இடுப்பு வலி முற்றிலும் நீங்க இந்த 5ல் ஒன்னு போதும்

இடுப்பு வலி நீங்க

இடுப்பு வலி முற்றிலும் நீங்க இதை மட்டும் சாப்பிடுங்கள் போதும்..!

இடுப்பு வலி குணமாக வீட்டு வைத்தியம் (Back pain treatment at home in tamil):-

இடுப்பு வலி சரியாக: இப்போது எல்லாம் கொஞ்சம் வேலை செய்தாலே போதும் இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி, உடல் சோர்வு என்ற பலவகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.

முன்னெல்லாம் வயதான பிறகு தான் இம்மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தனர். ஆனால் இப்போதோ இளம் வயதிலேயே இடுப்பு வலி (Back pain treatment ) பிரச்சனைகளை அதிகம் சந்திக்கின்றன.

சைனஸ் பிரச்சனையை போக்கும் பாட்டி வைத்தியம்..!

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

இதற்கு என்ன காரணம் என்றால் இப்போது இருக்க கூடிய அவசர உலகத்தில் நாம் எடுத்து கொள்ளும் உணவுமுறை மாற்றங்களினால், உடலுக்கு தேவையான ஓய்வினை கொடுக்காமல் இருப்பதினால், குறிப்பாக ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரில் வேலை செய்வது போன்று பல காரணங்களினால் இந்த இடுப்பு வலி பிரச்சனையை சந்திக்கின்றனர்.

எனவே இந்த இடுப்பு வலி குணமாக வீட்டிலேயே (back pain treatment home remedies in tamil) செய்ய கூடிய 5 வகை மருத்துவ குறிப்புகள் பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம். இந்த ஐந்து டிப்ஸில் ஏதேனும் ஒன்றை பாலோ செய்தாலே போதும் இடுப்பு வலி, முதுகு வலி, உடல் சோர்வு போன்ற அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.

ஒற்றை தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்..!

இடுப்பு வலி நீங்க டிப்ஸ்: 1

கொஞ்சம் வேலை பார்த்தாலே போதும் பலர் இடுப்பு வலி பிரச்சனையை அதிகம் சந்திப்பார்கள். அவர்கள் ஒரு கையளவு வறுத்த கொண்டக்கடலையுடன், 50 கிராம் நாட்டு சர்க்கரையை கலந்து சாப்பிடுங்கள். இவற்றை சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலை அருந்துங்கள், இவ்வாறு தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தாலே போதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இடுப்பு வலி (Back pain treatment), உடல் சோர்வு போன்ற அனைத்து வகை பிரச்சனைகளும் குணமாகும்.

இடுப்பு வலி நீங்க டிப்ஸ்: 2

இந்த இடுப்பு வலி சரியாக சுக்கு டீ மிக சிறந்த மருந்து. இந்த சுக்கு டீ எப்படி செய்வது என்று இப்போது தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. சுக்கு – 1 கிராம்
  2. மிளகு – 5
  3. கிராம்பு – 5
  4. கொள்ளு – ஒரு ஸ்பூன்
  5. டீ தூள் – ஒரு ஸ்பூன்
  6. தண்ணீர் – ஒரு கிளாஸ்
  7. பனைவெல்லம் – தேவைக்கேற்ப

இடுப்பு வலி நீங்க சுக்கு டீ செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றுங்கள். தண்ணீர் கொத்தி வந்தவுடன் ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்க்க வேண்டும்.

டீ தூள் சேர்த்த பிறகு மேல் கூறப்பட்டுள்ள சுக்கு, மிளகு, கிராம்பு, கொள்ளு ஆகியவற்றை சேர்க்கவும். பின்பு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 3 நிமிடங்கள் டீயை கொதிக்க விடுங்கள்.

பின்பு அதனுடன் தேவையான அளவு பனைவெல்லம் கலந்து தினமும் காலை அல்லது மாலை வேளையில் அருந்தி வாருங்கள் இவ்வாறு அருந்தி வருவதினால் இடுப்பு வலி (Back pain treatment) உடனே சரியாகிவிடும்.

குதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்..!

இடுப்பு வலி நீங்க டிப்ஸ்: 3 

தினமும் இடுப்பு வலியால் அவஸ்த்தை படுபவர்கள் நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் இலுப்பை எண்ணெயை வாங்கி வைத்து கொள்ளுங்கள். அவற்றில் ஒரு ஸ்பூன் எடுத்து சூடுபடுத்தி கொள்ளும். பின்பு மிதமான சூட்டில் இடுப்பு வலி ஏற்படும் இடத்தில் அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் இடுப்பு வலி உடனே சரியாகிவிடும்.

இடுப்பு வலி நீங்க டிப்ஸ்: 4

இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி பிரச்சனை உள்ளவர்கள் இந்த டிப்ஸ் மட்டும் பாலோ செய்தால் போதும் உடனே சரியாகிவிடும்.

அதற்கு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு நல்லெண்ணெயில் மூன்று மிளகு சேர்த்து காய்ச்சி அதனுடன் சிறிதளவு வெல்லம் கலந்து, தினமும் சாப்பிட்டு வர இடுப்பு வலி போன்று உடலில் ஏற்படும் அனைத்து வலிகளையும் சரி செய்யும் இந்த டிப்ஸ்.

முழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..!

இடுப்பு வலி நீங்க டிப்ஸ்: 5

இடுப்பு வலி குணமாக: கொள்ளு குதிரைக்கு மட்டும் தீவனம் அல்ல மனிதனுக்கும் சிறந்த உடல் நல மருந்தாக விளங்குகிறது. குறிப்பாக இடுப்பு வலியை சரிசெய்ய சிறந்து மருந்து என்றுகூட சொல்லலாம். எனவே வாரத்தில் இரண்டு முறை கொள்ளு ரசம் செய்து சாப்பிட்டு வர இந்த இடுப்பு வலி பிரச்சனை சரியாகிவிடும்.

ஓகே பிரண்ட்ஸ் நான் கூறிய டிப்ஸில் ஏதேனும் ஒன்றை பாலோ செய்தாலே போதும் இந்த இடுப்பு வலி பிரச்சனை குணமாகிவிடும். கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Natural health tips in tamil