வெற்றிலை மருத்துவ குணங்கள்..! Vetrilai Benefits in Tamil..!

Betel Leaf Benefits in Tamil

வெற்றிலை பயன்கள்..! Vetrilai Uses in Tamil..!

Betel Leaf Benefits in Tamil/ வெற்றிலை நன்மைகள்: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் பல நோய்களை விரட்டக்கூடிய வெற்றிலையின் மகத்தான நன்மைகள் பற்றித்தான் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். நம் முன்னோர்கள் எந்த வித நோயும் இல்லாமல் வாழ்ந்ததற்கு காரணம் அவர்கள் எடுத்துக்கொண்ட உணவு முறைகள் தான் நமக்கு இன்றும் உதாரணம். இன்றும் வீட்டில் மற்றும் சுப காரியங்கள் அனைத்திலும் அசைவ உணவு உண்ட பிறகு வெற்றிலை போடுவது இன்றும் வழக்கமாக உள்ளது. வெற்றிலை சாப்பிடுவதால் நம் உடலில் தீராத நோய்களையும் குணப்படுத்திவிடலாம் என்பது இன்றும் பலருக்கு தெரியவில்லை. வெற்றிலை (vetrilai uses) மூலம் எந்தெந்த நோயினை சரி செய்யலாம் என்பதை பற்றி கீழே தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்..!

newகற்பூரவள்ளி இலையின் தெரியாத பல மருத்துவ குணம்..!

பல் ஈறு பிரச்சனை தீர்வு:

பல் ஈறு பிரச்சனை தீர்வு

 • வலிகளில் தாங்கிக்கொள்ள முடியாத வலி என்றால் பல் வலி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. உணவு சாப்பிட்ட பிறகு உணவின் சிறிய துணுக்குகள் பற்களின் இடையில் மாட்டிக்கொள்ளும். இதனால் பற்களின் ஈறானது வீக்கம் அடைந்து வலியினை கொடுக்கும்.
 • இந்த வலிக்கு நிவாரணமானது வெற்றிலையை நன்கு மென்று சாப்பிட்டு அதன் சாறுகள் ஈறுகளில் பட பற்களின் ஈறு பிரச்சனை, பல் சொத்தை, பல் கூச்சமிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சுவாச கோளாறுகளிலிருந்து விடுதலை:

சுவாச கோளாறு நீங்க

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

 • சளி பிரச்சனை அதிகம் உள்ளவர்கள், ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது இந்த வெற்றிலை. சுவாச கோளாறுகளிலிருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்க தண்ணீரில் வெற்றிலை போட்டு அதனுடன் சீரகம், லவங்கப் பட்டை சேர்த்து குடித்து வர சுவாச கோளாறு பிரச்சனையிலிருந்து நிம்மதியாக இருக்கலாம்.
 • அதிகமாக நெஞ்சு சளி உள்ளவர்கள் வெற்றிலையில் சிறிதளவு கடுகு எண்ணெயினை சூடு செய்து நெஞ்சில் வைத்து வர, சளி மற்றும் இருமல் குறைந்துவிடும்.
newமேலும் வெற்றிலை எந்த நோயை குணப்படுத்தும் என்பதை தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்>> வெற்றிலை நன்மைகள்

தொற்று நோய் குணமாக:

 • தொற்று நோய் குணமாகதொற்று நோயால் அவதிப்படுபவர்கள் வெற்றிலை சாற்றினை குடித்து வர உடலில் உள்ள நோய் கிருமிகள் அனைத்தும் நீங்கும்.
 • மேலும் புண்கள், அடிபட்ட காயத்தின் மீதும் வெற்றிலையின் சாறினை போட்டுவர புண்களில் இருக்கக்கூடிய கிருமிகள், வலி மற்றும் காயத்தின் எரிச்சல் குறையும்.

காது வலி நீங்க:

 • காது வலி நீங்கசிலருக்கு மழைக்காலத்தில் சளி பிரச்சனை காரணமாக காது பகுதிகளில் வலி அதிகமாக ஏற்படும். குறிப்பாக சிறிய குழந்தைகளுக்கு காது வலி மற்றும் காதில் குடைச்சல் போன்ற பல தொந்தரவுகள் வந்து குழந்தைகள் அழ தொடங்குவார்கள்.
 • இது போன்ற காது வலிக்கு சிறிது வெற்றிலையினை நன்கு மை போன்று அரைத்து அதனுடைய சாறுவை வலி ஏற்பட்ட காது பகுதிகளில் ஊற்றினால் காது வலியானது குறைந்துவிடும்.
 • மேலும் காதில் உள்ள குடைச்சல்களும் நீங்கி காதில் உள்ள கிருமிகளையும் அகற்றிவிடும்.

செரிமான பிரச்சனை நீங்க:

 • செரிமான பிரச்சனை நீங்கவெற்றிலை சாப்பிட்டு வருவதால் தேவையற்ற ஏப்பம், உண்ட உணவு செரிக்காமல் இருந்தால் உடனே சரி செய்துவிடும்.
 • மேலும் வெற்றிலை சாப்பிடுவதால் வயிறு, குடல் பகுதிகளில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுக்கள், குடல் அழுக்குகள் போன்றவற்றை உடனே நீக்கிவிடும்.

இவ்வளவு மகத்துவம் பெற்ற வெற்றிலையின் மருத்துவ குணங்களின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பதிவு செய்கின்றோம் நன்றி வணக்கம்..!

newஎலுமிச்சை இலையின் மருத்துவ பயன்கள்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்