தினமும் நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் 10 நன்மைகள் என்ன தெரியுமா..?

Advertisement

நடைப்பயிற்சி நன்மைகள் | Walking Exercise Benefits in Tamil 

வணக்கம் பிரண்ட்ஸ் இன்றைய பதிவில் நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை விரிவாக பார்ப்போம். உடற்பயிற்சியிலே மிக மிக எளிமையான பயிற்சி நடைப்பயிற்சி தான். இருப்பினும் இந்த நடைப்பயிற்சி செய்யக்கூட மக்கள் அதிக கடினமாக எண்ணுவார்கள். இருப்பினும் நடைப்பயிற்சி என்பது நமது உடலை எப்பொழுதும் புத்துணர்ச்சியாகவும், கட்டுக்கோப்புடனும் வைத்திருக்கும் பயிற்சி தான் நடைப்பயிற்சி. சரி வாங்க நடைப்பயிற்சி செய்வதினால் கிடைக்கும் 10 நன்மைகளை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம்.

உடல் எடை குறையும்:

உடல் எடை குறைய

Walking Exercise Benefits in Tamil – பொதுவாக நாம் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமே நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் அதிகப்படியான கலோரிகளே முதல் காரணம் என்று சொல்லலாம். இந்த கலோரிகளை எரிப்பதற்கு மிகவும் சிறந்த பயிற்சி தான் நடைப்பயிற்சி.  தினமும் ஒருவர் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்தாலே போதும் அவர்கள் உடம்பில் உள்ள 245 கலோரிகளை மிக எளிமையாக எரித்துவிடலாம். இதன் மூலம் நமது உடலில் ஒரு நாளைக்கு 30 சதவீதம் கலோரிகளை எரிக்க முடியும். இதனால் உடல் எடையானது மிக வேகமாக குறைய ஆரம்பிக்கும். இதுமட்டும் இல்லாமல் வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து நமக்கு தொப்பை விழாமல் இருப்பதற்கும் உதவி செய்கிறது இந்த நடைப்பயிற்சி.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:

இரத்த சர்க்கரை அளவை குறைக்க

நடைப்பயிற்சி நன்மைகள் – பொதுவாக நாம் நடைப்பயிற்சி செய்வதினால் உடலில் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகிறது என்பதால் இதன் முதல் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுகோஸும் குறையும் இதன் மூலமாக இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். இதுமட்டும் இல்லாமல் நமது உடலில் இன்சுலின் சுரப்பையும் அதிகப்படுத்துகிறது இந்த நடைப்பயிற்சி என்று பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும். மேலும் நாள்பட்ட சர்க்கரை நோயினால் ஏற்படக்கூடிய இருதயம் சார்ந்த பிரச்சனைகள், சிறுநீரக செயலிழப்பு போன்ற ஆபத்தான பிரச்சனைகள் வராமலும் பாதுகாக்கக்கூடியது இந்த நடைப்பயிற்சி.

இதயத்தை வலுவாக்கும்:

Walking Exercise Benefits in Tamil – தினந்தோறும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் இதயத்தில் உள்ள தசைகள் வலுவடையும். குறிப்பாக இதயத்தில் இரத்த ஓட்டம்சீராக இருக்கும். இதன் மூலம் இதயம் வலுவாக்கும். இதுமட்டுமில்லாமல் இரத்த அழுத்தத்தையும் சீராக வைத்துக்கொள்ளும் இந்த நடைப்பயிற்சி. இந்த நடை பயிற்சி செய்வதன் மூலம் சுமார் 35 சதவீதம் இருதயம் சார்ந்த பிரச்சனைகள் வருவதை தடுக்க முடியும் என்று பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கெட்ட கொழுப்பை குறைக்கும்:

கெட்ட கொழுப்பு குறைய

நடைப்பயிற்சி நன்மைகள் – ஒருவர் தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது அவர்களது உடலில் கெட்ட கொழுப்புகள் குறையப்படுகிறது. மேலும் நமது உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக்கொள்ள நடைப்பயிற்சி உதவும். இதுமட்டும் இல்லாமல் HDL என்று சொல்ல கூடிய நல்ல கொழுப்புகளை நமது உடலில் அதிகரிக்க செய்யும் இந்த நடைப்பயிற்சி. இது மட்டும் இல்லாமல் heart black and stock போன்ற ஆபத்தான பிரச்சனைகள் வராமலும் தடுக்கும்.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்:

இரத்த அழுத்தத்தை குறைக்க

Walking Exercise Benefits in Tamil – தினமும் இரத்த அழுத்தம் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் உள்ள இரத்த நாளங்கள் சீராக சுருங்கி விரியும். இதன் மூலம் அதிக இரத்த அழுத்தத்தையும் குறைத்து, சீராக வைக்கக்கூடியது இந்த நடைப்பயிற்சி.

நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கும்:

Walking Exercise Benefits in Tamil – நாம் நடைப்பயிற்சி செய்யும்போது குறைந்த காற்று அதிக நேரம் நமது நுரையீரலுக்கு வந்து சேரும். நுரையீரல் திறன் அதிகரிப்போதுடன் நுரையீரல் நன்கு வலிமைபெறும். இதன் மூலம் நமது உடல் முழுவதும் ஆக்சிஜன் சீராக செல்வதற்கும் மிக உதவியாக இருக்கும் இந்த நடைப்பயிற்சி.

மன சோர்வை குறைக்கும்:

மன சோர்வு நீங்க

நடைப்பயிற்சி நன்மைகள் – நாம் தினமும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் நமது மூலையில் Serotonin என்று சொல்லக்கூடிய ஹாப்பி ஹார்மோன்கள் உற்பத்தியாக்குகிறது. இதன் மூலம் நமது மனம் சோர்வு நீங்கி மனமகிழ்ச்சி உண்டாகும். இது மட்டும் இல்லாமல் என்டார்பின்கள் (Endorphins) என்று சொல்லக்கூடிய புரத ஹார்மோன்களை நமது மமூலையில் சுரக்கும். இது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் உதவி செய்கிறது இந்த நடைப்பயிற்சி.

தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக்கும்:

தசைகள் மற்றும் எலும்பு

Walking Exercise Benefits in Tamil – தினமும் நடைப்பயிற்சி செய்யும் போது தசைகள் நன்கு இறுக்கமடையும். இதன் மூலமாக தசைகள் நன்கு வலிமையாகும். குறிப்பாக பலவீனமான தசைக்காரணமாக ஏற்படக்கூடிய தசைப்பிடிப்பு பிரச்சனைகள் வருவதை தடுக்கும். இது மட்டுமில்லாமல் எலும்புகளுக்கு இடையில் உள்ள இணைப்பு திசுக்களையும் வலுவாக்கக்கூடிய  இந்த நடைப்பயிற்சி. இதன் மூலம் மூட்டு வலி, எலும்பு வலி போன்ற எலும்பு சார்ந்த பிரச்சனைகள் தடுக்கிறது இந்த நடைப்பயிற்சி.

செரிமானம் எளிதாகும்:

நடைப்பயிற்சி நன்மைகள் – உக்கார்ந்து இடத்திலேயே அதிக நீரம் பணிபுரிபவர்களுக்கு தான் அஜீரணம் தொடக்கி மலச்சிக்கல் வரை அனைத்துவிதமான செரிமானம் சார்ந்த பிரச்சினைகளினால் அவதிப்படுகின்றன. அப்படிப்பட்டவர்கள் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை 5 முதல் 10 நிமிங்கள் வரை நடைப்பயிற்சி செய்வதன் மூலம் செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

ஆயுளை அதிகரிக்கும்:

Walking Exercise Benefits in Tamil – பொதுவாகவே லைப் ஸ்டைல் டிசீஸ் என்று சொல்லக்கூடிய சர்க்கரை நோய், தைராய்டு, இரத்த கொதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் எதுவென்று கேட்டல் Microvascular Damage என்று சொல்லக்கூடிய நுண்ணிய இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதும், உடலில் ஏற்படக்கூடிய அதிகப்படியான வீக்கம் (Inflammation) காரணம் என்று நவீன ஆராய்ச்சியில் சொல்லப்படுகிறது. இந்த விதமான பாதிப்புகளை தடுத்து ஆயுசுக்கும் எந்த விதமான நோய்களும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ தினமும் நடைப்பயிற்சியை செய்யுங்கள் நன்றி வணக்கம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement