அஜினோ மோட்டோவை உணவில் எந்த அளவு சேர்க்கவேண்டும் தெரியுமா.? அதிகமாக சேர்த்தால் என்ன நடக்கும் .!

ajinomoto salt side effects in tamil

Ajinomoto Uses and Side Effects in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில்   ஆரோக்கிய பதிவில் எல்லோருக்கும் பயனுள்ள ஒரு பதிவு பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். அதாவது நாம் சமைக்கும் உணவுகளின் சுவையை அதிகரிக்கும் அஜினோமோட்டோவை எந்த அளவு உபயோகிக்க வேண்டும் என்பதை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாக இந்த அஜினோமோட்டோ கலந்த உணவுகள் பெரும்பாலும் கல்யாண வீடுகளிலும், ஹோட்டல்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இது போன்று  அளவுக்கு அதிகமாக அஜினோமோட்டோ கலந்த உணவுகளை சாப்பிடும் பொழுது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனை எந்த அளவு உபயோகிக்க வேண்டும் என்பதை பற்றி நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ஐந்து உயிருக்கு ஆபத்தான உணவுகள்..!

 

அஜினோமோட்டோ என்றால் என்ன.?

அஜினோமோட்டோ என்பது ஒரு வகையான உப்பு என்று சொல்லப்படுகிறது. இதனுடைய வேதியியல் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும். இந்த அஜினோமோட்டோவை எம்எஸ்ஜி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த அஜினோமோட்டோகள் எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா.? அஜினோமோட்டோவை  சோடியம் மற்றும் குளுட்டமிக் அமிலத்தில்  இருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும்  இவை  தாவரவகை உணவுகளான கரும்பு, சோளம், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

அஜினோமோட்டாவை உணவில் எடுத்துக்கொள்ளும் அளவு:

உணவின் சுவைகளை அதிகரிக்கும் இந்த அஜினோமோட்டோவை குறைந்த அளவுகளில் பயன்படுத்தும் பொழுது எந்தவிதமான பாதிப்புகளும் இருக்காது. ஆனால் இது சுவையின் தன்மையை அதிகரிக்கிறது என்று உணவில் அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது பலவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி அஜினோமோட்டாவை 0.5 கிராம் அளவிற்கு எடுத்து கொள்வது நல்லது என்றும் சொல்லப்படுகிறது.

அஜினோமோட்டோ தீமைகள் | Ajinomoto Side Effects in Tamil:

அஜினோமோட்டோவை உணவில் அதிக அளவு எடுத்துக்கொள்ளும் பொழுது உடலில் வியர்வை பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது. இது போன்ற  வியர்வை பிரச்சனைகள் ஏற்படும் பொழுது உடலில் நீரிழப்பு  ஏற்படுவதற்கும்  காரணமாக உள்ளது.

இந்த அஜினோமோட்டோவில் அதிக அளவிலான சோடியங்கள் நிறைந்து இருப்பதால்  உடலில் மூட்டு மற்றும் தசைகள் சம்மந்தப்பட்ட வலி பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

அஜினோமோட்டோவில் அதிகமான மோனோசோடியம் குளுட்டமேட் இருப்பதால் தூங்கும் நேரங்களில் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு காரணமாக உள்ளது. அஜினோமோட்டோ உள்ள உணவுகளை சாப்பிடும் பொழுது தூக்கத்தில் அதிகமான குறட்டை ஏற்படுவதற்கும்  வாய்ப்பாக உள்ளது.

அஜினோமோட்டோ கலந்த உணவுகளை அதிக அளவு சாப்பிடும் பொழுது வயிற்றில் எரிச்சலை உண்டாக்கி, குடல் பகுதியில் அமில தன்மைகளையும் உண்டாக்குவதற்கு காரணமாக உள்ளது. எனவே இதுபோன்ற பிரச்சனைகளினால் செரிமான பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

இந்த அஜினோமோட்டோவை நாளுக்கு நாள் அதிகமாக பயன்படுத்தும் பொழுது இரத்த அழுத்தம் பாதிப்புகளும், இதனால் கடுமையான தலை வலியும் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்