சியாட்டிகா வலிக்கு உடனடி நிவாரணம் | Sciatica Treatment in Tamil
அதென்ன சியாட்டிகா என்று யோசிக்கிறீங்களா.? இதுவும் உடலில் ஏற்படக்கூடிய நோய்களில் ஒண்ணுதாங்க. இந்த நோய் பெரும்பாலும் ஆண்களை விட பெண்களைத்தான் அதிகமாக தாக்குகிறதாம். பெண்களுக்கு உடல் பலவீனம் குறைவு என்பதால் ஈஸியாகவே எல்லா விதமான நோய்களும் தாக்குவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. சியாட்டிக் என்பது சியாட்டிக் நரம்பை பாதிக்கும் பொதுவான வலியை கொண்டது. வலிகளில் தாங்க முடியாத வலி உணர்வினை கொடுக்கக்கூடியது. வாங்க இந்த நோயின் அறிகுறிகளையும் அதன் தீர்வினையும் படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!
பித்தம் அறிகுறிகள் |
சியாட்டிகா என்றால் என்ன?
சியாட்டிகா என்பது ஒரு நரம்பினுடைய பெயர். முதுகில் தொடங்கி காலின் பின்பகுதியில் குதிகால் வரை நீளும் ஒரு நரம்பின் பெயர் தான் சியாட்டிகா. இது உடலில் இருக்கும் நீளமான ஒற்றை நரம்பு பெயர் தான் சியாட்டிகா. இதனை பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
சியாட்டிகா அறிகுறி:
- கீழ்முதுகு வலி
- காலின் பின்புறத்தில் வலி
- இடுப்பு வலி
- காலில் எரியும்
- காலில் பலவீனம்
- கால் நகர்த்துவதில் சிரமம்
- பின்புறத்தில் வலி
- படப்பிடிப்பு வலி
- கால்விரல்களில் வலி
- குளியலறை அவசரம்
சியாட்டிகாவின் அறிகுறி:
- சியாட்டிகா நோயின் ஆரம்ப கட்ட அறிகுறி முதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்படும்.
- அதை தொடர்ந்து காலில் வலி அதிகரிக்கும்.
- நரம்பை இழுப்பது போன்ற உணர்வு முதுகு பகுதி முதல் காலின் கீழ் பகுதி வரை இருக்கும்.
- இதனையும் நாம் கவனிக்காமல் விட்டோம் என்றால் தொடைப்பகுதி மரத்துப்போய்விடும்.
- மரத்துப்போவது போன்ற பிரச்சனை ஒரு காலில் தான் ஏற்படும். ஒரு சிலருக்கு இந்த அறிகுறி இரண்டு காலிலும் ஏற்படக்கூடும்.
- உட்கார்ந்த பிறகு எழுவதற்கும், எழுந்த பிறகு மீண்டும் அமறுவதற்கு மிகவும் சிரமம் ஏற்படும்.
- காலின் பின் பகுதியில் அதிக வலியும், எரிச்சலும் உண்டாகலாம்.
- இந்த நோய் பெரும்பாலும் 40 வயதினை கடந்தவர்களை தான் பெரிதும் பாதிக்கிறது.
தீவிர அறிகுறி:
- முதுகு பகுதியிலிருந்து கால் பகுதி வரை இடைவிடாமல் தொடர்ந்து வலி இருந்துக்கொண்டே இருக்கும்.
- முதுகு பகுதியில் முதுகெலும்பில் வீக்கம் அல்லது சிவந்து போதல் பிரச்சனை ஏற்படும்.
- சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் வரலாம்.
- சிலருக்கு சிறுநீர்ப்பை அல்லது குடல் கட்டுப்பாட்டை இழக்க செய்யலாம்.
லோ சுகர் அறிகுறிகள் |
சியாட்டிகா எதனால் ஏற்படுகிறது:
குதிகால் பகுதிகளில் உயரமான காலணிகளை அணிபவர்கள், கடினமான அல்லதுமென்மையான படுக்கையில் உறங்குபவர்கள், அதிக எடை உள்ள பொருள்களை தொடர்ந்து தூக்குபவர்களுக்கு, எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பவர்களுக்கு, மூட்டு பகுதிகளில் வீக்கம் ஏற்படுவதால் இந்த சியாட்டிகா பிரச்சனை ஏற்பட காரணமாக இருக்கிறது.
சிகிச்சை:
- சியாட்டிகா நோய்க்கு பிஸியோதெரபி நல்ல சிகிச்சையாக இருக்கிறது.
- சியாட்டிகா நோய் இருப்பது போன்று நீங்கள் உணர்ந்தால் மருத்துவரை அணுகி உடனே அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
- ஆரம்ப காலத்திலே இதனை கண்டறிந்துவிட்டால் ஈசியாக குணப்படுத்திவிடலாம்.
- சில நேரத்தில் இந்த நோய்க்கு கை வைத்தியமும் உதவிகரமாக இருக்கிறது.
- மேற்கூறிய அறிகுறிகளை நீங்கள் அடிக்கடி உணர்ந்தால் மருத்துவரிடம் சென்று அறிகுறிகள் குறித்து ஆலோசனை செய்வதோடு தகுந்த சிகிச்சையும் எடுத்துகொண்டால் சியாட்டிகாவை உடனே சரிசெய்து விடலாம்.
தைராய்டு அறிகுறிகள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |