கண்ணீர் விட்டு அழுவதன் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..?

Advertisement

கண்களில் வரும் கண்ணீர்

வணக்கம் நண்பர்களே..! மனிதனாக பிறந்த அனைவருக்கும் சுகம், துக்கம், நல்லது, கெட்டது இவை அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கையாக அமைகிறது. அனைவரும் ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை உடைத்து போராடி வெற்றி பெறுகின்றனர். அப்படி இருக்கும் போது வெற்றி அடைந்தாலும் சரி தோல்வி அடைந்தாலும் சரி நம்மை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. சந்தோசத்தில் இருக்கும் போது வரும் அந்தக் கண்ணீரை ஆனந்த கண்ணீர் என்று பெரியவர்கள் சொல்வது உண்டு. நம் கண்களில் இருந்து வரும் அந்த விலை மதிக்க முடியாத கண்ணீரின் நன்மைகள் பற்றி இன்றைய பதிவில் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

இதையும் படியுங்கள்கண்பார்வை 10 மடங்கு அதிகரிக்க இந்த 2 டிப்ஸ் போதும்..!

கண்களில் இருந்து வரும் அழுகை:

நமது உடல் உறுப்புகளில் கண் மிகவும் முக்கியமான ஒன்று. அது போல அந்தக் கண்களில் இருந்து வரும் அழுகையும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அழுகை வரும்.

ஒரு சிலருக்கு இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் அழுகை வரும். சிலருக்கு அடுத்தவர்கள் கஷ்டத்தை பார்த்து அழுகை வரும். அதுமட்டும் இல்லாமல் தனிமையில் யோசித்து கொண்டிருக்கும் போது சிலர் கண்ணீர் விட்டு அழுகுவார்கள்.

குழந்தை பிறந்தவுடன் முதலில் சிரிப்பது இல்லை. அழுதுக்கொண்டு தான் பிறக்கிறது. ஒரு மனிதனுடைய வாழ்கை முதலில் அழுகையில் தான் தொடங்குகிறது.

கண்ணீர் விட்டு அழுவதன் நன்மைகள்:

நாம் கண்ணீர் விட்டு அழுகும் போது மற்றவர்கள் சொல்வார்கள் எதற்கு கண்ணீரை  வீணாக்குகிறாய் என்று ஆனால் அந்த கண்ணீர் வீணாவது இல்லை. அதிலிலும் நன்மைகள் இருக்கிறது. அது என்னென்ன நன்மைகள் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தூசியை வெளியேற்றுகிறது:

எப்போதும் நாம் அழுகை வந்தால் மனம் விட்டு அழுது விட வேண்டும். அழுகையை கட்டுபடுத்தி வைக்க கூடாது. சோகமாக இருக்கும் தருணத்தில் அழுகும்போது நம்முடைய கண்களில் இருந்தும் கண்ணீர் வெளிவரும்.

அந்த கண்ணீரில் கண்ணுக்குள் இருக்கும் தூசி, அசுத்தமான பொருட்கள் அனைத்தும் வெளியே வந்து விடும். அதுபோல வெங்காயம் உரிக்கும் போதும் வரும் கண்ணீரிலும் கண்களில் உள்ள தூசுகள் மறைந்து விடும்.

கண் பார்வை அதிகரிக்க:

நாம் அழுகும் போது கண்களில் புரை ஏற்படாமல் தடுக்க முடியும். அதுமட்டும் இல்லாமல் கண்ணை வறட்சி அடையாளம் இருக்க வைக்கிறது.

மன அழுத்தம் குறைய:

கண்ணீர் விட்டு அழுதால் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் சுரக்கிறது. அதனால் மன அழுத்தம், சோகம், வருத்தம் இவற்றில் இருந்து எளிதாக விடுபட முடியும்.

மூக்கு அடைப்பு சரிசெய்ய:

நாம் அழுகும் போது முகத்தில் உள்ள தசைகள் விரிவடைந்து மூக்கு துவாரத்தில் உள்ள சளி, மற்ற திரவங்கள் எதுவாக இருந்தாலும் அதனை வெளியேற்றுகிறது.

சளி மற்றும் இருமல்:

கண்களில் இருந்தும் வரும் கண்ணீரினால் சளி மற்றும் இருமல் வர காரணமாக இருக்கும் வேதிப்பொருட்களை வெளியேற்றுகிறது. ஆகவே கண்களில் இருந்தும் வரும் கண்ணீரை ஒரு போதும் கட்டுப்படுத்தி வைக்காதீர்கள்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement