விக்கலை நிறுத்த பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்…!

 Home Remedies For Hiccups in Tamil

 Home Remedies For Hiccups in Tamil

விக்கல் என்பது அனைவருக்குமே வரும் ஒன்று. இந்த விக்கல் சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்ட பிறகோ வரும். சிலருக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இந்த விக்கல் வந்ததும் நாம் செய்யும் முதல் செயல் தண்ணீர் குடிப்பது. ஆனால் தண்ணீர் குடித்தும் சிலருக்கு விக்கல் நிற்பதில்லை. அப்படி தண்ணீர் குடித்தும் நிற்காத விக்கலுக்கு நம் முன்னோர்கள் சொன்ன வீட்டு வைத்தியம் உள்ளது. சிலருக்கு தொடர்ந்து விக்கல் வந்து கொண்டே இருந்தால் மருத்துவமனைக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் இயற்கையாகவே வீட்டில் இருந்தே விக்கலை போக்க பாட்டி சொன்ன வைத்தியங்களை செய்தால் உடலுக்கு எந்த தீங்கும் இல்லாமல் விக்கலை நிறுத்த முடியும். ஓகே வாருங்கள் விக்கலை நிற்க வைக்கும் அந்த வீட்டு வைத்தியம் என்னவென்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Vikkal Nikka Maruthuvam:

விக்கல் என்றால் என்ன.?

ஜீரண மண்டலத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கான அறிகுறிதான் விக்கல். நம் உடலின் வயிற்று பகுதிக்கும், மார்பு பகுதிக்கும் இடையில்  உதரவிதானம் எனப்படும் தடுப்பு சுவர் ஒன்று உள்ளது. நாம் சுவாசிக்கும் போது ஆக்சிஜன் நுரையீரலுக்கு செல்வதற்கு தடுப்பு சுவர் ஆனது, மேலும் கீழுமாக இயங்குகிறது.

சில நேரங்களில் தடுப்பு சுவர் இயங்கி கொண்டிருக்கும் போது, நமது குரல்வளையானது மூடி கொண்டிருந்தால் விக்கல் ஏற்படுகிறது.

ஒருவருக்கு கொட்டாவி வந்தால் நமக்கும் கொட்டாவி வருவதற்கான காரணம் என்ன தெரியுமா..?

 

விக்கல் ஏற்பட காரணங்கள்:

 தொடர் விக்கல் நிற்க

ஒரு சிலர் நீண்ட நேரம் பசியுடன் இருந்து விட்டு பிறகு அவசரமாக அதிகமான உணவுகளை சாப்பிடும் போது விக்கல் ஏற்படுகிறது.

இன்னும் ஒரு சிலருக்கு வயிறு நிறைய சாப்பிடுவதாலும், வயிறு நிறைய தண்ணீர் குடிப்பதினாலும் விக்கல் ஏற்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்கும் போதும் விக்கல் ஏற்படுகிறது. மேலும், மன அழுத்தம் இருந்தால் கூட விக்கல் வருகிறது.

12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம்

தண்ணீர் குடித்தும் விக்கல் நிற்கவில்லை:

 விக்கல் நிற்க என்ன செய்யணும்

சாதாரண விக்கல் ஏற்பட்டால் தண்ணீர் குடித்ததும் 2 நிமிடங்களிலே நின்று விடும். ஆனால் அந்த விக்கல் நிக்காமல் 2 நாட்கள் வரை நீடித்தால் உடம்பில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

அப்படி விக்கல் நிக்காமல் இருப்பது காசநோய், நுரையீரல் பாதிப்பு, நரம்பு பாதிப்பு, கேன்சர் போன்ற நோய்களுக்கான அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே தொடர்ந்து விக்கல் வந்தால் மருத்துவரை நாடுவது நல்லது.

ஏன் தூக்கத்தில் சிலர் மட்டும் குறட்டை விடுகிறார்கள் தெரியுமா..?

 

விக்கல் நிற்க பாட்டி சொன்ன வைத்தியம்:

 விக்கல் நிற்க பாட்டி வைத்தியம்

 தண்ணீர் குடித்தும் விக்கல் நிற்கவில்லை என்றால் 1 ஸ்பூன் அளவிற்கு சர்க்கரையை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று முழுங்க வேண்டும். முழுங்கிய பிறகு ஒரு பெரிய டம்ளர் அளவிற்கு தண்ணீர் குடித்தால் விக்கல் நின்று விடும் என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். 

கை குழந்தைகளுக்கு விக்கல் ஏற்பட்டால் ஒரு சிறு துரும்பினை எடுத்து உச்சந்தலையில் வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். எதற்காக அப்படி சொல்கிறார்கள் என்றால், இளம் குழந்தைகளின் தலை மிகவும் மென்மையானது எனவே அந்த பகுதியில் துரும்பு வைப்பதன் மூலம் விக்கல் நின்று விடும் என்பது ஐதீகம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil