தண்ணீர் அதிகமாக குடிப்பதால் | Thanneer Kudikum Murai
நண்பர்களே வணக்கம்..! இன்று ஆரோக்கியம் பதிவில் தண்ணீர் குடிப்பது நன்மையா தீமையா என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக ஒரு மனிதனுக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்காக தண்ணீர் மட்டும் குடித்தால் போதுமா என்று கேட்டால் அது தவறு. தண்ணீர் குடிப்பது என்றால் அதனை எப்போதும் குடித்துக்கொண்டு இருப்பது தவறு. தண்ணீர் குடிப்பதற்கும் முறை இருக்கும். அப்படி தண்ணீர் குடித்தால் நமக்கு நன்மையா தீமையா என்பதை பற்றி பார்ப்போம்வாங்க.
மண் பானை தண்ணீர் பயன்கள்..! |
மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்:
பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு மனிதன் 1.1/2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகம் வெயிலில் வேலைபார்க்கும் மனிதர்கள் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது.
தண்ணீர் குடிக்கும் முறை:
- முதலில் தண்ணீர் குடிக்கும் போது நின்றுகொண்டு தண்ணீர் குடிக்கக்கூடாது. அப்படி நின்ற படி தண்ணீர் குடித்தால் சிறுநீரக கோளாறுகள் ஏற்படும்.
- தண்ணீர் மட்டும் குடித்து 4 நாட்கள் கூட உயிர்வாழ்ந்தார்கள் என்று சொல்கிறார்கள். அதனால் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
- அப்படி அதிகம் தண்ணீர் குடித்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று அறிஞர்கள் கூறுகிறனர்.
- முதலில் காலை எழுத்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால் உங்களிடையே உள்ளுறுப்பு நன்கு புத்துணர்ச்சி பெற்று சீராக செயல்படும். அதற்காக தான் காலையில் எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- பிறகு குளிக்க செல்லுவதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. அது எதற்காக என்றால் குளித்துவிட்டு வரும் பொழுது உடலில் உள்ள சக்திகள் வெளியேறி வெறும்வயிராக இருக்கும் அதனால் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.
- பின்பு சாப்பிட செல்வதற்கு முன் 15 முன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிங்கள். ஏனென்றால் உங்களின் உணவு செரிமானத்திற்கு இந்து பெரிதும் உதவுகிறது.
- நன்றாக சாப்பிடும் நபர்கள் உடல் எடை அதிகரிக்க கூடாது என்பவர்கள் சாப்பிட செல்வதற்கு முன் 2 டம்ளர் தண்ணீர் குடிங்கள் காரணம். அது உங்களின் உணவுகளை மிகவும் வேகமாக செரிமானத்திற்கு உட்கொள்ளும். அதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.
- தூங்க செல்வதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது மாரடைப்பு பிரச்சனைகள் வராமல் தடுக்கும். இந்த நோய் உள்ளவர்கள் மட்டும்தான் குடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அனைவரும் இதனை தொடர்ந்து செய்யலாம்.
- அதே போல் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது தண்ணீர் குடிப்பது அவசியம். திரும்பி வரும் போதும் தண்ணீர் குடிப்பது அவசியம். உட்கார்ந்த நிலையில் தண்ணீர் குடிப்பது நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |