ஹீமோகுளோபின் குறைவு, இரத்த சோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஆகிய மூன்று பிரச்சனைக்கும் இந்த ஒரு பதிவு போதும்..!

how to increase hemoglobin level quickly in tamil

Hemoglobin Increase Food in Tamil

உங்களுடைய உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவு, இரத்த சோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஆகிய பிரச்சனைகள் இருந்தால் இந்த ஒரு பதிவு போதும் உங்களுக்கு. இனி நீங்கள் இந்த பிரச்சனைகளுக்காக மருத்துவ மனைக்கு செல்ல வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்களுடைய உடலில் இரத்த சோகையை போக்கி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்து ஆரோக்கியமாக வாழலாம். மேலும் இதற்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எந்த மாதிரி உணவுகளை எப்படி சாப்பிட வேண்டும் என்பது பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ கல்லீரல் மற்றும் இரத்த நாளங்கள் சுத்தம் செய்ய இந்த ஜூஸ் மட்டும் குடியுங்கள்..!

ஹீமோகுளோபின் அதிகரிக்க:

உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கவும், இரும்புச்சத்து அதிகரிக்கவும் மற்றும் இரத்த சோகை குணமாகுவதற்கும் என்னென்ன உணவுகள் எந்த முறையில் சாப்பிட வேண்டும் என்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நெல்லிக்காய்:

ஹீமோகுளோபின் அதிகரிக்க

முதலில் 6 நெல்லிக்காயை சுத்தமான தண்ணீரில் அலசி அதன் பிறகு நெல்லிகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். இப்போது நறுக்கிய நெல்லிக்காயை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேன் சேர்த்து நன்றாக 10 நாட்கள் ஊற வைத்து விடுங்கள்.

10 நாட்கள் கழித்த இதனை தினமும் 1 ஸ்பூன் எடுத்து சாப்பிடுங்கள். இது மாதிரி நாம் சாப்பிட்டால் உடலின் இரத்தம் மற்றும் இரும்புச்சத்து அதிகரிக்கும்.

ஆரஞ்சு பழம்:

உடலில் இரும்புச் சத்து அதிகரிக்க

இரும்புச்சத்து அதிகரிக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் உணவில் கீரை வகைகளை சேர்த்து கொள்வீர்கள். அப்படி நீங்கள் கீரையினை சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பு 1 ஆரஞ்சு பழமோ அல்லது 1 டம்ளர் ஆரஞ்சு ஜூஸோ குடிக்க வேண்டும்.

ஏனென்றால் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் C இருக்கிறது. அதனால் ஆரஞ்சு பழம் சாப்பிட்ட பிறகு கீரையை சாப்பிட்டால் உடலில் வேகமாக இரும்புச்சத்து அதிகரிக்கும் மற்றும் இரத்த சோகை விரைவில் குணமடைந்து விடும்.  

அத்திப்பழம்:

hemoglobin athikarikka enna seivathu

குறைந்த அளவு ஹீமோகுளோபின் உள்ளவர்கள் அத்திப்பழத்தை எடுத்துக்கொண்டு அதனை சிறு சிறு துண்டாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் தேன் சேர்த்து இரவு ஊற வைத்து விட்டு.

காலையில் எழுந்து இதனை 1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும் மிகவும் வேகமாக ஹீமோகுளோபின் அதிகரிக்கும். 

திரிபலா பொடி:

இரத்த சோகை

இரத்த சோகை உள்ளவர்கள் திரிபலா பொடி 1 ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனை 1 டம்ளர் சுடு தண்ணீரில் கலந்து சிறிது நிறம் கழித்து இரவு சாப்பிட்ட பிறகு தூங்க செல்வதற்க்கு முன்பு குடித்தால் இரத்த சோகை கொஞ்சம் கொஞ்சமாக சரி ஆகிவிடும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil