ஆளி விதை பொடி சாப்பிடும் முறை..! Aali Vithai Benefits in Tamil..!

ஆளி விதை பொடி சாப்பிடும் முறை

ஆளி விதை சாப்பிடும் முறை..! Flaxseed Powder Benefits in Tamil..!

ஆளி விதை பொடி சாப்பிடும் முறை:- ஆளி விதை ஒரு உணவு பொருள் ஆகும். நம் உடலுக்கு தேவைப்படும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இந்த ஆளி விதையில் நிறைந்துள்ளது. இந்த அப்களில் விதையை நாம் சரியான முறையில் எடுத்துக்கொள்ளும் போது உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.

சரி வாங்க இந்த பதிவில் ஆளி விதை பொடி சாப்பிடும் முறை மற்றும் அதனை சாப்பிடுவதினால் எது மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகள் பலனளிக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம்.

ஆளி விதை பொடி சாப்பிடும் முறை..!

உங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு ஆளி விதையை எடுத்து கொள்ளுங்கள் உதாரணத்திற்கு 1/4 கிலோ, இவற்றை மிதமான சூட்டில் நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் அவற்றை நன்கு ஆறவைக்கவும், பின் மிக்சியில் பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் அரைத்த பொடியை நன்கு உலர்த்தி காற்று புகாத ஒரு சுத்தமான டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம். இந்த பொடியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

காலை எழுத்தும் பல் துலக்கிவிட்டு ஒரு கிளாஸ் நீரில் ஒன்றரை ஸ்பூன் சேர்த்து நன்றாக காலத்து கொள்ளுங்கள் பின் இந்த நீரை அருந்தலாம்.

அல்லது:

ஒரு சிறிய பவுலில் கெட்டியான தயிரை எடுத்து கொள்ளுங்கள், இவற்றில் சிறிதளவு ஆளி விதை பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் சாப்பிடுங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.

அல்லது:

இட்லி மாவில், சப்பாத்தி மாவில் மூன்று அல்லது நான்கு ஸ்பூன் ஆளி விதை பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் இப்படியும் பொடியை பயன்படுத்தலாம்.

அல்லது:

நீங்கள் சாப்பிடும் ஆரோக்கியம் நிறைந்த எந்த உணவிலும் இந்த ஆளி விதை பொடியை தூவி சாப்பிடலாம்.

ஊட்டச்சத்துக்கள்:

100 கிராம் ஆளி விதையில் 42 கிராம் கொழுப்பு, 18 கிராம் புரதம், 29 கிராம் கார்போ ஹைட்ரேட் மற்றும் 27 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் ஆளி விதையில் 520 கலோரிகள் நிறைந்துள்ளது.

மேலும் லிக்னன்ஸ், ஒமேகா-3 போன்ற உயரிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.

மேலும் இந்த ஆளி விதையில் வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

ஆளி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

உடல் எடை குறைய: ஆரோக்கியமான முறையில் உடல் எடையை முறைக்க நினைப்பவர்கள் தினமும் ஒன்றைரை ஸ்பூன் ஆளி விதை பொடியை எடுத்து கொள்ளலாம்.

இதன் மூலம் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உடல் உங்கள் வயதிற்கு ஏற்றது போல் கச்சிதமாக இருக்கும்.

புற்றுநோய் குணமாகும்: ஆளி விதையில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, புற்றுநோய் தாக்கத்தை எதிர்த்துப் போராடி தடுக்க உதவும்.

இவற்றில் உள்ள லிக்னன்கள், உடலினுள் கெமிக்கல்களால் மாற்றப்பட்டு, உடலில் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்கும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மார்பகம், புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறதாம்.

முடி வளர: ஆளி விதையை பொடி செய்தொ அல்லது அப்படியே சாப்பிடுவதினால் ஹார்மோன் குறைபாடுனால பெண்களுக்கு ஏற்படுற உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தா ஆளி விதை உதவிக்கிறது.

உடல் ஆரோக்கியம் மேம்பட: ஆளி விதையை நன்கு ஊறவைத்து அதனை அப்படியே சாப்பிடுவதினால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்குமாம். மேலும் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் சரி ஆகுமாம்.

ஆளி விதை சாப்பிடும் போது நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

  • ஆளி விதையில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இதனை நாம் அதிகளவு எடுத்துக்கொள்ள கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் நீங்கள் தான் உடல் உபாதைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
  • இவற்றை நாம் சாப்பிட்டவுடன் அதிக தண்ணீர் அருந்த வேண்டும் இல்லை என்றால் மலச்சிக்கல், வாய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
  • கர்ப்பிணி பெண்கள் ஆரம்ப கட்டத்துல இருக்குற பெண்கள் இதை உட்கொள்றதை தவிர்த்துடணும்.
மேலும் தெரிந்துகொள்ள–> ஆளி விதை மருத்துவ குணங்கள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Natural health tips in tamil