How to Reduce Body Heat Naturally in Tamil
வெயில் காலம் வந்தாலே போதும் அனைவருக்கும் உடலில் பல பிரச்சனைகள் வந்துவிடுகிறது. சிலருக்கு சாதாரணமாக உடம்பில் சூடு அதிகமாக இருக்கும். அதிலும் இந்த வெயில் காலத்தில் அதிகமான உடல் சூடு ஏற்பட்டு அவதிப்படுவார்கள். இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாக கூடும். இதனை தடுக்க நாம் AC பயன்படுத்துவது, அதிகமாக தண்ணீர் குடிப்பது, குளிர்பானங்கள் அருந்துவது போன்ற பலவற்றை பின்பற்றுவோம். ஆனால் அவற்றை தவிர பிற வழிகளும் உள்ளன. இவற்றை செய்தால் வெகு விரைவில் வெயில்காலத்தில் ஏற்படும் சூட்டினை குறைத்து உடலை ஆரோக்கியமானதாக வைத்திருக்கலாம். ஓகே வாருங்கள் எப்படியெல்லாம் நமது உடம்பை சூடு இல்லாமல் ஆரோக்கியமாக வைப்பது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
How to Reduce Summer Heat at Home in Tamil:
தேங்காய் தண்ணீர்:
தேங்காய் தண்ணீர் குடிப்பதனால் உடல் புத்துணர்ச்சி பெரும். இது நம் உடலில் உள்ள சூட்டினை குறைத்து உடலை புத்துணர்ச்சி படுத்துகிறது. தேங்காய் நீரில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.
இதையும் படியுங்கள் ⇒ வெயில் காலத்தில் வீட்டை இப்படி மாத்துங்க.! ஏசியே வேண்டாம் வீடு சும்மா குளுகுளுன்னு இருக்கும்..
காலுக்கு குளிர்ந்த நீர்:
குளிர்ந்த நீரில் உங்கள் கால்களை வைப்பதனால் உடல் சூடு குறைகிறது. ஒரு வாளியில் குளிர்ந்த நீர் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து அதில் நமது இரண்டு கால்களையும் 20 நிமிடம் தண்ணீரில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உடல் சூடு குறையும்.
மிளகுக்கீரை:
மிளகுக்கீரை குளிர்ச்சியானவை என்று எல்லோருக்கும் தெரியும். நீங்கள் சூடாகவோ அல்லது குளிர்ந்த மிளகுக்கீரை தேநீர் செய்து வெயில் காலத்தில் பருகினால் உடல் குளிர்ச்சி பெரும். குளிர்ந்த தேநீரை விட சூடான தேநீர் அருந்துவதே நல்லது. ஏனென்றால் சூடாக அருந்தும்போது நம் உடலில் வியர்வை ஏற்பட்டு உடல் குளிச்சியாக மாறும்.
நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகள்:
வெயில் காலத்தில் அதிக நீர்ச்சத்து உள்ள உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும். தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி, வெள்ளரி, காலிஃபிளவர் மற்றும் பாகற்காய் போன்றவற்றை வெயில் காலத்தில் அதிகமாக சாப்பிட வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு கண்டிப்பாக இந்த 5 உணவுகளை மறந்தும் கொடுத்து விடாதீர்கள்..!
கற்றாழை:
கற்றாழை ஜெல்லினை உடலில் தேய்த்து குளித்தால் உடல் சூடு நீங்கி குளிர்ச்சி பெரும். மேலும் இதனை உட்புறமாகவும் உட்கொள்ளலாம். அதாவது 1 டம்ளர் குளிர்ந்த நீரில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து குடித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
மோர்:
மோர் குடிப்பது இந்த வெயில் காலத்திற்கு மிகவும் நல்லது. மோரில் ப்ரோபயாட்டிக்குகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது நம் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு உடலின் வெப்பநிலையை குறைந்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.
வெந்தயம்:
1 டம்ளர் வெந்தய தேநீர் குடிப்பதனால் நம் உடலில் உள்ள வியர்வை வெளியேறுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த தேநீரை சூடாக அருந்த விருப்பமில்லாதவர்கள் இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்வித்து பிறகு அருந்தலாம்.
மிளகாய்:
மிளகாய் கலந்த உணவுகளை உட்கொள்வதனால் உடல் சூடு குறையும். ஏனென்றால் மிளகாயில் உள்ள கேப்சைசின் உடல் வெப்பமாக இருப்பதை மூளைக்கு உணர்த்த செய்திகளை அனுப்புகிறது. இது இயல்பை விட அதிகமான வியர்வையை ஏற்படுத்தி உடலை குளிர்ச்சியாக்குகிறது.
அதற்கேற்ப உடை அணிய வேண்டும்:
வெயிலில் செல்லும் போது சன்கிளாஸ், தொப்பி, குடைகள் போன்றவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
பருத்தி, கைத்தறி மற்றும் பட்டு போன்ற இயற்கை துணிகளையும் லேசான நிறமுடைய ஆடைகளையும் அணிய வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips In Tamil |