புற்று நோய் குணப்படுத்தக் கூடிய நோய் தான் ஆய்வு தகவல்..!

cancer

புற்று நோய் குணப்படுத்தக் கூடிய நோய் தான்..!

புற்றுநோய் (cancer) உண்டாவதற்கான கீழ்க்காணும் ஐந்து முக்கிய காரணிகளை அந்த அமைப்பு பட்டியலிடுகிறது.

  1. புகையிலைப் பொருட்களை உட்கொள்வது
  2. மது அருந்தும் பழக்கம்
  3. அதிக உடல் எடையுடன் இருப்பது
  4. குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது
  5. உடல் உழைப்பு இல்லாமை

மேற்கண்டவற்றில் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22% பேரின் பாதிப்புக்கு காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைப் பிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்புண்டு.

உடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..!

புற்று நோய் (cancer) குணப்படுத்த கூடிய நோய் தான் என்று ஆய்வு ஒன்று கூறியுள்ளது:

மனிதனின் மரணம் பெரும்பாலும் நோய்களின் காரணத்தால் தான் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

உலகில் பெரும்பாலும் மனிதர்களை தாக்கியுள்ள கொடிய நோய் புற்றுநோய் என்றே பலருடைய எண்ணம். ஆனால் அதனையும் தாண்டி இதயத்தினால் ஏற்படும் நோய் தான் மனிதனை அதிகம் தாக்குகிறது, உயிரையும் பறிக்கிறது.

மேலும் புற்றுநோயால் 1 கோடி பேர் இறக்க நேரிடும் என்று அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. உணவு முறை, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, புகைப்பழக்கம், உடல் உழைப்பு இல்லாமை, காற்று மாசுபாடு போன்றவற்றையால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஆனால் தற்போது ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது,

‘புற்றுநோய் (cancer) குணப்படுத்தக்கூடிய நோய் தான், மார்பக புற்றுநோய் மட்டுமல்ல மற்ற புற்றுநோய்களையும் தீவிர நிலை எட்டியப் பிறகு தெரிவிக்காமல் முன் கூட்டியே மருத்துவர்களிடம் அணுகினால் நல்ல தீர்வு கிடைக்கும். தற்போது உள்ள புற்றுநோய்கள் எல்லாம் குணப்படுத்தக் கூடியதே.

நோய்களினால் அதிகம் பாதிக்கப்படுபவர்களில் இருதய நோய் உள்ளவர்களே முதலிடம் பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் தான் புற்றுநோய் உள்ளது, அதற்கு அடுத்த இடத்தில் தான் நீரழிவு நோய் இடம் பெற்றுள்ளது’ என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோயை (cancer) ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து கண்டுப்பிடித்தால்  மற்ற நோய் போல் இதுவும் குணப்படுத்த கூடிய நோய் தான்!

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் (Cancer Fighting Foods)..!

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.