யோனி பொருத்தம் விளக்கம் | Yoni Porutham Meaning in Tamil
Yoni Porutham in Tamil:- திருமணம் பொருத்தத்தில் குறிப்பாக 10 பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இந்த பத்து பொருத்தங்களில் ஒரு சில பொருத்தங்கள் மட்டும் மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது. அவற்றில் ஒன்று தான் யோனி பொருத்தம். இந்த யோனி பொருத்தத்திற்கு பலரும் பலவிதமான கருத்துக்களை கூறுகின்றனர். இருப்பினும் இந்த யோனி பொருத்தம் என்பது குணநலன்களை சார்ந்த பொருத்தம் என்று சொல்லலாம். இந்த பொருத்தத்திற்கு மிருகங்களின் குணங்களை வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர்.
அதாவது நமது ஜோதிடம் சாஸ்த்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்திர்க்கும் ஒவ்வொரு மிருகங்களின் குணம் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளும் ஆண் மற்றும் பெண் நட்சத்திரத்தில் மிருகங்களுக்கு இடையே பகை இருந்தால் பொருந்தாது. பகை என்பது திருமணம் செய்து கொள்பவர்களின் திருமண வாழ்க்கையானது நன்றாக இருக்காது. திருமண வாழ்க்கை இனிமையானதாக அமைய இருவருக்கும் இடையில் அன்னியோன்யம் இருக்க வேண்டும். இதன் காரணமாக தான் திருமணம் பொருத்தத்தில் இந்த யோனி பொருத்தம் பார்க்கப்படுகிறது. சரி இப்பொழுது ஆண், பெண் நட்சத்திரங்களில் பகை உள்ள நட்சத்திரம் எது? பகை இல்லாத நட்சத்திரம் எது? என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
திருமணத்திற்கு ஏன் ரஜ்ஜு பொருத்தம் பார்க்கப்படுகிறது தெரியுமா? |
Yoni Porutham Meaning in Tamil..!
யோனி நட்சத்திரம் எப்படி பார்ப்பது?
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விலங்கின் குணம் இருக்கிறது. அவற்றில் எந்த நட்சத்திரத்திற்கு எந்த விலங்குகளின் குணம் சேரும், சேராது என்பதற்கு ஜோதிடத்தில் பட்டியல் இருக்கிறது, அவற்றை இப்பொழுது நாம் கீழ் அட்டவணையில் பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
நட்சத்திரங்களும் யோனி வகைகளும்:
நட்சத்திரங்களின் குணங்கள் | |
அஸ்வினி | ஆண் குதிரை |
பரணி | ஆண் யானை |
கிருத்திகை | பெண் ஆடு |
ரோகிணி | ஆண் நாகம் |
மிருகசீரிஷம் | பெண் சாரை |
திருவாதிரை | ஆண் நாய் |
புனர்பூசம் | பெண் பூனை |
பூசம் | ஆண் ஆடு |
ஆயில்யம் | ஆண் பூனை |
மகம் | ஆண் எலி |
பூரம் | பெண் எலி |
உத்திரம் | பெண் எருது |
அஸ்தம் | பெண் எருமை |
சித்திரை | பெண் புலி |
சுவாதி | ஆண் எருமை |
விசாகம் | ஆண் புலி |
அனுஷம் |
பெண் மான் |
கேட்டை | ஆண் மான் |
மூலம் | பெண் நாய் |
பூராடம் | ஆண் குரங்கு |
உத்திராடம் | மலட்டு பசு |
திருவோணம் | பெண் குரங்கு |
அவிட்டம் | பெண் சிங்கம் |
சதயம் | பெண் குதிரை |
புரட்டாதி | ஆண் சிங்கம் |
உத்திரட்டாதி | பெண் பசு |
ரேவதி | பெண் யானை |
பகையுள்ள யோனிகள்:
பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி
இந்த பகை உள்ள ஆண் பெண் நட்சத்திரங்கள் சேர்க்கக் கூடாது இவற்றில், பொருத்தம் இல்லாதவை என்று சொல்லலாம். இதனை ஜென்ம விரோதிகள் என்று கூறுவார்கள்.
மேல் கூறப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உள்ள மிருகம் குணத்தை தெரிந்திருப்பீர்கள். அதில் எதை எதனோடு இணைத்தால் திருமணம் வாழ்க்கை நன்றாக அமையும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். தாவர உண்ணிகள், தாவர உண்ணிகளோடு சேரும், மாமிசபட்சினிகள், மாமிசபட்சினிகளோடு சேரலாம். அதேசமயம், நாய்க்கு பூனை பகை. சிங்கம், புலிக்கு பசு, எருது, மான், ஆடு, குதிரை யானை பகை. பாம்புக்கு எலி பகை. எலிக்கு, கீரி பகை. குரங்குக்கு, ஆடு பகை.
முக்கிய திருமண பொருத்தம்..! |
தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் மேலே சொல்லப்பட்ட நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் ஆணாகவும் இரண்டாவதை பெண்ணாகவும் அறிந்து திருமணம் செய்வது நல்லது, ஒரே இனமாக யோனி இருப்பதால் தம்பதிகளுக்கு ஒற்றுமை அதிகம் உண்டு. உதாரணமாக அசுவினி சதயம் இவற்றில் அசுவினி ஆணாகவும் சதயம் பெண்ணாகவும் இரண்டும் பொருந்தி உள்ளது. இதைப் போல பார்த்துச் செய்ய வேண்டும்.
லக்கின திருமண பொருத்தம் என்றால் என்ன..? லக்கின பொருத்தம் அவசியமா..?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |