முதல் மாதத்தில் கர்ப்பத்தின் அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா?

முதல் மாதத்தில் கர்ப்பத்தின் அறிகுறிகள்

முதல் மாதத்தில் கர்ப்பத்தின் அறிகுறிகள்

வணக்கம் நண்பர்களே. இன்று நம் பொதுநலம்.காம் ஆரோக்கியம் பதிவில் முதல் மாதத்தில் கர்ப்பத்தின் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். தாய்மை என்பது பெண்களுக்கு கிடைத்த வரம். கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் ஆகும். ஒரு பெண் எப்போதும் இருந்ததை விட மிகவும் வலுவான, உறுதியான, அக்கறையுள்ள முற்றிலும் மாறுபட்ட நபராக மாறுகிறாள். அந்த வகையில் முதல் மாதத்தில் கர்ப்பதினால் ஏற்படும் அறிகுறிகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க…

முதல் மாதத்தில் கர்ப்பத்தின் அறிகுறிகள் எப்படி இருக்கும்:

பொதுவாக ஒரு பெண்ணிற்கு கர்ப்ப காலம் என்பது 10 மாதங்கள். ஆனால் மருத்துவர்கள் வாரக் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். அதுபோல வாரங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் 40 வாரங்கள் வரும். அந்த வகையில் கர்ப்பமானதை எந்த நாட்களிலிருந்து கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் கடைசியாக மாதவிடாய் முடிந்த நாட்களிலிருந்து கணக்கு வைத்து கொள்ளவேண்டும். கர்ப்ப  Pregnancy Test Kit பரிசோதனையில் இரண்டு கோடுகள் தோன்றும் போது கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்கிறார்கள். இருந்தாலும் நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்ய ஆரம்பத்தில் இருந்து பல அறிகுறிகள் உள்ளன.

கர்ப்பம் எத்தனை நாளில் உறுதி செய்யலாம்

30 நாட்கள் கர்ப்ப அறிகுறிகள்:

  • மார்பகங்களில் வலி ஏற்படுதல், கனமாக இருப்பது போன்ற உணர்வு.
  • காலையில் எழுந்தவுடன் குமட்டல் வருவது போன்ற அறிகுறிகள் உண்டாகும். எந்த காரணமும் இல்லாமல் குமட்டல் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
  • எப்பொழுதும் உடல் சோர்வாக இருப்பதை உணர்வீர்கள். இதற்கு காரணம் உடலிலுள்ள எல்லா பாகங்கள் மற்றும் ஹார்மோன்கள் இடைவெளி இல்லாமல் வேலை செய்கிறது.
  • காலையில் எழுந்தவுடன் உங்கள் வயிற்று பகுதியில் மாதவிடாய் காலத்தில் ஏற்பட்ட வலி போன்ற உணர்வு ஏற்படும். இந்த வயிற்று வலிக்கு காரணம் கர்ப்பப்பை விரிவடைவதே.
  • நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி உணர்வு ஏற்பட்டு கொண்டே இருக்கும். வயிறு மந்தமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும்.
கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்
  • நீங்கள் சாப்பிடும் உணவு விரைவாக ஜீரணம் ஆகாது. மலசிக்கல் ஏற்படும் வாய்ப்புண்டு.
  • வழக்கத்துக்கு மாறாக உங்கள் உடல் சூடாக இருப்பதை உணர்வீர்கள்.
  • வாசனைகளை அதிகம் உணர்வீர்கள். வழக்கத்துக்கு மாறாக, சில வாசனைகளை உணர்வீர்கள். சில வாசனைகள் உங்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். உணவு சமைக்கும் வாசனையை விரும்பமாட்டீர்கள்.
  • இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள். இதற்கு காரணம் உங்கள் உடல் வெளிப்படுத்தும் கூடுதல் நீரை வெளியேற்றுவதற்காக சிறுநீர்ப்பை வேலைசெய்கிறது.
  • சிலருக்கு குறைவான ரத்தப்போக்கு ஏற்படும். இதை மாதவிடாய் என்று நினைக்க வேண்டாம்.
  • உணவு பழக்கத்தில் மாற்றம் ஏற்படும். அதாவது, இதுவரை உங்களுக்கு பிடித்த உணவுகள் பிடிக்காமல் போய்விடும். முன்பு நீங்கள் முற்றிலும் வெறுத்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்று நினைப்பீர்கள்.
  • அடிக்கடி அமைதியில்லாமல் இருப்பது, அமைதியை தேடுவது அல்லது எதையாவது நினைத்து வருந்துவது போன்ற மனநிலை மாற்றங்கள் ஏற்படும்.
கரு தங்க என்ன சாப்பிட வேண்டும்

 

குறிப்பு: இதுபோன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஆரம்பத்திலிருந்து தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ள வேண்டும்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil