கண்பார்வை அதிகரிக்க டிப்ஸ்
வணக்கம் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க போவது கண்பார்வை 10 மடங்கு அதிகரிக்க என்ன செய்வது என்பதை பற்றித்தான் பார்க்க போகிறோம். இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் மொபைல் போன், கணினி, தொலைக்காட்சி போன்றவற்றை பார்ப்பதில் அதிக நேரம் செலவழிப்பதால் நமது கண்பார்வை மிகவும் பாதிப்படைந்து விரைவில் குறைய தொடங்குகிறது.
மேலும் சிலர் இரவில் நீண்ட நேரம் உறங்காமல் விழித்திருந்து வேலை செய்வார்கள் அவர்களுக்கும் கண்பார்வை பாதிப்படைந்து விரைவில் குறைய தொடங்குகிறது. இவற்றையெல்லாம் தவிர்க்க இந்த பதிவில் உள்ள டிப்ஸை தொடர்ந்து செய்து வந்தாலே போதும் உங்களுடை கண்பார்வை பன்மடங்கு அதிகரிக்கும். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.
கண்பார்வை அதிகரிக்க கடைபிடிக்க வேண்டியவை :
டிப்ஸ் -1:
கண்பார்வை அதிகரிக்க கடைபிடிக்க வேண்டியவை முதல் டிப்ஸ் பற்றிப்பார்ப்போம். இந்த டிப்சை 10 நாட்கள் செய்தாலே போதும் உங்களுடை கண்பார்வை பன்மடங்கு அதிகரிப்பதை நீங்களே பார்க்கலாம். அதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்
- பாதாம் – 2 டேபிள்ஸ்பூன்
- சோம்பு – 1 டேபிள்ஸ்பூன்
- கற்கண்டு(பெரியது) – 1 டேபிள்ஸ்பூன்
- பசும்பால் – 1 கிளாஸ்
முதலில் நாம் எடுத்துவைத்திருந்த 2 டேபிள்ஸ்பூன் பாதாம்,1 டேபிள்ஸ்பூன் சோம்பு,1 டேபிள்ஸ்பூன் கற்கண்டு(பெரியது) இவை மூன்றையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடிப்போல அரைத்து ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் எடுத்துவைத்து கொள்ளவும்.
பின்பு அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்துவைத்திருக்கும் 1 கிளாஸ் பசும்பாலை ஊற்றி அதனுடன் நாம் முன்பு பொடியாக்கி வைத்திருந்த அந்த பொடியிலிருந்து 1-2 டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பின் இந்த பாலை ஒரு கிளாசில் ஊற்றி அது சூடு ஆறியவுடன் அதனை குடியுங்கள். இந்த பாலை தொடர்ந்து 10 நாட்களுக்கு இரவில் உறங்குவதற்கு முன்பு குடித்து வந்தால் உங்களுடை கண்பார்வை பன்மடங்கு அதிகரிப்பதை நீங்களே பார்ப்பீர்கள்.
டிப்ஸ் -2:
கண்பார்வை அதிகரிக்க கடைபிடிக்க வேண்டியவை இரண்டாவது டிப்ஸ் பற்றிப்பார்ப்போம். இந்த டிப்சையும் 10 நாட்கள் செய்தாலே போதும் உங்களுடை கண்பார்வை பன்மடங்கு அதிகரிப்பதை நீங்களே பார்க்கலாம்.
டிப்ஸ்-1-ல் கூறிய அந்த பாலை குடித்த பிறகு படுக்கைக்கு செல்லுவதற்கு முன்பு 1 டீஸ்பூன் பசும்நெய்யை எடுத்துக்கொண்டு அதனை நமது உள்ளங்கால் மற்றும் கைமுட்டி மடங்கும் உள்பகுதியில் வைத்து ஒரு 5-10 நிமிடத்திற்கு நன்கு தேய்த்து வந்தால் உங்களுடை கண்பார்வை பன்மடங்கு அதிகரிப்பதை நீங்களே காணலாம்.
இப்படி மசாஜ் செய்வதால் உடலின் இரத்த ஓட்டம் சீராகும் அதனால் கண்பார்வையும் அதிகமாகும்.
குழந்தையின் கண் பார்வை திறனை அதிகரிக்கும் உணவுகள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |