் இருக்கும்.  இதற்கும் கடவுளுக்கு வாழைப்பழத்தை படைப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்களா.?

அதாவது நாம் ஒரு கொட்டை இருக்கும் பழத்தை சாப்பிட்டு அதை எறியும் பொழுது அது மரமாகி வளர தொடங்கிவிடும், ஆனால் நாம் வாழைப்பழத்தை சாப்பிட்டு அதனுடைய தோள்களையோ அல்லது அந்த பழத்தையோ வீசும் பொழுது அது மீண்டும் மரமாக வளர்வதில்லை.

அதனால் தான் நம் முன்னோர்கள் கடவுளுக்கு இந்த  வாழைப்பழத்தை படைத்து, இந்த வாழைப்பழத்தை போல்  எனக்கு இன்னொரு ஜென்மம் வேண்டாம், இந்த ஒரு ஜென்மமே போதும் என்று வேண்டிக்கொள்வார்களாம் . அதனால் தான் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து வாழைப்பழத்தை  கடவுளுக்கு படைக்கப்பட்டு வருகிறது.

வாழைப்பழத்தை போல் தான் நாம் பூஜையில் வைக்கும் தேங்காயும், தேங்காயை கடவுளுக்கு படைத்து அதனுடைய ஓடுகளை வீசினாலும் அவை தென்னை மரமாக முளைப்பதில்லை,  இப்பொழுது உங்களுக்கு தெரிகிறதா? ஏன் பூஜையில் வாழைப்பழத்தையும், தேங்காவையும் படைக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டீர்களா.! நண்பர்களே..!

இதையும் பாருங்கள் => பூஜையில் வைத்த இந்த ஒரு பொருளை மட்டும் வீணாக்கினால் வீட்டில் வறுமை வந்துகொண்டே இருக்கும்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement