தீப ஒளி திருநாள்
வணக்கம் ஆன்மீக நண்பர்களே..! உலகமெங்கும் ஒளி வீசக்கூடிய தீபாவளி வருவதற்கு நாட்கள் நெருங்கி கொண்டு இருக்கின்றன. அந்த தீபாவளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்பார்க்க கூடிய ஒரு திருநாள். அந்த தீபாவளி அன்று புதிய ஆடை அணிவது, வித விதமான பலகாரங்கள் சாப்பிடுவது, எண்ணெய் தேய்த்து குளிப்பது, பட்டாசு வெடிப்பது இதுபோன்ற நிறைய மகிழ்ச்சிகரமான தருணங்கள் நிறைந்து இருக்கின்றன. அப்படி நாம் செய்யும் அந்த விஷயங்களில் நமக்கு தெரியாதவற்றை பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொண்டு பயன்பெறுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ கோடீஸ்வர யோகம் கிடைக்க தீபாவளி அன்று செய்ய வேண்டிய 5 விஷயங்கள் மற்றும் செய்யவே கூடாத இந்த 1 தவறு..
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதன் அவசியம்:
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது நகராசுரனை மகிழ்விப்பதற்கான காரணம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அது மட்டும் கிடையாது. தீபாவளி அன்று விடியற் காலையில் நல்ல எண்ணெயை நம்முடைய தலையில் தேய்த்து குளிப்பதனால் மகாலக்ஷ்மியின் அருள் நம்முடைய வீட்டிற்கு கிடைக்கும் என்பது ஒரு ஐதீகம்.
வெந்நீரில் கங்கை எழுந்து அருளிருக்கிறார் என்பதால் அதிகாலை வெந்நீரில் குளிக்க வேண்டும். அதனால் நம்முடைய பீடைகள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
தீபாவளி அன்று அசைவம் சாப்பிடலாமா:
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளித்து புதிய ஆடை அணிவதால் வீட்டிற்கு மகாலக்ஷ்மி வரும் என்பதால் அசைவ உணவுகளை சாப்பிட கூடாது என்று ஆன்மீகத்தில் சொல்லுகின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் திதி நாட்களில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அமாவாசை, சதுர்த்தி, கார்த்திகை, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு இதுபோன்ற திதி நாட்களில் அசைவம் சாப்பிடாமல் இருந்தால் குடும்பத்திற்கு நல்லது என்று சொல்வது ஒரு ஐதீகம்.
அதுபோல நாம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நாட்களில் அசைவம் சாப்பிட கூடாது. அந்த நாட்களில் அசைவம் சாப்பிடாமல் இருப்பதால் நம் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
தீபாவளி அன்று பட்டாசு:
தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்து, வீட்டில் தீபங்களை ஏற்றுவதன் மூலம் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி பிரகாசமான வாழ்க்கை தொடங்கும். மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கி தீபாவளி அன்று புது ஒளி பிறக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |