பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் | Beans Benefits in Tamil

Advertisement

பீன்ஸ் மருத்துவ பயன்கள் | Beans Payangal Tamil

காய்கறி வகைகளிலே மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடியது இந்த பீன்ஸ் தான். காய்கறிகள் என்று எடுத்துக்கொண்டாலே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கூடிய ஒன்று. இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் உடலுக்கு சத்து தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் வெளியில் வாங்கி உண்பதையே விரும்புகிறார்கள். வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்கள் காய்கறிகளை எவ்வளவு ருசியாக சமைத்து கொடுத்தாலும் அதை வீட்டில் இருக்கக்கூடிய சின்னஞ் சிறுசுங்களுக்கு பிடிக்காது. அதிலும் பீன்ஸ் பொரியல் செய்து வைத்தால் அறவே சாப்பிட மாட்டார்கள். நாம் எதை ஒதுக்கி வைத்து சாப்பிடுகிறோமா அதில்தான் அதிகளவு சத்து நிறைந்து கிடக்கிறது. பீன்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

புற்றுநோய் நீங்க:

 பீன்ஸ் பயன்கள்

புற்றுநோயானது பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் இப்போது அதிக தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. புற்றுநோய்களில் பல வகையான புற்றுநோய்கள் இருக்கிறது. புற்றுநோய் இருப்பவர்கள் தினமும் உணவில் பீன்ஸை சேர்த்துக்கொண்டால் பீன்ஸில் இருக்கக்கூடிய ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோய் உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயை வராமல் தடுத்து பாதுகாத்து கொள்கிறது.

மலச்சிக்கல் தீர:

 பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

கார சாரமான உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு மலச்சிக்கல் மற்றும் வயிற்று உபாதை பிரச்சனைகள் ஏற்படுகிறது. நாம் சாப்பிடும் உணவு எளிதில் சீரணம் ஆகாமல் மலச்சிக்கல் பிரச்சனையில் கொண்டு போய் விடுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் உணவில் தினமும் பீன்ஸ் பொரியல், கூட்டு போன்றவைகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

நீரிழிவு நோய் குணமாக:

 beans benefits in tamil

உடலில் சர்க்கரை நோய் இருப்பவர்கள் எந்த ஒரு சர்க்கரை சேர்த்த உணவுகளையும் பார்த்து பார்த்து சாப்பிடுவார்கள். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவுகிறது. ஏனென்றால் பீன்ஸில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் உடலில் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரையை சேர்க்க விடாமல் தடுத்து நிறுத்துகிறது.

எந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்..?

உடல் எடை குறைய:

 பீன்ஸ் மருத்துவ பயன்கள்

அதிக உடல் எடை இருந்தால் தொடர்ந்து பல மணிநேரம் எந்த வேலைகளையும் முழுமையாக பார்க்க முடியாது, அதிக எடையுள்ள எந்த பொருளையும் தூக்க சிரமப்படுவார்கள். தேவையில்லாத கொழுப்புகள் உடலில் சேருவதால் தான் உடல் எடையானது அதிகரித்து காணப்படுகிறது. பீன்ஸில் தேவையில்லாத கொழுப்புகளை குறைக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் உணவில் பீன்ஸை சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

கர்ப்பிணிக்கு:

 beans payangal tamil

கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு மிகப்பெரிய குழப்பமாக இருப்பது இந்த உணவுகளை சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா என்று தான் குழம்பிப்போய் இருப்பார்கள். பீன்ஸில் போலேட் என்று சொல்லக்கூடிய வைட்டமின் சத்து அதிகமாக இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் கருவில் வளரும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாய் இருக்கும்.

உடலில் ஆற்றலை பெருக்கும் சுண்டைக்காய் மருத்துவ பயன்கள்..!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

 பீன்ஸ் பயன்கள்

வயது அதிகரித்து கொண்டே போகும் போது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து கொண்டே போகிறது. அடிக்கடி உணவில் பீன்ஸ் காய்கறிகளை சேர்த்துக்கொண்டால் அதில் இருக்கக்கூடிய சத்துக்கள் ரத்தத்தில் கலந்து நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. மேலும் தோற்று நோய்கள் எதுவும் ஏற்படாமலும் பாதுகாத்து கொள்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement