காது வலி நீங்க பாட்டி வைத்தியம்..!

Ear Pain Treatment in Tamil

காது வலி குணமாக | Ear Pain Treatment in Tamil

பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் காது வலி.. இது வயது வரம்பு இன்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று. காது பகுதியில் வலி ஏற்படும்போது அத்தகைய வழியை நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இத்தகைய காது வலி பெரும்பாலும் அழற்சி, சைனஸ் தொற்று, டான்சில்லிடிஸ், மற்றும் அதிக இரைச்சல் போன்றவற்றால் ஏற்படும். இந்த காது வலியை சாதாரணமாக நினைக்கக்கூடாது இதற்கான சிகிச்சை முறையை உடனே மேற்கொள்ள வேண்டும். சரி இந்த பதிவில் காது வலி நீங்க பாட்டி வைத்தியம் எண்ணெலாம் இருக்கிறது என்பதை பற்றி படித்தறியலாம் வாங்க.

காது வலி காரணம் – Ear Pain Reasons in Tamil :

முதலில் இந்த காது வலி எதனால் வருகிறது என்ற காரணத்தை பற்றி படித்தறியலாம் வாங்க. காது வலி வருவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று தொடர்ந்து அதிக ஒலி எழுகிற இடங்களில் இருப்பதாகும். மேலும் சளி பிடிக்கும் போது, காதுகளில் நீர் புகுந்து கொள்வதாலும், சில சமயங்களில் கிருமி தொற்றின் போதும் காது வலி ஏற்படலாம். சரி காது வலி குணமாக வைத்தியம் பற்றி பார்க்கலாமா..

ஒற்றை தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்..!

காது வலி குணமாக மருந்து – Ear Pain Remedies in Tamil

துளசி:

துளசி

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

காது வலி குணமாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகை செடிகளில் ஒன்று தான் துளசி. இந்த துளசி இலையை சிறிதளவு பறித்து கொள்ளுங்கள். அவற்றை நசுக்கி அதன் சாறை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். சாற்றை நன்றாக சக்கை இல்லாமல் வடிகட்டி கொண்டு வடித்து அதை 2 சொட்டுகள் காதில் விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் காது வலி குணமாகும்.

வெற்றிலை:

காதுகளில் ஏற்படும் வலிகளை குணப்படுத்த வெற்றிலையை பயன்படுத்தலாம். வெற்றிலையை சாறு பிழிந்து ஒரு சில சொட்டுகளை வலியுள்ள காதுகளில் விட்டால் காது வலி குறையும்.

நல்லெண்ணெய்:

காது வலிக்கு நிவாரணம் அளிக்க கூடிய பொருள்களில் ஒன்று தான் நல்லெண்ணெய். 4 பூண்டு பற்களை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு கொள்ளுங்கள். பின் அவற்றை 10 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும். பிறகு வேக வைத்த பூண்டை நசுக்கி கொள்ளவும். கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக பேஸ்ட்டை குலைத்து இதை ஒரு துணியில் தடவி பாதிக்கப்பட்ட காதில் வைத்து கொள்ளுங்கள். காதில் ஏற்பட்டுள்ள தொற்று குணமாகி விரைவில் வலி குறைந்து விடும்.

அல்லது:

காது வலி நாட்டு மருத்துவம்: பெருங்காயத்தை தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி வடிகட்டி அதனுடன் சிறிது நல்லெண்ணெய் கலந்து, திரும்பவும் காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடாக காதில் சில துளிகளை விட காது வலி குறையும்

தலை சுற்றல் நீங்க பாட்டி வைத்தியம்

மா இலை சாறு:

மா இலை சாறு

மா இலை சாறு காது வலிக்கு மிகவும் சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. மா இலையில் நோய் தொற்றுக்களை எதிர்த்து போராடும் பண்புகள் உள்ளது. ஆகவே காது வலி குணமாக மா இலை சாறினை பயன்படுத்தலாம். அதாவது சிறிதளவு மா இலைகளை எடுத்து அதனை கசக்கி சாறு பிழியுங்கள் பின் அந்த சாறினை காதுகளில் சிறிதளவு விடுங்கள் இதனால் காது வலி குணமாகும்.

கடுகு எண்ணெய்:

காது வலி சார்ந்த பிரச்சனைகளுக்கு பயன்படுத்த கூடிய ஒரு பொருள் தான் கடுகு எண்ணெய். கடுகு எண்ணெய் நிறைய நோய்த் தொற்றுக்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. புண்களையும் ஆற்றும் ஆற்றல் மிக்கது. குறிப்பாக காது வலிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும். ஆகவே வெது வெதுப்பான கடுகு எண்ணெயை காதில் சிறிதளவு ஊற்றி வர பிரச்சனைகள் குறையும்.

குறிப்பு: இங்கு கூறப்பட்டுள்ள குறிப்பு சிலருக்கு ஒற்றுக்கொள்ளும், சிலருக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். ஆகவே உடல் சார்ந்த எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், முதலில் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று அவர்கள் கூறும் சிகிச்சை முறையை பின்தொடர்வது நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்