பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா..? குடிக்கக் கூடாதா..?

Advertisement

Don’t Drink Water After Eating Fruit

இன்றைய ஆரோக்கியம் பதிவில் பழங்கள் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கலாமா..? குடிக்க கூடாதா..? என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். பொதுவாக சிறிய குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி எந்த உணவு சாப்பிட்டாலும் தண்ணீர் குடிப்பார்கள். அதுபோல சிறிய குழந்தைகளுக்கு பழங்கள் சாப்பிட கொடுப்போம். அப்போது அவர்கள் பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீரை குடிப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் பெரியவர்களும் இதுபோல செய்வது உண்டு. அந்த வகையில் பழங்கள் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கலாமா..? குடிக்க கூடாதா..? எது நல்லது என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் பழங்கள் எது..?

பழங்கள் சாப்பிடும் போது நினைவில் கொள்ள வேண்டியவை:

பழங்கள் சாப்பிடும் போது நினைவில் கொள்ள வேண்டியவை

பழங்கள் சாப்பிடுவதால் நமக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கின்றன. பழங்கள் நமது எடை இழப்பிற்கு மிகவும் உதவுகிறது. ஏனென்றால், பழங்களில் கலோரிகளில் குறைவாக இருக்கிறது. அதேபோல நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.

பழங்களை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சத்துக்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமில்லாமல் பழங்களில் சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்றவை நிறைந்துள்ளன. அவை அனைத்தும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

உணவுடன் பழங்கள் சாப்பிடலாமா..? 

பெரும்பாலும் பலரும் உணவு சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். பழங்களின் ஒரு முக்கியமான பண்பு என்னவென்றால் மற்ற உணவுகளுடன் ஒப்பிடும் போது பழங்கள் செரிமானத்திற்கு தயாராகிவிடும்.

ஆனால்  பழங்களை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது அதனால்  நச்சுத்தன்மை உருவாகும். இதுபோல சாப்பிடுவதால் செரிமான செயல்முறை மெதுவாக நடைபெறும். பழங்கள் செரிமான சாறுகளால் புளிக்க ஆரம்பிக்கும்.  இது நமது உடலில் நோய்களுக்கு வழிவகுக்கிறது. அதனால் தான் பழங்களை தனித்தனியாக சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நீங்கள் சாப்பிடும் பழங்கள் வெவ்வேறு நிறங்களில் இருப்பதற்கான காரணம் தெரியுமா …?

பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா..?

பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா

பழங்களைச் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது நமது உடலுக்கு நல்லது இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காரணம் பழங்களில் நிறைய சர்க்கரை மற்றும் ஈஸ்ட் உள்ளது. எனவே பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உங்கள் வயிற்று பகுதியில் இருக்கும் அமிலத்தை நீர்த்துப்போகச் செய்கிறது.

நீங்கள்  தண்ணீர் அதிகம் உள்ள பழங்களான வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால், இது அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மையின் அளவை சீர்குலைக்கிறது. இது செரிமான அமைப்பின் pH அளவை சிதைக்கிறது.  

நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் உங்கள் வயிற்றின் அமிலத்தன்மையை குறைத்து pH அளவை மாற்றுகின்றன. அதனால் பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பழங்கள் சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தண்ணீர் குடிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உள்ளூர் பழங்கள் Vs வெளிநாட்டு பழங்கள் -எது பெஸ்ட்..?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement