குழந்தைகளுக்கு கிரேப் வாட்டர் கொடுப்பதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள்

gripe water side effects in tamil

Gripe Water Side Effects in Tamil

வணக்கம் ஆரோக்கிய நண்பர்களே..! பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் குழந்தைகளை மிகவும் பொறுப்பாக உடல் ஆரோக்கியத்தில் குறை வராமல் பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் எவ்வளவு பொறுப்பாக பார்த்து கொண்டாலும் பிறந்த குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று வலி, வாந்தி, மலசிக்கல் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி வரும். மேலும் அந்த பிரச்சனைகளுக்காக பொதுவாக மருந்து கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. அத்தகைய மருந்தை குழந்தைகளுக்கு நாம் கொடுப்பதற்கு முன் அதை பற்றி ஓரளவு தெரிந்து இருக்க வேண்டும். பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை கொடுக்கும் Grape Water Side Effects பற்றி இன்றைய பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ தினமும் பால் குடிப்பவர்களுக்கு முக்கியமான தகவல்..! கண்டிப்பா தெரிந்துகொள்ளுங்கள்..!

கிரேப் வாட்டர் பயன்கள்:

கிரேப் வாட்டர் என்பது குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஒரு வகையான நீர் ஆகும். இந்த கிரேப் வாட்டர் சிறிது இனிப்பு மற்றும் சிறிது கார்ப்பு போன்ற சுவையுடன் இருக்கும்.

இந்த கிரேப் வாட்டர் குழந்தைகளுக்கு வயிற்று வலி, வாந்தி, செரிமான கோளாறு போன்ற எல்லவற்றைக்கும் ஒரு சிறந்த பலனை தெரிகிறது.

பிறந்த குழந்தைகள் முதல் 5 வயது குழந்தைகள் வரை அனைவருக்கும் ஒரு நல்ல மருந்தாக பயன்பட்டு விரைவில் நல்ல பயன் அளிக்கிறது.

கிரேப் வாட்டர் தீமைகள்:

எதையும் அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக மாறிவிடும். கிரேப் வாட்டரை அதிகமாக எடுத்து கொண்டால் ஏற்படும் தீமைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கிரேப் வாட்டரில் ப்ரோனோபோல் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் இருப்பதால் அதனை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது உடலில் பிரச்சனைகள் ஏற்படும் என்று குழந்தை நல மருத்துவர் அருண் பாபு திருநாவுக்கரசு தெரிவித்து இருக்கிறார்.

 கிரேப் வாட்டர் தொடர்ந்து குழந்தைகளுக்கு கொடுக்கும் போது உடல் எடை குறைவு மற்றும் பிற்காலத்தில் புற்றுநோய் வருவதற்கு காரணமாகவும் இருக்கிறது.  

கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் இதை அடிக்கடி எடுத்து கொள்வதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

குழந்தை அழுகும் போது கிரேப் வாட்டர் கொடுத்தால் உடனே தூங்கி விடும். அதுமாதிரி குழந்தை அழுகும் போது கிரேப் வாட்டர் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

அதுபோல எந்த குழந்தை நல மருத்துவரும் கிரேப் வாட்டரை குழந்தைகளுக்கு கொடுக்கும் படி ஆலோசனை செய்யவில்லை. ஏனென்றால் அது உடலில் கொஞ்சம் கொஞ்சமாக ஆபத்து விளைவிக்க கூடியதாக இருக்கிறது.

எனவே குழந்தைக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை படி மருந்துகளை கொடுக்க வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்