திராட்சை பழம் நன்மைகள் | Grapes Benefits in Tamil

Advertisement

திராட்சை பயன்கள் | Grapes Uses in Tamil

நாம் உணவுகளை எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தாலும் கூட பழ வகைகளை எடுத்துக்கொள்ளும் போது உடலுக்கு பல சத்தான ஆரோக்கியம் கிடைக்கிறது. அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று இந்த திராட்சை பழம். குறிப்பாக திராட்சை பழத்தில் வைட்டமின் டி, சர்க்கரை, மாவுச்சத்து, ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் அதிகமாக நிறைந்துள்ளது. திராட்சை பழங்களில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என்று பல வகைகள் உள்ளது. வாங்க இந்த பதிவில் திராட்சை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..

ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்

உடல் பலம் பெற:

 திராட்சை பழம் நன்மைகள்

திராட்சை பழத்தில் அதிகமாக வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் மட்டுமல்லாமல் கால்சியம், ரிபோபிளவின், மக்னீசியம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது. இந்த சத்துக்கள் உடலில் எலும்புகள் மற்றும் பற்களுக்கு உறுதி அளிக்கிறது. மேலும் திராட்சை பழம் சாப்பிடுவதால் இரத்தக்காயம் ஏற்படும்போது இரத்தம் வேகமாக குறைவதற்கும் உதவியாக இருக்கிறது.

மலச்சிக்கல் குணமாக:

 grapes benefits in tamil

சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சனையானது அடிக்கடி தொந்தரவு செய்துக்கொண்டே இருக்கும். திராட்சை பழத்தில் அதிகமாக நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளது. உடலில் நீர் வறட்சி குறைந்து காணப்பட்டால் அதனை போக்கும் ஆற்றல் உடையது. ஏனெனில் திராட்சை பழத்தில் நீர்ச்சத்து என்பது அதிகம் உள்ளவை. தினமும் மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் சிறிது திராட்சை பலன்களை எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்

கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி:

 திராட்சை பயன்கள்

நாம் எடுத்துக்கொள்கின்ற சில உணவுகளிலும் மற்றும் எண்ணெய் கலப்படம் செய்த உணவு முறைகளில் அதிகமாக கொலஸ்ட்ரால் நிறைந்துள்ளது. தினமும் திராட்சை பழத்தை அதிகமாக சாப்பிட்டு வருபவர்களுக்கு கொலஸ்ட்ரால் என்று சொல்லக்கூடிய கொழுப்பு உடலில் அதிகம் சேராமல் உடல்நலத்தை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

லிச்சி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

இரத்த அழுத்தம் சீராக:

 grapes uses in tamil

பொட்டாசியம் என்ற சத்தானது அதிகளவு திராட்சைப்பழத்தில் நிறைந்துள்ளது. பொட்டாசியம் சத்தானது உடலில் ஓடும் இரத்தத்தின் இரத்த அழுத்தத்தினை சீரான முறையில் செயல்பட உதவி செய்கிறது. மேலும் இதய சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதையும் குறைத்துவிடுகிறது.

கண் பார்வை அதிகரிக்க:

 திராட்சை பழம் நன்மைகள்

இப்போதெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கக்கூடிய பிரச்சனையில் ஒன்று கண் பார்வை குறைபாடு. கண் பார்வை நன்றாக தெரிய சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். திராட்சை பழம் கண் பகுதியில் இருக்கும் கரு விழிகளின் செல்வளர்ச்சியை அதிகரிக்கும் சக்தி கொண்டதால் கண் பார்வை தெளிவாகும். மேலும் கண்களில் ஏற்படும் கண்புரை, கண் சம்மந்தமான அனைத்து நோய்களையும் சரி செய்கிறது.

ஆப்ரிகாட் பழம் பயன்கள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement