தோல் நோய்க்கு சாப்பிட மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

தோல் நோய்க்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் | Avoid Food For Skin Allergy in Tamil

நம்முடைய உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் மாறி வருவதால் உடம்பில் பல விதமான நோய்களை சந்திக்கின்றோம். அதில் முக்கியமான ஒன்று தோல் நோய்கள். சிலருக்கு ஒரு சில உணவுகளை சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு, அழற்சி அல்லது மற்ற ஒவ்வாமைகள் ஏற்படலாம். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் தோல் அழற்சி உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடலாம், சாப்பிட கூடாது என்பதை  படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

தோல் நோய்கள்:

படர் தாமரை, தேமல், சோரியாசிஸ் மற்றும் தோளில் ஏற்படகூடிய நோய்கள் அனைத்தும் தோல் நோய்கள் எனப்படும்.

உப்பு:

Thol Noikku Thavirkka Vendiya Unavugal

 • Thol Noikku Thavirkka Vendiya Unavugal: தோல் நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் உணவில் உப்பின் அளவை குறைத்து கொள்வது நல்லது.
 • தயிர் மற்றும் கஞ்சி சாதம் போன்ற உணவுகளை உப்பு சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது. மேலும் அதிக காரம் மற்றும் புளிப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.

முட்டை:

Skin Problems Avoid Foods in Tamil

 • முட்டையை தோல் நோய் உள்ளவர்கள் சுத்தமாக எடுத்து கொள்ள கூடாது. ஏனெனில் இது உங்கள் உடம்பில் மேலும் அரிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • பால் சம்மந்தமான உணவு பொருட்களை சாப்பிட கூடாது.

அசைவ உணவு:

Skin Problems Avoid Foods in Tamil

 • Skin Problems Avoid Foods in Tamil: அசைவ உணவுகளை பெரும்பாலும் தவிர்த்து கொள்ளுங்கள். கருவாடு, Fast Food போன்ற உணவுகளை தவிர்த்து கொள்ளவும். கொழுப்பு அதிகமுள்ள மீன் வகைகளை எடுத்து கொள்ள கூடாது.
 • மேலும் எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிட கூடாது, இது போன்ற உணவுகள் உங்கள் உடம்பில் ஒவ்வாமை ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

பழங்கள், காய்கறி:

தோல் நோய்க்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்

 • தோல் நோய்க்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்: ஆப்பிள், ப்ளூ பெர்ரி, செர்ரி, பிரக்கோலி, கீரைகள், கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, கொத்தவரங்காய், பீன்ஸ் போன்ற உணவுகளை தோல் நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாது.
 • முட்டைகோஸ், கருணைக் கிழங்கு, வெங்காயம், தக்காளி, நல்லெண்ணெய், மாங்காய், புதிய அரிசி, புளித்த தயிர், மீன் போன்றவற்றை கரப்பான் நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
தோல் நோய் நீங்க மருத்துவம்

தோல் நோய்க்கு சாப்பிட வேண்டிய உணவுகள்:

தோல் நோய்க்கு சாப்பிட வேண்டிய உணவுகள்

 • அரிப்பு உள்ளவர்கள் சிக்கன் சூப் குடிக்கலாம். இதில் இருக்கும் சத்துக்கள் உங்களுக்கு அரிப்பு ஏற்படுவதை குணப்படுத்த உதவியாக இருக்கும்.
 • விட்டமின் ஏ, இ, நிறைந்த பழங்களை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். சாத்துக்குடி, கொய்யா, நெல்லிக்கனி ஆகிய பழங்கள் அவசியம். மற்றும் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ள வாழைப்பழம் சாப்பிடலாம்.
 • நல்ல கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள ஒமேகா-3 உணவு, பூசணிக்காய் விதைகள், எள்ளு போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
 • சுத்தமான மற்றும் ஆரோக்கியமான காய்கறிகளை அடிக்கடி உணவில் எடுத்து கொள்ளுங்கள், அப்பொழுது தான் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.
தோல் அரிப்பு இயற்கை மருத்துவம்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>உடல் ஆரோக்கிய குறிப்புகள்