செம்பு பாத்திரம் தீமைகள்

copper side effects in tamil

காப்பர் பாத்திரம் தீமைகள்

நம் முன்னோர்கள் காலத்தில் செம்பு பாத்திரத்தில் வைத்து தான் தண்ணீர் குடிப்பார்கள். ஆனால் இன்றைய காலத்தில் கேன் வாட்டர், மினரல் வாட்டர் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிக்கும் போது தண்ணீரோடு சேர்த்து செம்பு தாதுவும் உடலுக்கு கிடைத்து உடல் உறுப்புகளை சீராக வேலை செய்ய உதவுகிறது. மேலும் செம்பு பாத்திரத்தில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ நீங்கள் குடிக்கும் தண்ணீரில் எந்த தண்ணீர் நல்லது என்று தெரியுமா.?

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பதால் தண்ணீரில் உள்ள பாக்ட்ரியாக்களை அழிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. மேலும் எலும்புகளை பலம் செய்ய உதவுகிறது. அதனால் செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது. செம்பு பாத்திரங்களை முறையாக பராமரித்து உபயோகிப்பது நல்லது. அதாவது இரும்பு பாத்திரங்களில் துரும்பு பிடிப்பது போல செம்பு பாத்திரங்களிலும் சில நாட்கள் உபயோகித்து வரும் பொழுது பச்சை நிறத்தில் Green copper carbonate காணப்படும் .  இவை ஒரு நச்சு பொருள். Green copper carbonate உடலுக்கு செல்லும் பொழுது வயிற்று வலி, பல் சொத்தை, கண் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே அதனை முறையாக பராமரித்து உபயோகிப்பது நல்லது.

செரிமான பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

இரத்த சோகை தடுத்தல்

இரத்த சோகையை கட்டுப்படுத்தி இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

 காப்பர் பாத்திரம் தீமைகள்

கர்ப்பமான பெண்கள் குழந்தைக்கும்,  அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரை குடிப்பது நல்லது.

புற்றுநோய் வராமல் தடுக்க

செம்பு பாத்திரத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக இருப்பதால் புற்றுநோய் பிரச்சனையிலுருந்து பாதுக்காக்கிறது. மேலும் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் தடுக்கிறது. அதுமட்டுமில்லாமல் சருமத்தை பாதுகாக்க, முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

செம்பு பாத்திரத்தின் தீமைகள்:

செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவதினால் பல நன்மைகளும் உள்ளது. அதற்காக செம்பு பாத்திரத்தை சமைக்க பயன்படுத்த கூடாது. சமைக்கும் பொழுது உணவுகளில் உள்ள சத்துக்களும் செம்பில் உள்ள சத்துக்களும் சேர்ந்து நம் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். அது என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்வோம்.

  • தலைவலி
  • சிறுநீரக கோளாறு
  • உடல் சோர்வு ஏற்படும்
  • இளநரை
  • பார்வை திறனில் குறைபாடு
  • எலும்புகள் பலம் இல்லாமல் இருக்கும்

இதையும் படியுங்கள் ⇒ உடலுக்கு கேடு தரும் சமையல் பாத்திரங்கள் என்ன தெரியுமா?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips