முருங்கை கீரை தீமைகள் | முருங்கை கீரை சூப் தீமைகள்
வணக்கம் நண்பர்களே.. நாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை தினமும் நல்லது உணவு முறையில் எடுத்துக்கொள்கிறோம். இருந்தாலும் ஆரோக்கியம் என்று ஆரோக்கியம் நிறைந்த உணவு பொருட்களை அதிகம் எடுத்து கொண்டாலும். அது நமது உடலுக்கு அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். அதாவது அளவுக்கு மீறி அருந்தினால் அமிர்தமும் நஞ்சு என்று நமது முன்னோர்கள் கூறியுள்ள பழமொழிக்கு இதுவும் உதாரணம் என்று வைத்துக்கொள்ளலாம். முருங்கை கீரையில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
பலவகையான ஆரோக்கியம் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்து. இந்த காரணமாகவே நமது முன்னோர்கள் உணவு முறையிலும் சரி, மருத்துவ முறையிலும் சரி அதிகளவு பயன்படுத்தி வந்தனர். இருப்பினும் இந்த முருங்கை கீரையை அதிகம் எடுத்துகொல்வத்தினாலும் சில பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அவற்றில் பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சரி வாங்க முருங்கை கீரை தீமைகள் பற்றி படித்தறியலாம்.
ஊட்டச்சத்துக்கள்:
இந்த முருங்கை கீரையை ஏரளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது அதாவது முருங்கை கீரையில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி1 (தியாமின்), வைட்டமின் பி2 (ரைபோஃப்ளேவின்), வைட்டமின் பி3 (நியாசின்), வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளன. மெக்னீசியம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் ஆகிய தாதுக்களும் நிறைந்துள்ளன.
ஒரு கப் முருங்கை கீரையில் தோராயமாக 2 கிராம் புரதம் உள்ளது. மேலும் தினசரி தேவையாக பரிந்துரைக்கப் பட்டுள்ள அளவில் மெக்னீசியம் 8 சதவீதமும், வைட்டமின் பி6 19 சதவீதமும், இரும்பு சத்து 11 சதவீதமும், ரிபோஃப்ளேவின் 11 சதவீதமும் மற்றும் வைட்டமின் ஏ 9 சதவீதமும் உள்ளது. இத்தகைய சத்துக்கள் இரத்த சர்க்கரையை குறைக்கிறது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது, கல்லீரலை பாதுகாக்கிறது, சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது, வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்துகிறது, உடல் எடையை குறைக்க உறவுகிறது மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இருப்பினும் இதனை நாம் அதிகமாக எடுத்து கொண்டாலும் சில பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும் அவை என்னென்ன என்பதை பின் வருவனவற்றுள் பார்க்கலாம்.
முருங்கை கீரை சூப் தீமைகள்:
நீரிழிவு நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் முருங்கை கீரை சூப்பை தவிர்க்க வேண்டும் அல்லது குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக, இரவில் முருங்கை கீரையோ அல்லது முருங்கை கீரை சூப்போ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
முருங்கை கீரைக் தீமைகள் – Murungai Keerai Theemaigal in Tamil:
- முருங்கைக் கீரை பொதுவாக பெரும்பாலான வர்களுக்கு பாதுகாப்பானதாகவும் ஆரோக்கிய மானதாகவும் கருதப்பட்டாலும், கவனிக்க வேண்டிய சில சிறிய பக்க விளைவுகள் உள்ளன. அவை
- கர்ப்பிணிப் பெண்களுக்கு முருங்கையின் வேர்கள், பட்டை மற்றும் சாறு ஆகியவை கருப்பைச் சுருக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அவை கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது.. ஆகவே கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் முருங்கை கீரை சேர்ப்பதற்கு முன்பு தங்கள் மருத்துவர் களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
- இரத்தத்தை மெல்லித்தாகும் மருந்து உட்கொள்பவர்கள் முருங்கை கீரை உணவில் சேர்ப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.
- முருங்கை கீரை அதிகம் சாப்பிட்டால் வயிற்று வலி, வாயு தொல்லை, வயிற்றுப்போக்கு மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
- முருங்கை கீரை சுவை பிடிக்காதவர்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும் என்பதால் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
- தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் முருங்கை கீரை சாப்பிடுவதை தவிர்க்கவும் சில பொருட்கள் குழந்தைகளுக்கு நல்லதாக இருக்காது.
- முருங்கை விதை தீமைகள் சாறுகள் நோயெதிர்ப்பு உயிரணுக்களில் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும் என்பதால் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
- இந்த முருங்கை கீரையை இரவில் சாப்பிடக் கூடாது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |