மரகோதுமை நன்மைகள் | Buckwheat Benefits in Tamil
வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் அன்பான நேயர்களே… இன்று நம் பதிவில் பாப்பரை என்னும் மரகோதுமை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த பாப்பரை என்னும் மரகோதுமையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனை பற்றி விரிவாக இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பாப்பரை என்றால் என்ன:
பாப்பரை என்பது கம்பு, வரகு, கோதுமை போன்ற தானிய வகைகளில் ஓன்று. இதை மரகோதுமை என்று அழைப்பார்கள்.
இது ஒரு குறும்பயிராகும். குறைவான மண்வள பகுதிகளில் நன்கு வளர கூடியது. ஆனால், மண்ணில் நீர் தேங்காமல் வற்றச் செய்ய வேண்டும். டுதல் உரம், குறிப்பாக காலக உரம் விளைச்சலைக் குறைக்கும். வெப்பக் காலநிலைகளில் கோடையின் இறுதியில் குளிர்வானிலையில் பூக்குமாறு பயிரிடவேண்டும்.
இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் இது உடலுக்கு அதிக நன்மைகளை செய்கிறது. இதில் புரதம், கால்சியம், இரும்புசத்து மற்றும் நார்ச்சத்து போன்ற அதிகப்படியான சத்துக்கள் அடங்கியுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த மரகோதுமை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் நல்ல பயன்கள் கிடைக்கிறது. 100 கிராம் பாப்பரையில் 9.75 கிராம் தண்ணீர் அடங்கியுள்ளது. என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்ப்போம்.
இதய நோய் வராமல் தடுக்க:

இந்த பாப்பரை தானியத்தை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் இதயம் சம்மந்தப்பட்ட நோய்களான இதய அழற்சி மற்றும் இதய அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் இது கெட்ட கொலஸ்ட்ரால் உருவாவதை தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று மருத்துவ ஆய்வில் கூறப்படுகிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த:

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நமது உடலில் இரத்த ஓட்டம் சீராக செல்வதற்கு இது உதவுகிறது.
உடல் எடை குறைக்க:

இந்த பாப்பரையில் அதிகப்படியான புரதசத்து மற்றும் நார்ச்சத்துக்கள் இருப்பதால் இதை நீங்கள் உணவில் சேர்த்து சாப்பிடும் போது இது உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. அதனால் இது உடல் எடை குறைக்க உதவுகிறது.
அஜீரண கோளாறுகளை தடுக்க:

இதில் உள்ள நார்ச்சத்துக்கள் அஜீரண கோளாறுகளை தடுக்கிறது. இந்த உணவு சீக்கிரமாக ஜீரணமாகும் சக்தியை கொண்டுள்ளது. இது அஜீரண கோளாறுகளை தடுத்து மலசிக்கல் போன்ற பிரச்சனைகள் உருவாகாமல் தடுக்கிறது. மேலும் இது வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது. மேலும் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்க்கு உதவுகிறது.
குடலை பாதுகாக்க:

இது குடல் உறுப்புகளை பாதுகாக்க உதவுகிறது. இது வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது. குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் நமது உடலை பாதுகாக்கிறது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த:

இதில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருப்பதால் இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகள் இந்த உணவை அதிகமாக சாப்பிட்டு வருவதால் நல்ல பயன் அளிக்கிறது.
தலைமுடி:
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடியை உதிர்வை நிறுத்தி ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. மேலும் இதில் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்திருப்பதால் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு உதவுகிறது.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |













