சுடு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் | Hot Water Drinking Benefits in Tamil
Drinking Hot Water Benefits in Tamil / வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் வெந்நீர் குடிப்பதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுவோம். நாம் தினமும் குறைந்தது 3 லிட்டர் அளவு நீரானது பருக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உணவு சாப்பிட்ட பிறகு 1 டம்ளர் அளவிற்கு வெந்நீர் அருந்துவது மிகவும் நல்லது. சிலர் வெந்நீர் குடிப்பதை எப்போதும் வழக்கமாக வைத்திருப்பார்கள். சிலர் காய்ச்சல் நேரத்திலும், மழை காலத்திலும் மட்டுமே வெந்நீர் அருந்துவார்கள். சரி வெந்நீர் அருந்துவதால் என்னென்ன நன்மைகள் (hot water benefits in tamil) உள்ளன என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!
மண் பானை தண்ணீர் பயன்கள் |
செரிமான கோளாறு நீங்க:
வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்: பலமான உணவு சாப்பிட பிறகு சிலருக்கு செரிமான கோளாறு பிரச்சனை ஏற்படும். சாப்பிட உணவானது செரிக்காமல் அவதிப்படுபவர்கள் உணவு உண்டபின் 1 டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் சாப்பிட்ட உணவானது எளிதில் ஜீரணம் ஆகிவிடும். செரிமான பகுதியானது சீராக இருந்தால் தான் நன்றாக பசி எடுக்கும்.
மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்க்க:
hot water benefits in tamil: மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் இரண்டு டம்ளர் அளவு வெந்நீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து முற்றிலும் தப்பிக்கலாம்.
ஏன் தினமும் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்க வேண்டும் என்று தெரியுமா..? |
உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற:
drinking hot water benefits in tamil: சூடாக எந்த ஒரு பொருளையும் சாப்பிடும் போதோ, குடிக்கும் போதோ வியர்வையானது அதிகமாக வெளியேறும். வெந்நீர் அருந்திய பிறகு வெளியேறும் வியர்வையில் தேவையில்லாத நீர், உப்பு சேர்ந்து வெளியேறுவதால் உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக்கள் வெளியேறுகின்றன. மேலும் உடலில் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் நிலையானது சீராக இருக்கும்.
உடல் சுறுசுறுப்பாக இருக்க:
benefits of hot water in tamil: உடல் எப்போதும் சோர்வு இல்லாமல் இருக்க தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டம்ளர் வெந்நீர் அருந்தி வந்தால் நாள் முழுவதும் உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். மேலும் உணவு சாப்பிடுவதற்கு முன் அரை மணி நேரத்தில் ஒரு டம்ளர் நீரும், உணவு சாப்பிட பிறகு 1 டம்ளர் வெந்நீர் குடிப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும்.
கடுக்காய் பொடி தயாரிப்பது எப்படி? |
பித்த வெடிப்பு குணமாக:
hot water drinking benefits in tamil: சிலருக்கு பித்த வெடிப்பினால் எரிச்சல் உண்டாகி நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள். பித்த வெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதத்தினை வைத்து எடுத்த பிறகு பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் வைத்து வெடிப்பில் தேய்த்தால் நாளடைவில் பித்த வெடிப்பு பிரச்சனை முற்றிலும் சரியாகிவிடும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |