வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வில்வ இலை யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா..?

Updated On: October 27, 2025 5:44 PM
Follow Us:
Vilva Ilai Side Effects in Tamil
---Advertisement---
Advertisement

Vilva Ilai Side Effects in Tamil

வணக்கம் அன்பான நண்பர்களே… இன்றைய ஆரோக்கியம் பதிவில் வில்வ இலை சாப்பிடுவதால் நமது உடலுக்கு என்ன பக்க விளைவுகள் ஏற்படுகிறது மற்றும் வில்வ இலை தீமைகள் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த வில்வ மரங்கள் பெரும்பாலும் புனித ஸ்தலங்களில் அதிகம் காணப்படுகின்றன.

இந்த வில்வ மரம் தெய்வ சக்தி கொண்ட மரம் என்றும் கூறுவர். இந்த மரத்தில் இருக்கும் இலைகள் 3 கடவுள்களை குறிக்கின்றன. இந்த வில்வ மரம் இலையுதிர்கால வகையை சார்ந்தது. அதுபோல வில்வ இலையில் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. இருந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கின்றன. ஆகவே வில்வ இலையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

வில்வம் மருத்துவ குணங்கள்

வில்வ இலை: 

வில்வ இலை

இந்த வில்வ மரம் கோவில்களில் இருப்பதால் மட்டும் சிறப்பானவை அல்ல. வில்வ மரத்தில் இருக்கும் இலை, பூ, காய், கனிகள், வேர், பட்டை போன்றவையும் சிறப்பு பெற்றதாகவே கருதப்படுகிறது.

வில்வ பூவில் தொடங்கி வில்வ மரத்தின் பட்டை வரை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வில்வ மர நிழல் மற்றும் காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது. வில்வ இலை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

இருந்தாலும் இந்த வில்வ இலையை அதிகளவு எடுத்து கொள்வதால் சில பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. அதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

வில்வ இலை தீமைகள்: 

  • வில்வ இலையில் பல அற்புதமான நன்மைகள் காணப்படுகின்றன.
  • இருந்தாலும் இந்த வில்வ இலையை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது.
  • அதிகளவு வில்வ இலையை உட்கொள்வதால் சில தேவையற்ற உபாதைகள் ஏற்படுகிறது.
  • இந்த வில்வ இலையை அதிகம் சாப்பிடுவதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.

கர்ப்பிணி பெண்கள் வில்வ இலை சாப்பிடலாமா..? 

  • இந்த வில்வ இலையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாது. இதில் இருக்கும் சத்துக்கள் கர்ப்பம் உருவாவதை தடுக்கிறது. அதனால் கர்ப்பிணி பெண்கள் இந்த வில்வ இலையை சாப்பிட கூடாது.
  • அதேபோல திருமணமான தம்பதிகளும் இந்த வில்வ இலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • இந்த வில்வ இலையில் கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் பண்புகள் இருப்பதால் திருமணமான தம்பதிகள் வில்வ இலை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
  • இந்த வில்வ இலையை மலசிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் வில்வ இலை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
  • அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் வில்வ இலையை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now