உங்கள் வருங்கால மனைவி எப்படி இருப்பாள் என்று தெரிந்துகொள்ள ஆசை இருக்கிறதா.?

wife according to astrology in tamil

வருங்கால மனைவி

வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆன்மிகம் பதிவில் ஆண்களுக்கு வரப் போகும் வருங்கால மனைவி எப்படி இருப்பாள் என்று அவர்களின் ராசிப்படி தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே ஒரு ஆணுக்கு திருமணம் ஆன பிறகு தான் அவர்களின் மனைவியின் குணத்தை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இவர்களின் வருங்கால மனைவியின் குணத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். மேலும் பன்னிரண்டு ராசிகளை கொண்ட ஆண்களின் வருங்கால மனைவியை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

திருமணம் ஆனபிறகு இந்த ராசியினர் மனைவியிடம் பவ்வியமாக இருப்பங்களாம்..! நீங்கள் இந்த ராசிக்காரரா

Wife According to Astrology in Tamil:

ஜோதிடத்தில் பலன் உரைக்கும் வழிமுறைகள் பல இருக்கின்றன. அந்த வகையில் பெருகு முனிவரால் ஏற்றப்பட்ட பெருகு நாடியும், நந்திகேஸ்வரரால் ஏற்றப்பட்ட நந்தி நாடியும் ஜோதிடத்தின் பலன்களை துல்லியமாக சொல்லமுடிகிறது. அந்த வகையில் பெருகு நாடி வழிமுறையில் ஆண் ஜாதகத்தில் மனைவியை குறிக்கும் கிரகம் சுக்கிரன் ஆவர். ஒவ்வொரு ராசியிலும் சுக்கிரன் பன்னிரண்டு ராசிகளில் எங்கு இருக்கின்றாரோ அதை கொண்டு ஆண்களுக்கு வரும் வருங்கால மனைவியை பற்றி  தெரிந்துகொள்ளலாம் வாங்க.

மேஷம்:

மேஷ ராசியில் சுக்கிரன் இருந்தால் உங்களுக்கு வரப்போகும் மனைவி எளிமையான தோற்றங்களை கொண்டவராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு வரப்போகும் மனைவி சொந்தக்காரியாகவோ அல்லது சொந்த ஊரை  உடையவர்களாகவோ இருப்பார்கள். அதோடுமட்டுமில்லாமல் வரப்போகும் மனைவி  கோவம் அதிகம் உடைவளாகவும் இருப்பார்கள்.  மனைவியின் வீடு கிழக்கு,மேற்கு வீதியில் இருக்கும்.  மனைவி இருக்கும் வீடு அதிகம் வெளிச்சம் உள்ள வீடாக இருக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் சுக்கிரன் இருக்கும் ஜாதகருக்கு வரப்போகும் மனைவி அழகானவளாகவும், ஆடை அலங்காரத்தில் அதிகம் பிரியம் உடையவளாகவும் இருப்பார்கள். சொகுசு விரும்பியாகவும், செல்வ செழிப்பாகவும் உடையவளாகவும் இருப்பார்கள். மனைவி பிறந்த ஊர் ஜாதகரின் பக்கத்துக்கு ஊரில் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. மனைவி இருக்கும் வீடு தெற்கு அல்லது வடக்கு தெருவில் இருக்கும். இவர்கள்  வீட்டை அழகாக வைத்திருப்பார்கள்.

மிதுனம்:

மிதுன ராசியில் சுக்கிரன் இருக்கும் ஜாதகர்களுக்கு வரப்போகும் மனைவி நட்பு விரும்பியாகவும், புத்திசாலியாகவும், சுறுசுறுப்பானவளாகவும் இருப்பார்கள். இவர்களின் பெயர் இரட்டை பெயர்களை கொண்டவராக இருப்பார்கள். தோற்றத்தை பொறுத்தவரை  கணவனை விட இளமையாக இருப்பார்கள்.  ஜாதகனுக்கு வருங்கால மனைவிக்கும் வயது வித்தியாசம் அதிகமாகவே இருக்கும். மனைவியின் வீடு கிழக்கு, மேற்கு வீதிகளில் இருக்கும். பொதுவாகவே மனைவின் வீடு தெரு வளைவு பகுதியில் அமைந்திருக்கும்.

கடகம்:

கடக ராசியில் சுக்கிரன் இருக்கும் ஜாதகருக்கு வரப்போகும் மனைவி அழகாகவும், பாசம் அதிகம் உடைவளாகவும் இருப்பார்கள்.  மனைவிக்கு பிறந்த வீட்டில் அந்நிய பெண் போல நடத்துவார்கள். இதனால் இவர்கள் தாய் வீட்டுக்கு அதிகம் செல்வதற்கு விரும்பமாட்டார்கள். மனைவி பிறந்த ஊர் ஜாதகருக்கு தெற்கு, வடக்கு தெருவில் மேற்கு பக்கம் உள்ள வாசலாக இருக்கும். மனைவியின் வீடு பள்ளம் இருக்கும் இடத்தில் அமைத்திருக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசியில் சுக்கிரன் இருக்கும் ஜாதகருக்கு வரும் மனைவி நிர்வாகத்துறையில் உள்ளவராகவும், பிறந்த வீட்டில் ராணி  மாறி உள்ளவராகவும் இருப்பார்கள். பிறந்த வீட்டில் உள்ளவர்களை நன்றாக வேலை வாங்குவார்கள். பிறந்த பிள்ளைகளை தாய் வீட்டில் விட்டு வளர்ப்பார்கள். மனைவி பிறந்த ஊர் தெற்கு திசையிலும், வீடு வடக்கு திசையிலும் அமைந்திருக்கும்.

கன்னி:

கன்னி ராசியில் சுக்கிரன் இருக்கும் ஜாதகருக்கு  வரப்போகும் மனைவி இளமையான தோற்றங்களை உடையவளாகவும், ஜாதகனை விட வயதில் மிகவும் இளையவளாகவோ இருப்பார்கள்.  மனைவி தோழிகள் வீட்டுக்கு சென்று வந்தால் வீட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். ஆடை,  அலங்காரத்தில் அக்கறை இல்லாமல் இருப்பார்கள்.  மனைவிக்கு இரண்டு பெயர்கள் இருக்கும். மனைவி பிறந்த ஊர் தென்மேற்கு திசையிலும், வீடு கிழக்கு பக்கம் வாசல் உள்ள வீடாக இருக்கும்.

துலாம்:

துலாம் ராசியில் சுக்கிரன் இருக்கும் ஜாதகருக்கு வரப்போகும் மனைவி அழகானவளாகவும், ஆடை அலங்காரத்தில் அதிகம் பிரியமுள்ளவளாகவும் இருப்பார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் சரியான முடிவுகளை எடுக்கும் திறமை உள்ளவளாகவும் இருப்பார்கள். மனைவி பக்கத்துக்கு ஊரை சேந்தவராக இருப்பதற்கு அதிகம் வாய்ப்பு  உள்ளது. மனைவியின் வீடு தெற்கு வாசல் இருக்கும் வீடாக இருக்கும். மனைவி இருக்கும் வீடு இருட்டாக இருக்கும்.

விருச்சகம்:

விருச்சக ராசியில் சுக்கிரன் இருக்கும் ஜாதகருக்கு  வரப்போகும் மனைவி சுறுசுறுப்பாகவும், இளமையாகவும் இருப்பார்கள். ஜாதகருக்கு வரப்போகும் மனைவி சரியான உடல் பொருத்தத்தை உடையவளாகவும் இருப்பார்கள். அதிகம் கோவம் உடையவளாகவும் இருப்பார்கள். மனைவி பிறந்த வீடு  மேற்கு பக்கம் வாசல் உடையதாக இருக்கும். திருமணத்திற்கு பிறகு ஜாதகனை விட்டு பிரியவே மாட்டார்கள்.

தனுஷ்:

தனுசு  ராசியில் சுக்கிரன் இருக்கும் ஜாதகருக்கு வரப்போகும் மனைவி அமைதியான தோற்றத்தை கொண்டவளாக இருப்பார்கள். தோற்றத்தில் ஜாதகனை விட மூத்தவள் போல் இருப்பார்கள்.  பெரும்பாலும் இவர்களுக்கு வரப்போகும் மனைவி சொந்தக்காரியாக இருப்பார்கள். மனைவி பிறந்த ஊர் ஜாதகருக்கு பக்கத்துக்கு ஊராக இருக்கும். மனைவி பிறந்த வீடு வடக்கு பக்கம் வாசல் உள்ள வீடாக இருக்கும்.

மகரம்:

மகர ராசியில் சுக்கிரன் இருக்கும் ஜாதகனுக்கு வரப்போகும் மனைவி நல்ல உடல் உழைப்பாளியாகவும், அடக்கமானவர்களாகவும், எளிமையானவளாகவும் இருப்பார்கள். இவர்கள் சொந்தங்கள் இல்லாமல் அந்நிய பெண்ணாக இருப்பார்கள். மனைவி பிறந்த ஊர் வடக்கு திசையிலும், வீடு கிழக்கு  திசையில் வாசல் உள்ள வீடாகவும் இருக்கும். மனைவி அடுத்தவர்களுக்கு சேவைகள் புரிந்து காரியவாதியாகவும் இருப்பார்கள்.

கும்பம்:

கும்ப ராசியில் சுக்கிரன் இருக்கும் ஜாதகனுக்கு வரப்போகும் மனைவி காரியவாதியாக இருப்பார்கள். அடுத்தவரிடம் எதுவும் வாங்குவதற்கு கூச்சங்கள் படமாட்டார்கள். இவர்களுடைய வேலைகளை எல்லோரிடமும் திணிப்பார்கள். மனைவி பிறந்த ஊர் வடக்கு திசையிலும், வீடு  வடக்கு பக்கம் வாசல் உள்ள வீடாக இருக்கும்.  ஜாதகனுடைய மனைவி தோழிகளுடன் சேர்ந்தால் அரட்டை அடிப்பார்கள்.

மீனம்:

மீன ராசியில் சுக்கிரனை கொண்ட ஜாதகனுக்கு வரப்போகும் மனைவி சாந்தமாகவும், அமைதியாகவும் இருப்பார்கள். தோற்றத்தை பொறுத்தவரை ஜாதகரை விட மூத்தவள் போலும், வயது அதிகமானவளாகவும் இருப்பார்கள். மனைவி பிறந்த ஊர் ஜாதகருக்கு வடகிழக்கு திசையில் இருக்கும். மனைவி உடைய வீடு மேற்கு பக்கம் வாசல் உள்ள வீடாக இருக்கும். மனைவியின் பெயர் இரட்டை பெயராக இருக்கும். மனைவி அடுத்தவர்களிடம் அதிகாரம் செய்யும் குணங்களை உடையவளாக இருப்பார்கள்.

 

நீங்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்? இந்த தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டதால் வாழ்க்கை அமோகமாக இருக்கும் .

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்