தொப்பை குறைய என்ன செய்வது ? Belly Fat Reduction In Tamil..!

Advertisement

தொப்பை குறைய என்ன செய்வது ? Belly Fat Reduction In Tamil..!

அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பொதுநலம் பதிவில் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு டிப்ஸை இன்னக்கி பார்க்கப்போறோம். உடலில் உள்ள தொப்பையை குறைக்க பானம் (Belly Fat Reducing Drink) எப்படி செய்யலாம்னு  இன்னக்கி பார்க்கலாம் வாங்க..!

newதொப்பை குறைய 15 வழிகள்..! Thoppai Kuraiya Tips in Tamil..!

தொப்பை குறைய தேவையான பொருட்கள்:

  1. தண்ணீர் – 250 ml 
  2. மிளகு – 10 (உரலில் இடித்தது)
  3. பட்டை – பாதி அளவு 
  4. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் 
  5. இஞ்சி – பாதி நறுக்கியது 

தொப்பை குறைய பானம் செய்முறை விளக்கம்:

Belly Fat Reducing Drink: முதலில் ஒரு பாத்திரத்தில் 250 ml அளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.

தொப்பை குறைய பானம் செய்முறை விளக்கம் 2:

Belly Fat Reducing Drink: மிளகு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கிவிடும். அதேபோன்று உடலில் அதிக வலி உள்ளவர்கள், அதுமட்டும் இல்லாமல் மூட்டுகளில் வலி அதிகமாக உள்ளவர்கள் இருப்பார்கள்.

இது போன்ற வலிகளை போக்கும் தன்மை அதிகமாகவே மிளகு பெற்றிருக்கிறது.

அடுத்து தண்ணீரில் 10 மிளகை உரலில் இடித்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சித்தர்கள் அருளிய தொப்பை உடல் எடை குறைய எளிய மருத்துவம்

தொப்பை குறைய பானம் செய்முறை விளக்கம் 3:

Belly Fat Reduce Tips: அடுத்ததாக தண்ணீரில் பட்டை பாதி அளவுக்கு சேர்த்துக்கொள்ளவும்.

பட்டை சேர்ப்பதினால் நம்ம உடலில் உள்ள கொழுப்புகளை எளிதாகவே வெளியேற்றும்.

தொப்பை குறைய பானம் செய்முறை விளக்கம் 4:

Belly Fat Reduce Tips: இப்போது தண்ணீரை நன்றாக மிதமான சூட்டில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக்கொள்ளுங்கள்.

தொப்பை குறைய பானம் செய்முறை விளக்கம் 5:

Belly Fat Reduction: மஞ்சள் தூளை சேர்த்த பிறகு அடுப்பை நிறுத்திக்கொள்ளவும். மிளகு சேர்த்த தண்ணீர் நன்றாக கொதிக்கும் போதே இஞ்சியை பாதி நறுக்கி வைத்து கொள்ளவும்.

Belly Fat Reduction: நறுக்கிய இஞ்சியை தனியாக நீங்கள் குடிக்கும் கிளாசில் எடுத்து போட்டுக்கொள்ளவும்.

newஆண்களே தொப்பை குறைய எளிய வழிகள்..!

தொப்பை குறைய பானம் செய்முறை விளக்கம் 6:

Belly Fat Reduction In Tamil: அடுத்து அடுப்பில் இருந்த மிளகு தண்ணீரை தனியாக வைத்த கிளாசில் வடிகட்டாமல் ஊற்றி கொள்ளவும்.

கிளாசில் ஊற்றிய பின் 10 நிமிடம் திறந்து அப்படியே வைத்திருக்க வேண்டும்.

தொப்பை குறைய பானம் செய்முறை விளக்கம் 7:

Belly Fat Reduction In Tamil: அவ்ளோதாங்க தொப்பையை எளிமையாக குறைக்க பானம் ரெடிங்க. இதை தொப்பை உள்ளவர்கள் (Belly Fat) காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

அதுமட்டும் இல்லாமல் இரவு படுக்கைக்கு முன் ஒருமுறை கூட இதை அருந்தலாம்.

தொப்பை பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பா இந்த பானத்தை தொடர்ந்து 5 நாள் குடித்து வந்தால் தொப்பை எளிதில் குறையும்.

இந்த பானத்தை மேல் உள்ள தண்ணீரை மட்டும் குடித்தால் போதும். அடி பகுதியில் உள்ள மிளகு, இஞ்சியை சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

தொப்பை குறைய பானம் செய்முறை விளக்கம் 8:

Belly Fat Reduce Tips: அடுத்து தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆனப்பிறகு உள்ள தாய்மார்கள் இதை தாராளமாய் குடிக்கலாம்.

இந்த பானத்தை குடிக்கும் முன் உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் உங்கள் இடுப்பு பகுதியின் அளவை குறித்து வைத்து கொள்ளவும்.

தொப்பை குறைய பானம் செய்முறை விளக்கம் 9:

Belly Fat Reduce Tips: இந்த பானத்தை குடித்து 5 நாள் பிறகு உங்கள் தொப்பையின் அளவு மிகவும் குறைந்து காணப்படும். இந்த பானம் உடலுக்கு நல்ல சுறுசுறுப்பை தரும்.

கழுத்து வலி, இடுப்பு வலி, முதுகு வலி, உடம்பு வலி உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் போன்ற அனைவரும் இதை குடிக்கலாம்.

இந்த பானத்தை தொப்பை உள்ளவர்கள் கண்டிப்பா செய்து குடித்து பாருங்கள். நல்ல மாற்றம் கிடைக்கும்.

நன்றி வணக்கம்…🙏🙏🙏

newஉடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இதை TRY பண்ணுங்க..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement