தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது? இதற்கான சிச்சை? முழு விளக்கம்..!

தைராய்டு பிரச்சனை

தைராய்டு பிரச்சனை (Thyroid Problem) எதனால் வருகிறது? முழு விளக்கம்..!

தைராய்டு பிரச்சனை என்பது, இப்போது பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கின்ற ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. கழுத்துப்பகுதியில் என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையே தைராய்டு எனப்படுகிறது.

10 ஆரோக்கிய உணவு போதும் தைராய்டு குணமாக !!!

சரி இந்த தைராய்டு பிரச்சனை (thyroid problem) எதனால் வருகிறது? இந்த தைராய்டு பிரச்சனை வந்தால் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும், இதற்கான அறிகுறிகள் மற்றும் இதற்கான சிச்சை முறைகள் ஆகிய விவரங்களை இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க..!

தைராய்டு வகைகள்:

தைராய்டு சுரப்பியானது அளவுக்கு அதிகமாகவோ அல்லது அளவுக்கு குறைவாகவோ ஹார்மோன்கள் சுரப்பதை பொருத்து, ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு என இரண்டு வகைப்படுகிறது. அது மட்டுமின்றி பாபில்லரி, பாலிகுலர், அனப்லாஸ்டிக் மற்றும் மெடுல்லரி போன்ற வகைகளும் உள்ளது.

ஹைப்போ தைராய்டு:

ஹைப்போ தைராய்டு காரணமாக காய்ட்டர் என்றழைக்கப்படுகின்ற வீக்கம் ஏற்படும். முடி கொட்டுதல், பசியின்மை, எடை அதிகரித்தல், கர்ப்பம் தரிக்க முடியாமை, உடலில் அசாத்தியமான சோர்வு, அசதி, மந்த நிலை போன்றவை இருக்கும்.

ஹைபர் தைராய்டு:

ஹைபர் தைராய்டு காரணமாக படபடப்பு, நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். கை காலில் நடுக்கம், டயரியா, லூஸ் மோஷன், மாதவிலக்கு தொந்தரவு, கால் வீக்கம், ஞாபக சக்தி குறைதல், கடுமையான பசி, கோபம் வருதல், முடி கொட்டுதல், கர்ப்பம் தரிக்க முடியாமை, அளவிற்கு அதிகமான உடம்பு வலி போன்றவை இருக்கும். இரண்டு வகை தைராய்டு கோளாறுகளில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற குறைபாடுதான் மிக அதிக அளவில் மக்களிடம் உள்ளது.

இது ஒன்னு போதும் உங்க ஹீமோகுளோபின் அதிகரிக்க..!

தைராய்டு அறிகுறிகள் (Thyroid Symptoms):

தைராய்டு அறிகுறிகள் (Thyroid Symptoms) பலவகை உள்ளது. அவற்றில் சில இப்போது நாம் காண்போம் வாங்க..!

1.கழுத்தில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுவது
2 உடல் எடையில் மாற்றம்
3 மூச்சு விடுவதில் சிரமம்
4 குரலில் மாற்றம்
5 இருதயத் துடிப்பு அதிகரிப்பு
6 உயர் இரத்த அழுத்தம்
7 நரம்புத்தளர்ச்சி
8 ஒழுங்கற்ற மாதவிடாய்

தைராய்டு பிரச்சனை வர காரணம் :-

தைராய்டு வர பல காரணங்கள் உள்ளது. அவற்றில் சில காரணங்கள் முக்கிய பங்கு வகுக்கின்றது.

மருத்துவர்கள் கூறும் காரணங்கள் பற்றி இப்போது நாம் காண்போம் வாங்க..!

தைராய்டு பிரச்சனை வர காரணம் – அயோடின் குறைபாடு:

தினசரி நாம் சாப்பிடும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருப்பதும் தைராய்டு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகிறது.

தைராய்டு பிரச்சனை வர காரணம் – பரம்பரை வழியில்:

தைராய்டு தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவருக்கு இருப்பினும் குழந்தையை பாதிக்கும் அபாயம் உள்ளது.

இந்த தைராய்டு பிரச்சனை பரம்பரையாக ஏற்பட கூடிய நோய்களில் ஒன்றாகும்.

தைராய்டு பிரச்சனை வர காரணம் – தொற்று நோய்கள் மூலம்:

உடலில் ஏற்படும் சில வகை தொற்று நோய்களும் தைராய்டை ஏற்படுத்த கூடியவை என்பது குறிப்பிட தக்கது.

காரணமில்லாமல் கோபம் வருவது ஏன் ? அதற்கும் தைராய்டு பாதிப்பிற்கும் என்ன தொடர்பு?

ஹைபர் தைராய்டு என்கின்ற தைராய்டு அதிகமாக சுரப்பதால்தான் காரணம் இல்லாத கோபம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தைராய்டுக்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயை குணப்படுத்தி விடலாம்.

தைராய்டு பிரச்சனை (Thyroid Problem) யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்தானே?

தைராய்டு பிரச்சினை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் அதிக அளவில் பெண்களுக்கே வரும்.

சிறுமி முதல் மூதாட்டி வரை வர வாய்ப்புண்டு. தைராய்டு பாதிப்பிற்கு இதுதான் காரணமென்று துல்லியமாக இதுவரை கண்டறியப் படவில்லை. இருப்பினும் பெண்களை மட்டும் இந்தப் பாதிப்பு அதிகம் தாக்க அவர்களின் உடல் அமைப்பும், பெண்களுக்கு மட்டும் சுரக்கின்ற பிரத்தியேகமான சில ஹார்மோன்கள்தான் காரணம்.

அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..?

தைராய்டு பாதிப்பிற்கு என்ன மாதிரியான சிகிச்சைகளை செய்கிறீர்கள்?

குறை தைராய்டு (ஹைபோ) பிரச்சினைக்கு பரிசோதனை முடிவினை பார்த்து மருந்து, மாத்திரை மூலமாகவே குணப்படுத்தி விடலாம். எந்த நிலையிலும் இதற்கு இதுதான் சிகிச்சை.

அதிக தைராய்டு (ஹைபர்) பிரச்சினைக்கு மூன்று வகையான சிகிச்சைகள் உள்ளன.

1. மருந்து மாத்திரைகள் மூலமாக குணப்படுத்துவது.

2. அணுக்கதிர் தன்மை கொண்ட சொட்டு மருந்து.

3. அறுவை சிகிச்சை.

தைராய்டு பிரச்சனை (Thyroid Problem) மூலம் புற்றுநோய் வருமா?

தைராய்டு சுரப்பியிலே புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள்.

1. தைராய்டு சுரப்பி வீங்கி விடும்.
2. குரலில் மாற்றம் ஏற்படும்.
3. கழுத்து புறங்களில் சின்னச் சின்ன வீக்கமாக ஏற்படும்.
4. தைராய்டு பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருப்பது போன்றவை ஆகும்.

தைராய்டு பிரச்சனை ஏற்படுத்தும் விளைவு:

தைராய்டை ஆரம்பத்திலேயே குணப்படுத்திவிட வேண்டும். இல்லையெனில் அது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் நம் உடலின் ஒட்டுமொத்த செயல்முறையையும் கட்டுப்படுத்துவதில் தைராய்டு சுரப்பியின் பங்கு மிகமுக்கியமானது. எனவே தைராய்டிற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளாதபோது அது மனக்குழப்பம், அதிக இரத்த அழுத்தம், அதிக இதய துடிப்பு, தொடர்ச்சியான காய்ச்சல் என சிறிய மாற்றங்களில் தொடங்கி மஞ்சள் காமாலை, கோமா போன்ற பல மோசமான விளைவுகளை கூட ஏற்படுத்திவிடும்.

எந்தெந்த வலிகளை சாதாரணமாக நினைக்க கூடாது?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ரங்கோலி, ஆன்மிகம் மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.