யாருக்கெல்லாம் கருப்பைவாய் புற்றுநோய் வரும்..?
பெண்களுக்கு தாய்மை என்ற பெருமையை தரக்கூடிய ஒன்றுதான் கருப்பை. இந்த கருப்பையில் ஏற்படும் பல்வேறு வகையான பிரச்சனைகள் பெண்களை அதிகமாக பாதிக்கின்றது.
அதுவும் கருப்பை வாய் புற்றுநோயினால் இப்பொழுது ஏராளமான பெண்கள் உயிரிழப்பை சந்திக்கின்றனர். இந்த பிரச்சனை குறிப்பாக கருத்தடை முறைகள், மாதவிலக்கின் போது சுகாதாரமின்மை மற்றும் கிருமி தொற்று போன்ற காரணங்களினால் இந்த கருப்பை வாய் மற்றும் கருப்பை புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
இந்த கருப்பை புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளை கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை எடுத்து கொண்டோம் என்றாலே இந்த கருப்பை புற்றுநோயினை முற்றிலுமாக குணப்படுத்திவிட முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே பெண்கள் திருமணம் ஆன ஐந்து ஆண்டுகள் முதலே கருப்பை பகுதியில் புற்றுநோய் அறிகுறிகள் உள்ளதா என்பதை ஆண்டுதோறும் சோதனை மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கவும் | தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது? இதற்கான சிச்சை? முழு விளக்கம்..! |
கருப்பை புற்றுநோய் அறிகுறிகள்(cervical cancer symptoms)
கருப்பை புற்றுநோய் இருக்கும் பட்சத்தில் சில அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும், அதாவது உறவின் போதோ அல்லது அதற்குப் பின்னரோ இரத்தம் வெளிப்படுதல் அல்லது வெள்ளை படுத்தல் அதிகமாக இருக்கலாம்.
வெள்ளைபடுதலுடன் சிறிது இரத்தம் கலந்து வரலாம், இரண்டு மாதவிடாய்க்கு இடையில் அடிக்கடி இரத்தம் வெளிப்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கருப்பை புற்றுநோய்க்கான பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
கருப்பை புற்றுநோய் இருப்பின் அதிக இரத்த போக்கு அல்லது மாதவிடாயின் போது அதிக வலி, மாதவிடாய் நின்றபின் உடல் எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.
கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை:
இந்த கருப்பையில் புற்றுநோய் ஏற்பட எச்.பி.வி வைரசும் ஒரு வகை காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
வாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச் சூழல் மாசு, பரம்பரை ரீதியாக கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்படலாம்.
இந்த கருப்பைவாய் புற்றுநோய் உருவாக்க 80 சதவீதம் எச்.பி.வி என்ற வைரசும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்த வைரஸ் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசிகளும் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்கள் திருமணம் ஆன ஐந்து ஆண்டுகளில் இருந்து இந்த தடுப்பூசியினை போட்டுக்கொள்ளலாம். குறிப்பிட்ட இடைவெளியில் பேப்ஸ்மியர் டெஸ்ட் மூலம் கருப்பை வாயில் புற்றுநோய் உள்ளதா என்பதை சோதித்து பார்க்க வேண்டும்.
பயாப்சி மற்றும் பேப்ஸ்மியர் என்ற இரண்டு சோதனைகள் மூலம் இந்த கருப்பை புற்றுநோயினை கண்டறிகின்றனர். இந்த கருப்பை புற்றுநோயினை ஆரம்பத்தில் கண்டறிந்தால், அவற்றை கருப்பையை அகற்றுவதன் மூலம் முழுமையாக குணப்படுத்தி விடலாம்.
இந்த கருப்பை புற்றுநோய் பரவிய பின்பு தாமதமாக கண்டறியும் போது ரேடியோ தெரபி மற்றும் ஹீமோ தெரபி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும், இந்த கருப்பை புற்றுநோய் வந்த பின் அவதிப்படுவதை விட வரும் முன் கண்டறிந்து தடுப்பதே சிறந்தது.
இதையும் படிக்கவும் | எந்தெந்த வலிகளை சாதாரணமாக நினைக்க கூடாது? |
கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி:
பெண் குழந்தைகள் சிறு வயதில் இருந்தே குறிப்பாக, வயதிற்கு வந்த பின்னர் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
அதே போல் ஆரம்ப காலங்களில் ஏற்படும் மாதவிலக்கு கோளாறுகள் மருத்துவரிடம் காண்பித்து அதற்கான சிச்சையினை எடுத்து கொள்ள வேண்டியது மிகவும் நல்லது.
அதேபோல் திருமணத்திற்கு பிறகு சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
மேலும் பால்வினை நோய் தாக்காமல் காத்துக்கொள்ள வேண்டும். அதோடு கருப்பை புற்றுநோய் தடுப்பூசியினை போட்டு கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக சத்தான உணவு பழக்க வழக்கம் மற்றும் டென்ஷன் இல்லாத வாழ்க்கை முறையை அமைத்து கொள்ள வேண்டும்.
உடல் எடை கட்டுப்பாடு:
உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம், அதேபோல் உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் உணவுமுறைகள் தவிர்த்து, உடற்பயிற்சி மூலம் உடல் எடையை பராமரிக்க வேண்டும்.
மேலும் 30 வயதுக்கு மேல் பெண்கள் கட்டாயம் ஆண்டுக்கு ஒரு முறை உடல் நலம் சார்ந்த பரிசோதனைகளை செய்து கொள்வதும் மிகவும் நல்லது.
யாருக்கெல்லாம் இந்த கருப்பைவாய் புற்றுநோய் வரும்:
பரம்பரையில் யாருக்காவது கருப்பைவாய் புற்றுநோய் இருந்தால் இந்த கருப்பை புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது.
இந்த கருப்பை புற்றுநோய் ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் மூலமாகவும் வரலாம்.
சர்க்கரை நோய் அதிகரித்தல் மற்றும் உடல் எடை அதிகரித்தல் போன்ற காரணங்களினாலும் இந்த கருப்பைவாய் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
அதேபோல் குறிப்பிட்ட உணவு முறைகளை கடைபிடிப்பதன் மூலமாகவும் இந்த கருப்பை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிக்கவும் | உங்கள் விரல் நகம் சொல்லும் உங்களின் எதிர்காலம் |
சத்தான உணவுகள் மற்றும் காய்கறிகள்:
புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்க உணவு முறைகளில் சாதத்தின் அளவை குறைத்து கொண்டு, சத்தான காய்கறிகளை அதிகளவு சாப்பிட வேண்டும். குறிப்பாக பட்டாணியை உணவில் அதிகளவு சேர்த்து கொள்ளலாம்.
மேலும் தினமும் சத்தான பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம், குறிப்பாக ஆவியில் வேகவைத்த உணவுகளை அதிகம் சாப்பிடலாம், அதேபோல் புரதம் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை கூடுமான வரை தவிர்த்து கொள்ளவும்.
காய்கறிகளில் முட்டை கோஸ், காலிபிளவர், முளைகட்டிய தானியங்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் சாப்பிட்டு வரலாம். இவற்றில் இருக்கும் இன்டோல் திரீகார்பினால் கேன்சரை உருவாக்கும் கிருமிகளை அழித்து போராடும் தன்மை கொணட்து.
மஞ்சள் மற்றும் சிவப்பு நிற பழங்களை அதிகளவு சேர்த்து கொள்வதினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆப்பிள், எலுமிச்சை, தக்காளி, சாத்துக்குடி ஆகிய பழங்களை அதிகளவு சாப்பிடுவதினாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிவப்பு மிளகாயில் உள்ள பைட்டோகெமிக்கலும் புற்று நோய் வராமல் பாதுகாக்கும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |