இலவங்கப்பட்டை மருத்துவ பயன்கள் | Lavanga Pattai Benefits in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நாம் ஆரோக்கியம் பகுதியில் முக்கியமான மருத்துவ பயன்கள் பற்றி பார்க்கலாம். நாம் முன்னோர்கள் சாப்பிடும் உணவாக இருந்தாலும் சரி, அவர்கள் பேசும் வார்த்தையாக இருந்தாலும் சரி எதோ ஒரு நல்ல விஷயங்களையும், நல்ல பலன்களையும் கொடுத்து இருக்கிறார்கள். இன்று நாம் வீட்டில் இருக்கும் இலவங்கப்பட்டையின் நன்மைகள் பற்றி தெளிவாக காண்போம்.
பட்டையின் நன்மைகள்:
- பட்டையை நறுமணத்திற்கு மட்டும் சேர்க்கிறார்கள் என்பது சிலருடைய கருத்து. பட்டையில் அதிகமான நன்மைகள் இருக்கிறது அதனால் தான் அதை அதிகம் சமையலில் சேர்க்கிறார்கள்.
- பட்டையை வைத்து செய்த ஆய்வில் பட்டையில் உள்ள மூலப்பொருள் மறதி நோய்க்கு மருந்தாக இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
- பட்டையில் உள்ள பி-ஆமிலாய்ட் பாலிபெப்டைட் ஆலிகோமர்ஸ் என்ற மூலப்பொருள் மூளையில் மறதி நோய்க்கு காரணமான பி-ஆமிலாய்ட் பிப்ரில்ஸ் என்ற பக்டீரியாவை தாக்கி அழிக்கிறது.
இலவங்கம் பயன்கள்:
இலவங்கம் கார சுவை, வெப்பத்தன்மை கொண்டது. இதனுடைய மருத்துவப்பயன்கள் அதிகம் முதலில் பசியை தூண்டும், உடல் எடையை அதிகமாக்கும், தோல் நோய், பித்தம், மயக்கம், வயிற்று போக்கு, பல் வலி, காய்ச்சல். போன்ற பல மருத்துவ பயன்கள் பட்டையில் உள்ளது.
லவங்கம் பூ பயன்கள்:
- லவங்க பூவை இடித்து பொடியாக்கி அரை கிராம் அளவிற்கு காலை மாலை என இருவேளை தேனில் குலைத்து சாப்பிட்டு வந்தால் அக உறுப்புகளுக்கு அதிகம் சத்துகள் சேரும்.
- லவங்கம் பூ பொடியை 2 கிராம் அளவிற்கு எடுத்து கலந்து சாப்பிடவர மாதவிடாய் காலத்தில் வரும் பிரச்சனைக்கு தீர்வு தரும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
Tamil maruthuvam tips |