வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நெஞ்செரிச்சல் பாட்டி வைத்தியம் | Acidity Treatment in Tamil

Updated On: November 29, 2023 12:39 PM
Follow Us:
Acidity Treatment in Tamil
---Advertisement---
Advertisement

நெஞ்சு எரிச்சல் குணமாக பாட்டி வைத்தியம்..! Paati Vaithiyam for Acidity in Tamil

Heartburn Treatment in Tamil:- பொதுவாக நெஞ்செரிச்சல் பிரச்சனை என்பது நாம் சாப்பிடும் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவை சரியாக உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உணவை செரிக்க உதவும் அமிலமானது தேங்கி, வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். மேலும் அவை நீடித்தால், அந்த அமிலமானது உணவுக்குழல் வழியாக மேலே சென்று நெஞ்சில் எரிச்சலை உண்டாக்குகின்றன. இத்தகைய நெஞ்செரிச்சல் பிரச்சனையை சிலவகையான பாட்டி வைத்தியம் மூலம் மிக எளிதாக குணப்படுத்தலாம். சரி வாங்க இந்த பதிவில் நெஞ்சு எரிச்சல் குணமாக பாட்டி வைத்தியம் என்னென்ன இருக்கிறது  என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம்.

நெஞ்செரிச்சல் பாட்டி வைத்தியம் | Heartburn Treatment in Tamil

நாம் சிலவகையான உணவுகளை சாப்பிட்ட பிறகு ஏற்படும் அஜீரணம் காரணமாக சிலருக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படும் அப்படி பட்டவர்கள் கீழ் சொல்லப்பட்டுள்ள கஷாயத்தை செய்து அருந்துவதன் மூலம் நெஞ்செரிச்சல் பிரச்சனை சரி ஆகும்.

கஷாயம் செய்முறை:

தேவையான பொருட்கள்:

  1. புதினா – ஒரு கைப்பிடியளவு
  2. ஏலக்காய் – 1
  3. இஞ்சி – சிறிய துண்டு
  4. பனை வெல்லம் – தேவையான அளவு
  5. சோம்பு – 1/2 ஸ்பூன்
  6. கிராம்பு பொடி – 1/4 ஸ்பூன்

அசிடிட்டி பாட்டி வைத்தியம் – கஷாயம் செய்முறை:

  • அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சோம்பு மற்றும் கிராம்பு பொடியை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • பின்பு புதினா இலை, இடித்த ஏலக்காய் மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • இறுதியாக பனை வெல்லம் சேர்த்து ஒரு டம்பளர் அளவு சுண்டும் வரை நன்றாக காய்ச்சி கொள்ளுங்கள்.
  • பிறகு வடிகட்டி மிதமான சூட்டில் பருக வேண்டும். இவ்வாறு அருந்துவதினால் நெஞ்செரிச்சல் பிரச்சனை உடனடியாக சரியாகிவிடும்.

நெஞ்செரிச்சல் நீங்க ஏலக்காய் கஷாயம்:

Acidity Treatment in Tamil

தேவையான பொருட்கள்:

  1. ஏலக்காய் – 2 (இடித்தது)
  2. தண்ணீர் – 1 1/2 டம்ளர்

செய்முறை:

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அவற்றில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சவும். பின் இடித்து வைத்துள்ள இரண்டு ஏலக்காயை சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். பின் அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டி கொள்ளுங்கள். பின் மிதமான சூட்டில் அருந்த வேண்டும். ஏலக்காய் நறுமணம் தரும் பொருள்மட்டும் இல்லை ஜீரணம் சக்தியை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதினால். இந்த ஏலக்காய் நீரை அருந்துவதன் மூலம் நெஞ்செரிச்சல் பிரச்சனையும் குணப்படுத்துகின்றது.


நெஞ்செரிச்சல் குணமாக புதினா டீ:

 

பொதுவாக புதினா இலைகள் செரிமான பிரச்சனையை சரி செய்து, ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. ஆகவே நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் புதினா டீ தயார் செய்து அருந்தி வருவதன் மூலம் நெஞ்செரிச்சல் பிரச்சனை சரியாகும்.

புதினா டீ செய்ய தேவையான பொருட்கள்:

  1. புதினா – ஒரு கை அளவு
  2. தேன் – தேவையான அளவு
  3. தண்ணீர் – 2 டம்ளர்
  4. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

செய்முறை:

இரண்டு டம்ளர் நீரில் ஒரு கையளவு புதினா சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டி கொள்ளுங்கள். பிறகு அதனுடன் தேவையான அளவு தேன் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அருந்த வேண்டும். இவ்வாறு அருந்துவதன் மூலம் நெஞ்செரிச்சல் பிரச்சனை குணமாகும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now