ஆளிவிதை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா?

side effects of flax seeds in tamil

ஆளிவிதை 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் ஆளிவிதை சாப்பிடுவதால் ஏற்படும்  பலவிதமான பக்கவிளைவுகளை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். ஆளிவிதையானது வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு அற்புதமான உணவுதான் இந்த ஆளிவிதை என்றும் சொல்லப்படுகிறது. இவை ஒரு இயற்கையான உணவு என்றும் அழைக்கப்படுகிறது. இதில் அமிலங்களும் நார்ச்சத்துக்களும் அதிகமாக அடங்கி உள்ளதால் உடல் எடையை குறைப்பதற்கும் மருத்துவமாக உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இதை அதிகம் சாப்பிடுவதால் உடலுக்கு சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்திக்கிறது. அவை என்னவென்று நம் பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க..

ரேஷன் அரிசியை சாப்பிடுவதால் கிடைக்கும் பல நன்மைகள் என்னென்ன தெரியுமா?

 

ஆளி விதை தீமைகள்:

நாம் பொதுவாகவே ஆளிவிதைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை மட்டும் தெரிந்து வைத்திருப்போம், ஆனால் அதை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை தெரிந்துவைத்துக்கொள்வதில்லை. நாம் எதை அதிகம் நன்மைகளுக்காக தொடர்ந்து சாப்பிடுகிறோமோ, கடைசியில் அதுவே நமக்கு நஞ்சாக அமைகிறது.

ஆளிவிதைகளையோ அல்லது ஆளிவிதை எண்ணெய்களையோ அதிகம் சாப்பிட்டு வருவதால் ஒவ்வாமை ஏற்படுகிறது. இதை நீங்கள் தொடர்ந்து சாப்பிடும் பொழுது அரிப்பு, வீக்கம், படைநோய் போன்றவை ஏற்பட்டால் அதனை உடனடியாக நிறுத்திக்கொள்வது மிகவும் அவசியம். அதோடு சாப்பிடும்பொழுது குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக நிறுத்திக்கொள்வது அவசியம் ஏனென்றால் ஒவ்வாமையின் அறிகுறிகள் ஆகும்.

அளிவிதைகளில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலங்களும் உள்ளது. எனவே இதை அதிகம் சாப்பிட்டால் உடலில் வீக்கத்தை அதிகரிக்க செய்கிறது, சில பக்கவிளைவுகளை தருகிறது.

கர்ப்பம் அடைந்து பாலூட்டும் பெண்கள் ஆளிவிதையை எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு எடுத்துக்கொள்வது நல்லது. அளிவிதைகளில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் இருப்பதால் இதை கவனிக்காமல் எடுத்துக்கொள்வதால் குடல் இயக்கங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வயிற்றுவலி, குமட்டல், வாந்தி மற்றும் மலச்சிக்கல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இரத்த சர்க்கரை நோயிகள் இருப்பவர்கள் ஆளிவிதையை தவிர்ப்பது நல்லது, ஏனென்றால் மருந்துகளுடன் எதிர்வினை புரியும் என்றும் சொல்லப்படுகிறது.

கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் ஆளிவிதை உபயோகிப்பதற்கு அதிக கவனம் தேவை. இதை கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் அதிகம் சாப்பிடுவதால் ஹார்மோன்களின் சமநிலையை தடுக்கிறது. இதன் காரணமாக மாதவிடாய் நாட்களில் பல மாற்றங்களையும் உண்டாகிறது. இதன் மூலம் கருப்பையில் கட்டிகள், கருப்பையில் புற்றுநோய் போன்ற கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகிறது.

ஆளிவிதையை அதிகம் சாப்பிடுவதால் குடல் அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும், ஆளிவிதைகளோடு தண்ணீர் அல்லது திரவங்களுடன் இருக்கவேண்டும். அதில் திரவங்கள் இல்லாமல் எடுத்துக்கொள்ளும் பொழுது குடல் அடைப்பு ஏற்படுகிறது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil