ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவுகள்

Aanmai Athikarikka

ஆண்மை அதிகரிக்க உணவுகள் | Aanmai Athikarikka Enna Sapida Vendum

வணக்கம் நண்பர்களே… இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் திருமணமான பலருக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது. இது ஆண், பெண் இருவருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனை என்றாலும். குழந்தையின்மைக்கு 40 சதவிகிதம் ஆண்களால் தான் இந்தப் பிரச்சனை வருவதாக ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன. இத்தகைய பிரச்சனையை மருத்துவம் ரீதியாக சரி செய்யலாம் என்றாலும், நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் உணவு முறை மூலம் சரி செய்துவிடலாம். சரி இந்த பதிவில் ஆண்மையை அதிகரிக்க உதவும் இயற்கை உணவுகள் சிலவற்றை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

ஆண்மை அதிகரிக்க உதவும் சில உணவுகள்..!

முட்டை:

விந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விந்து நீர்த்து போகாமல் இருக்கவும் முட்டை மிகவும் பயன்படுகிறது. குறிப்பாக முட்டையில் உள்ள புரோடீன் மற்றும் வைட்டமின் E சத்துக்கள், விந்துக்களை அதிகரிக்க உதவி செய்கிறது. ஆகவே ஆண்மையை அதிகரிக்க தினமும் ஒரு முட்டையை சாப்பிட்டு வரலாம்.

வாழைப்பூ:

வாழைப்பூவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலில் ஏற்படும் பலவகையான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு வழங்குகிறது. குறிப்பாக வாழைப்பூவை பருப்புகளுடன் சேர்ந்து சமைத்து உண்டு வந்தால் உடல் வலிமையோடு ஆண்மையும் பெருகும்.

செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பாதாம்:

பாதாம் பருப்பில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக பாதாம் பருப்புகளில் பைபர், மெக்னீசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் ஆண்மையை அதிகரிக்க உதவி செய்கிறது. தொடர்ந்து ஒருவர் பாதாம் எடுத்துக்கொள்வதன் மூலம் விந்துக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். ஆகவே பாதாம் சாப்பிடுவதன் மூலம் ஆண்மையை பெருக்கலாம்.

சுரைக்காய் விதை:

ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவுகள் பட்டியலில் இருக்கும் ஓர் உணவு தான் சுரக்காய் விதை. சுரைக்காய் விதையை நாம் யாரும் சமைப்பதற்கு அதிகம் பயன்படுத்துவது இல்லை. இருப்பினும் சுரைக்காயின் விதையை காயவைத்து பின்னு பொடி செய்து கருப்பட்டி அல்லது சர்க்கரையை சேர்த்து தினமும் 10 கிராம் உண்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கலாம்.

ஓரிதழ் தாமரை பயன்கள்

மாதுளை பழம்:

Aanmai athikarikka fruits in tamil – மாதுளை பழம் தினமும் சாப்பிடுவதினால் உடல் சோர்வு, இரத்த சோகை போன்ற பலவகையான பிரச்சனைகள் குணமாகும் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதேபோல் ஆண்மையையும் அதிகரிக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?  ஆண்மையை பெருக்கும் பழங்களில் முக்கியமானது மாதுளை. உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட் சத்துக்கள் இரத்த ஓட்டத்தை சீராக்கி அதிலுள்ள அணுக்களையும் தூண்டிவிடுகிறது. ஆகவே தினமும் மாதுளை பழம் விந்துவின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

அத்திப்பழம்:

ஆண்மையை அதிகரிக்க நினைப்பவர்கள் அத்திப்பழம் சாப்பிடலாம். இதன் மூலம் விந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆகவே அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

ஆண்மை குறைவு அறிகுறிகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil