மாதவிடாய் காலங்களில் பெண்கள் ஏன் கோவிலுக்கு செல்வதில்லை… காரணம் தெரியுமா..?

Advertisement

மாதவிடாய் காலங்களில் பெண்கள் ஏன் கோவில்களுக்கு செல்வதில்லை..? 

வணக்கம் பொதுநலம்.காம்  பதிவின் இனிமையான நேயர்களே… இன்றைய ஆன்மிகம் பதிவில் பெண்கள் ஏன் மாதவிடாய் காலங்களில் கோவில்களுக்கு செல்வதில்லை மற்றும் வழிபாட்டு முறைகளில் கலந்து கொள்வதில்லை என்று உங்களுக்கு தெரியுமா..?

அதற்கு காரணம் என்ன என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா..? அதுபோல யோசிக்கும் நபர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே அதற்கான காரணத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் —> தெரிந்துகொள்வோம் மாதவிடாய் பற்றிய திகைப்பூட்டும் விஷயங்கள்..!

பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோவிலுக்கு செல்லாதது ஏன்..? 

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். வீட்டில் இருக்கும் பூஜை அறையில் நுழைய கூடாது, கோவிலுக்கு செல்ல கூடாது, குங்குமம் வைக்க கூடாது மற்றும் மற்றவர்களை விட்டு தள்ளி இருக்க வேண்டும் என்று ஏன் கட்டளைகளும் கட்டுப்பாடுகளும் போடுகிறார்கள்.

மாதவிடாய் என்பது பெண்களுக்கு கிடைத்த வரமா..? சாபமா..? ஏன் அவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். அதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..? இன்றைய நிலையில் உலகம் எவ்வளவு மாறி இருந்தாலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இன்றும் சில கிராம பகுதிகளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பொதுவாக பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தவுடன் அவர்களை தனிமை படுத்துகிறார்கள். மாதவிடாய் காலங்களில் பெண் குழந்தைகள் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் சோர்வாக காணப்படுவார்கள்.

அதுமட்டுமில்லாமல் அந்த நேரத்தில் அவர்கள் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இதை புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் நாம் இதை பற்றி கூறினால் அவர்கள் கேட்க மாட்டார்கள்.

அதனால் தான் நம் முன்னோர்கள் இதற்கு காரணம் ஒன்றை கூறி உள்ளனர். அவர்கள் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்காக தான் முன்னோர்கள் தெய்வத்தின் பெயரை சொல்லி பெண்களை கட்டுப்படுத்தி உள்ளனர்.

மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்வது?

இதற்கான அறிவியல் காரணம் என்ன..?

கோவிலுக்கு செல்லாதது ஏன்..? 

அந்த காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இரத்த வெளியேற்றத்தை மறைப்பதற்கு அவர்களுக்கு போதுமான வசதிகள் கிடையாது.  அந்த நேரத்தில் அவர்கள் பயன்படுத்தும் துணியானது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது. அதனால் தான் அந்த நேரங்களில் அவர்களை வெளியில் செல்ல கூடாது என்று கூறினார்கள். அதுபோல பொது இடங்களான கோவில்களுக்கும் செல்ல வேண்டாம் என்றும் கூறினர். 

அதுமட்டுமில்லாமல், புவி ஈர்ப்பு விசை காரணமாக பெண்களுக்கு ரத்த போக்கு அதிகம் ஏற்படும் என்பதால் அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் அதிகம் வெளியில் வரவேண்டாம் என்று சொன்னார்கள். பெண்களை பாதுகாப்பதற்காக தான் இதுபோன்ற விஷயங்களை நம் முன்னோர்கள் கடைபிடிக்க சொன்னார்கள். 

சமையலறைக்குள் நுழைய கூடாது..? காரணம் என்ன..? 

மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடலில் நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்கள் மிகவும் பலவீனமானவர்களாக காணப்படுவார்கள். அவர்களின் உடல் மிகவும் உஷ்ணமாக இருக்கும். மாதவிடாய் நேரத்தில் அவர்களிடம் இருந்து ஒரு விதமான வெப்பமானது வெளிப்படும். அந்த  நேரத்தில்  அவர்கள் தொடும் உணவு பொருட்கள் கெட்டுப்போகும் வாய்ப்பு இருப்பதால் சமையலறைக்குள் நுழைய கூடாது என்று சொன்னார்கள். 

தலையில் வேப்பிலை வைப்பதற்கு காரணம் என்ன..? 

மாதவிடாய் நேரத்தில் பெண்களின் மீது ஒரு விதமான இரத்த வாசனை வீசும். அந்த நேரத்தில் அவர்கள் வெளியில் செல்வதால் சில  விஷ பூச்சிகளும், மிருகங்களும் மற்றும் துஷ்ட சக்திகள் நெருங்கும் வாய்ப்பு இருப்பதால் அவர்களை எதுவும் நெருங்க கூடாது என்பதற்காக தலையில் வேப்பிலை வைக்க சொன்னார்கள்.  வேப்பிலை இந்த வாசனையை கட்டுப்படுத்தும் என்பதற்காக இப்படி செய்ய சொன்னார்கள்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement