பெண்களின் அடி வயிறு வலி | Period Stomach Pain Relief in Tamil

Period Stomach Pain Relief in Tamil

பெண்களின் அடி வயிறு வலி குணமாக இயற்கை மருத்துவம்

பொதுவாக இந்த பிரச்சனை பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகம் ஏற்படும். இந்த அடி வயிற்று வலி சாதாரணமான ஒன்றாக இருந்தாலும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிகப்படியான அடி வயிற்று வலி இருந்தால் அதனை அலட்சியமாக நினைக்க கூடாது. இது போன்ற வலிகள் கருப்பையில் சில பிரச்சனைகளை உண்டாக்கலாம். ஆகவே மருத்துவர்களிடம் சென்று அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இருப்பினும் இந்த வலியை கட்டுப்படுத்த சில இயற்கை மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளலாம். இதனால் பெண்களின் அடி வயிறு வலி குணமாகும். சரி வாங்க மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடி வயிற்று வலி குணமாக சில இயற்கை மருத்துவ குறிப்புகளை இந்த பதிவில் நாம் படித்தறியாம் வாங்க.

Period Stomach Pain Relief in Tamil

இஞ்சி:

இஞ்சி சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்று சொல்லலாம். இந்த இஞ்சி மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடி வயிற்று வலியை குணப்படுத்த மிகவும் பயன்படக்கூடிய பொருள் என்று உங்களுக்கு தெரியுமா.. ஆம் இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்துக் குடிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் அடி வயிற்று வலி குறையும். மேலும் உடல் வலியும் குறையும். அதேபோல் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும். இது மாதவிடாய் தள்ளிப்போதலையும் தடுக்கும்.

பட்டை டீ:

பட்டைய நாம் வெறும் வாசனைக்காக தான் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் பட்டையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. அரை அல்லது கால் இஞ்சு பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் அடி வயிற்று வலிக் குறையும். மேலும் இந்த டீயின் சுவை அத்தனை நன்றாக இல்லை என்றாலும் குடித்தால் உங்களது அடி வயிற்று வலிக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்.

அதிக உதிரப்போக்கு நிற்க

ஊட்டச்சத்து நிறைந்த மாத்திரைகள்:

நீங்கள் உணவருந்திய பிறகு விட்டமின் பி அல்லது கால்சியம் மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம். இதன் மூலம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையும்.

பப்பாளி:

பெண்கள் பொதுவாக பப்பாளியை மாதவிடாய் ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே சாப்பிடலாம். இதனால் கர்பப்பை வலுபெற்று அதன் வேலையைச் சிறப்பாகச் செய்யும். இரத்தப்போக்கும் சீராகும். வயிற்றுவலியும் குறைவாகும். அதிக உதிரப்போக்கு ஏற்படும் பெண்கள் இந்த பப்பாளி பழத்தை உங்களது மாதவிடாய் நாட்களில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து கொள்வது நல்லது.

சத்தான உணவுகள்:

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சத்துள்ள உணவுகளை அதிகளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகவே அரிசி உணவோடு மீன், சிக்கன், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆளி விதை:

ஆளி விதையில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கின்றன. இது கர்பப்பை தடையில்லாமல் வேலை செய்ய உதவுகிறது. கருவுறுதல் பிரச்னை இருந்தாலும் சரி செய்கிறது. இதை தினமும் ஒரு மேசைக்கரண்டி உண்டு வந்தால் வயிறு இறுக்கிப்பிடித்தல், வலி போன்ற பிரச்னைகள் இருக்காது.

பேரிச்சை பழம்:

பெண்கள் தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வர மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் குறையும்.

வெந்தயம்:

வெந்தயத்தை வெறும் வயிற்றில் உண்பதால் வயிறு இறுக்கிப்பிடித்தல் குறையும். வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து பேஸ்டாக்கி ஒரு ஸ்பூன் உண்ணலாம். இதன் மூலம் வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சோம்பு:

இந்திய மசாலா வகைகளில் முக்கிய பொருள். இது உணவுக்கு மட்டுமல்ல. நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கிறது. இதை அரைத்து வெது வெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாக பாட்டி வைத்தியம்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips